ஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், புராணம், பொது

புதாஷ்டமி விரதம்

தேவலோக பெண்களால் கூறப்பட்ட விரதம் புதாஷ்டமி விரதம். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியாவது புதன் கிழமை அன்று வந்தால் அந்த நாள் புதாஷ்டமி எனப்படும்.

கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்தான் காணாமல் போன காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.கவுசிகனுடைய பெற்றொர் நரகத்தில் அவதிப்பட்டு கிடந்தார்கள் விரதத்தின் பலனால் அவனுடைய பெற்றொர் நரக வேதனையிலிருந்து விடுபட்டார்கள்.

புதாஷ்டமி விரதமிருந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம் நன் மக்கள் பேறு உண்டாகும் மரணத்துக்குப் பின் பேபுதாஷ்டமிரின்ப வாழ்வு நிச்சயம்

கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போனது. காணாமல் போன எருதினைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். கவுசிகன் தனியாகச் செல்லாமல் தனது சகோதரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.இருவரும் சேர்ந்து பல நாட்கள் எருதினைத் தேடினார்கள். இருவரும் அன்ன ஆகாரம் ஏதும் இன்றி இருந்தார்கள். பசி இருவரையும் வாட்டியது.இறுதியில் ஒரு குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்ரீடை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களிடம் சென்று தங்கள் இருவருக்கும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள்.அப்போது தேவலோகப் பெண்கள் விரதம் ஒன்றைப் பற்றிச் சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும், காணாமல் போன உங்களுடைய எருதும் கிடைக்கும் என்று கூறினார்கள்.இவ்வாறு தேவலோகப் பெண்களால் கூறப்பட்ட விரதமே “புதாஷ்டமி விரதம்”. அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியானது – புதன்கிழமை அன்று வந்தால் அந்த அஷ்டமி”புதாஷ்டமி” என்றழைக்கப்படும்.அதன்படி இன்று வளர்பிறை அஷ்டமி மற்றும் புதன்கிழமை – இன்றைய தினம் புதாஷ்டமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்றைய தினத்தில் எட்டு விதமான அக்னி வழிபாடுகளுடன் அஷ்ட லட்சுமிகளையும் வழிபட வேண்டும்.எட்டு வழிபாடுகள் :-

1. விளக்கேற்றுதல்

2. ஹோமம்

3. அக்னிப் பூர்வமாகத் தயாராகும் அன்னத்தைத் தானமளித்தல்

4. ஊதுவத்தி தீபம்5. கற்பூரத் தீபம்

6. சாம்பிராணித் தீபம்

7. பல வகையான தீபங்கள் (உலோகம், மண், எலுமிச்சை தீபம் – இவைகளை கோவிலில் இறைவனின் சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்). வீட்டில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றலாம்.

8. ஓடும் நதிகளில் மிதக்கும் இலைமடக்கு ஜல தீப பூஜை (நதிகளில் இலைகளின் மேல் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்).இவ்வாறு எட்டு வழிபாடுகள் செய்யமுடிந்தவர்கள் செய்யலாம். அல்லது வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து, கோவில் சென்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத்தரும் அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

சகல சௌபாக்யங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமிக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன.

புதன் கிரகத்திற்கு உரித்தான எண் “ஐந்து”. இதில் அஷ்டமியும் சேர்வதால் இன்னும் கூடுதலான கால சக்திகள் – வித்யா சக்திகளுடன் சேர்ந்து பல நற்பலன்களை வாரி வழங்குகின்றன.இன்றைய தினம் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்து, திருத்தலம் சென்று, கால பைரவரையும் வழிபட்டு, விரதம் இருந்தால் மகத்தான – வளம் நிறைந்த வாழ்வு அமையும்.

ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.

Uncategorized

புரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்?

பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்.’மனிதனுக்குச் சிறந்த உணவு சைவ உணவா, அசைவ உணவா என்னும் சர்ச்சை காலங்காலமாகவே இருந்து வருகிறது. ஆதி மனிதன் பழங்கள், கிழங்குகள், காய்களைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்;. நெருப்பின் பயனை அறிந்த பின்னர்தான்  மாமிச உணவை உண்பவனாகவும் மாறினான் என்று சொல்வார்கள். அவரவருக்கு உரிய உணவுப்பழக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதெல்லாம், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதுபோல் ,வருடத்தில்  ஒரு மாதம்  மாமிச உணவிலிருந்து வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வந்திருக்கலாம்.

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். 

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்` என்பர்; “பட்சம்` என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. 

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 

புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். 

மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.


நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். 

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. 

பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். 

மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். 

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். 

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார். 

புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்…

ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

சஷ்டி-லலிதா விரதம் –  புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.