ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது, மஹாபாரதம்

கிருஷ்ணனின் (மரணம்) இறப்பு!

விஸ்வாமித்ர முனிவர், கன்வா மற்றும் நாரதர் ஆகிய மூவரும் ஒரு முறை துவாரகைக்கு வருகை தந்தார்கள். அப்போது சில இளைஞர்கள் ஒரு பையனுக்கு பெண் வேடமிட்டு இருந்தனர். ரிஷிகளிடம் சென்ற அவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவளுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனவும் கேட்டனர்.

அந்த இளைஞர்களின் கேலி நாடகத்தை அந்த ரிஷிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு பிறக்க போவது எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குலத்தையே அழித்து விடும் என சபித்தனர். கர்ப்பிணி பெண் தோற்றத்தை பெற வேண்டி, அந்த சிறுவன் தன் வயிற்றில் ஒரு இரும்புத் துண்டை மறைத்து வைத்திருந்தான். இதை கேள்விப்பட்ட பலராமன் அந்த இரும்பு துண்டை பொடியாக்கினான். அதனை சமுத்திரத்தில் தூக்கி எரியவும் செய்தான். மிஞ்சியிருந்த ஒரு சிறு இரும்புத் துண்டையும் தூக்கி எறிந்தான்.

போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து, வ்ரிஷ்னிகள் அனைவரும் சுற்றுலா சென்றனர். அனைவரும் மதுபானம் பருகினர். பாரத போரில் எதிர் எதிரணிகளில் இருந்த க்ரிதவர்மா மற்றும் சத்தியாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வெகு விரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர்.

கிருஷ்ணரின் மகனான சத்யாகி மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர். கிருஷ்ணர், பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது. கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள். தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித்தான். மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான். விஷ்ணு பகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக அவன் கருதப்பட்டான்.

மனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார். அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது.

அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் யோகா மெல்லாம் தன் உடலை பிரிந்தார். அவருடைய கடைசி காரியத்திற்கு தங்களின் கணவன்களின் உடலோடு அவர்களும் கலந்து கொண்டனர்

அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகையை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.

பாண்டவர்களும் வருத்தத்தில் மூழ்கினர். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விடூரா ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விடூரா தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.

ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை..

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்,  அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

அர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!

Uncategorized

கூத்தாண்டவர் – கூவாகம் – அரவான்

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.


தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.


தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான நிழல்-பொம்மலாட்ட (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.