அழகு குறிப்புகள், கட்டுரைகள், செய்தி - News, தமிழ் மொழி, மருத்துவம் - Medical

மஞ்சளை உணவில்…

மஞ்சள்மஞ்சள் ஓர் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள மருத்துவ உணவுப் பொருளாகும். பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் மஞ்சளை நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவில்பல புற்றுநோய் ( #Cancer ) வகைகள்இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்றுநோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர் த்துக் கொள்வதால்தான். விரலி மஞ்சளிலிருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலி பீனால்கள் புற்றுநோய்செல்களின் வளர்ச்சியை குறைப்பதிலும், நோய் வராமல் தடு ப்பதிலும் பெரும்பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில், என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் அடிப்படை ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

உணவில் மஞ்சள் சேர்த்து கொள்ளுவது நினைவாற்றலை 30 சதவீதம் வரை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மஞ்சளில் காணப்படும் கர்க்யூமின் (curcumin) எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற தடுப்பான் (Anti Oxidant) மூளைக்கு ஊட்டமளிப்பதே இதற்கு காரணம்.

மஞ்சளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு குடலுக்குத் தேவையான நன்மை பொருட்கள் அடங்கியுள்ளது.இதில் ஆன்ட்டிசெப்டிக் எனும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது அது உடலுக்கு வலிமையை உண்டாக்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. வெந்தயம் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியும். தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் மற்றும் உடல் சூடு குறையும் ஆகையால் உடல் பலம் பெறும் தினமும் உணவில் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது நரம்புத் தளர்ச்சியை போக்க உதவுகிறது.

முட்டை பொரியல், டோஃபுபோன்ற உணவுகளில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது உணவில் வண்ணம் சேர மட்டுமின்றி, ருசி மற்றும் ஆரோக்கியமும் அளிக்கிறது.

வறுத்து சமைக்கும் காய்கறி உணவுகளில் லேசாக மஞ்சளை தூவி சமைத்து சாப்பிடலாம். இத்துடன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் வேர் காய்கறிகள் இதை நீங்கள் பின்பற்றலாம்.

காலே, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும் போது லேசாக அதன் மேல மஞ்சள் சேர்த்து உண்ணலாம். மேலும், சைவம் மற்றும் அசைவ சூப்களில் கூட மஞ்சள் சேர்ப்பது நல்லது.

சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு பிரச்சனை உள்ளவர்கள் பால்/தேநீர் பருகும் போது அதில் சற்று மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.

அசைவ பிரியர்கள் சில்லி, கபாப், பர்கர் போன்ற உணவுகளில் மஞ்சள் சேர்ப்பது ஆரோக்கியத்தை தாண்டி, ருசியையும் அதிகரிக்க உதவும். மேலும், நீங்கள் இஞ்சி சேர்க்கும் அனைத்து உணவுகளிலும் மஞ்சளை சேர்க்கலாம்.

மருத்துவ நற்குணங்கள் கொண்டுள்ள மஞ்சளை, இஞ்சி மட்டுமின்றி, பூண்டு, வெங்காயம் சேர்க்கும் உணவுகளிலும் சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

செய்தி - News, பொது, Tech

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mark-Zuckerberg.jpgபேஸ்புக், கடந்த 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் கடும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க் சூகர்பெர்க்கை நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர். வரும் 2019- மே மாதம் நடைபெறும் பேஸ்புக்கின் ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது. இந்த முன்மொழிவில், பேஸ்புக்கின் சேர்மன் பதவி, தன்னிச்சையான பதவியாக இருக்க வேண்டும் என்ற ஷரத்து இடம் பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்க் சூகர்பெர்க்கு எதிராக முன்மொழிவு கொண்டு வரப்படுள்ளது குறித்து, பேஸ்புக் நிறுவனம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. Continue reading “பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.”