ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை..

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்,  அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

அர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!

Advertisements
கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, பொது, Moral Story

முல்லா நஸ்ருதீன் கதை

முல்லா நஸ்ருதீன் கதை. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.

mullaதுண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

அந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் – என எழுதி இருந்தது..!

உடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது?

ஆன்மீகம் - spiritual, கதை - Story, Moral Story

கடவுள் – மனிதன்

முதல் நாளன்று, கடவுள் பசுயைப் படைத்தார். பசுவைப் பார்த்து, “இன்று நான் உன்னைப் படைத்தேன், ஒரு மாடு, நாள் முழுவதும் விவசாயிடம் சென்று நீ சூரியனுக்குக் கீழே வேலை செய்வாய்! 50 வருடங்கள் நான் வாழ்நாள் முழுவதும் உனக்குக் கொடுப்பேன். “

Manvsgod

“பத்து ஆண்டுகளுக்கு நான் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே, இது 20 வருடங்களாக இருக்கட்டும், மற்றும் 30 ஆண்டுகள் நான் உங்களுக்குத் திருப்பி தருவேன்” என்று பசு எதிர்த்தது. கடவுள் ஒப்புக்கொண்டார்.

இரண்டாவது நாளில், கடவுள் நாய் படைத்தார். தேவன் நாய் சொன்னார், “நீ செய்ய வேண்டியது உன் வீட்டின் கதவுகளால் தினமும் உட்காருவது, உள்ளே வருகிற எவனும் நீ அவர்களைக் குடையாமல் இருப்பாய்! 20 வருட காலத்திற்கு நான் வாழ்நாள் கொடுப்பேன்.”

நாய் எதிர்ப்பட்டது, “என்ன? கதவைத் தாழ்த்திக் கொண்ட நாள் முழுவதும்? இல்லை, 10 வருட வாழ்க்கையை நான் மீண்டும் தருகிறேன்!” கடவுள் ஒப்புக்கொண்டார்.

மூன்றாவது நாளில், கடவுள் குரங்கு உருவாக்கப்பட்டது. அவர் குரங்குக்குச் சொன்னார், “குரங்குகள் மக்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களை சிரிக்க வைப்பதற்கும், குரங்கு தந்திரங்களை செய்வதற்கும் நான் 20 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கிறேன்.”

குரங்கு எதிர்த்தது. “என்ன? அவர்கள் சிரிக்க வைக்க? குரங்கு முகம் மற்றும் தந்திரங்களை செய்ய? பத்து ஆண்டுகள் செய்யும், மற்றும் மற்ற 10 ஆண்டுகள் நான் உன்னை கொடுக்கிறேன்.” கடவுள் ஒப்புக்கொண்டார்.

நான்காவது நாளில் தேவன் மனிதனைப் படைத்து, “உன் வேலை, தூங்குவதும் சாப்பிடுவதும், விளையாடுவதும் உன் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதும், நீ அனுபவிப்பது, ஒன்றும் செய்யாதே, , நான் உனக்கு ஒரு 20 ஆண்டு காலம் வாழ்கிறேன். “

அந்த மனிதன் எதிர்த்தான். “என்ன? நல்ல வாழ்க்கை! சாப்பிடு, விளையாட, தூங்க, ஒன்றும் செய்யாதே, சிறந்ததை அனுபவியுங்கள், 20 வருடங்களாக நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? இல்லை, மனிதன்! …. ஏன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை? மாடு 30 ஆண்டுகளுக்குக் கொடுத்தது, நாய் உனக்கு 10 வருடம் கொடுத்தது, குரங்கு 10 வருடங்கள் உன்னைத் திரும்பக் கொடுத்தது, நான் அவர்களை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்! இது என் வாழ்க்கையை 70 ஆண்டுகள் நீடிக்கும், சரியானதா? ” கடவுள் ஒப்புக்கொண்டார்.

மற்றும் அது ஏன் … நமது முதல் 20 ஆண்டுகளில், நாம் சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், விளையாடுகிறோம், மிகச் சிறப்பாக அனுபவிக்கிறோம், அதிகம் செய்யவில்லை. அடுத்த 30 வருடங்களுக்கு, நாங்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறோம், பாதிக்கப்படுகிறோம், குடும்பத்தை ஆதரிப்போம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, குரங்கு முகங்கள் மற்றும் குரங்கு தந்திரங்களை உருவாக்குவதன் மூலம் நம் பேரக்குழந்தைகளை நாம் மகிழ்விக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, நாங்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம், மக்கள் முன் கதவு மற்றும் பட்டைகளால் அமர்ந்துள்ளோம்!