ஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது

திரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?

“மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.

திரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திரு­மணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்­குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.

ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.

ஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது

திரௌபதி – மகாபாரதம்

மகாபாரதம், இந்தியா முழுக்க சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் இதிகாசம். எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் காவியம். நம் கதைகள் பலவும் மகாபாரதத்திரௌபதிதிலிருந்தே கிளைக்கின்றன. மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.

துரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான். இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி. இந்த தியாக அக்னியில் இருந்து தன் அண்ணனான த்ரிஷ்டத்யும்னா வந்த பிறகு திரௌபதி தோன்றினாள்.

துரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான். இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி. இந்த தியாக அக்னியில் இருந்து தன் அண்ணனான த்ரிஷ்டத்யும்னா வந்த பிறகு திரௌபதி தோன்றினாள்.

சுயம்வரத்தில் பாண்டவர்கள் ஐவரும் பங்கேற்றனர். சுயம்வரத்தில் தன் மகளை மணக்க துருபதன் ஒரு போட்டி வைத்திருந்தான். சுழலும் சக்கரத்தின் நடுவில் உயரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நீரில் அதன் பிரதிமையை நோக்கியபடியே மேலே சுற்றும் மீனைக் குறி பார்த்து அம்பினால் எய்தி வீழ்த்த வேண்டும் என்பதே அந்த சுயம்வர விதி. வில்வித்தையில் விற்பன்னனான அர்ஜுனன் இதை மிக எளிதாகச் செய்துமுடித்து சுயம்வரத்தில் வென்றான். அர்ஜுனின் இந்த வெற்றிக்குப் பிறகு, தனது சகோதரர்களுடன் சேர்ந்து தம் தாயார் குந்தியிடம் திரௌபதியை அழைத்துச் சென்றான். குந்தி அந்தச் சமயம் சில வேலைகளில் மூழ்கியிருந்ததால், மைந்தர்கள் எதனைக் கொண்டு வந்தார்கள் என்பதை அறியாமல், ’நீங்கள் என்ன கொண்டு வந்திருந்தாலும் ஐந்து பேரும் பகிருந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் குந்திதேவி. இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அர்ஜுனன் தனது தாயின் முடிவை ஏற்க ஒப்புக் கொள்ளவே, திரௌபதி பாண்டவர்களை மணந்தாள்.
திரௌபதிக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பாண்டவர் என்ற வீதத்தில் ஐந்து மகன்களை கொண்டிருந்தாள். யுதிஷ்டிராவுக்கு பிறந்தவன் பிரதிவிந்த்யா, பீமனுக்கு பிறந்தவன் சுடசோமா, அர்ஜுனனுக்கு பிறந்தவன் ஸ்ருடகர்மா, நகுலனுக்கு பிறந்தவன் சடானிகா, மற்றும் சகாதேவனுக்கு பிறந்தவன் ஸ்ருடசேனா.

அரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்!

திரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.

சிவபெருமானைக் கண்டு முக்தியடைந்த திரௌபதியை பலர் குலதெய்வமாகப் போற்றி வணங்குகிறார்கள். பலருக்குக் காவல் தெய்வமாகவும் இருக்கிறாள்.

ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, பொது

மகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்

அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன். ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.

ma.jpg
குந்தி: பஞ்ச பாண்டவர்களின் தாயார் அவார். இவர் பாண்டுவின் முதல் மனைவியாவார். மேலும் கிருஷ்ணனின் தந்தையாகியவாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிரீதா என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.
சாந்தனு: மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் (பீஷ்மர்) எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான சித்ராங்கதன் எனும் மகனும், பாண்டவரின் முதாதையானவிசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.

பீஷ்மர்: மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் மூத்த மகனாகப்பிறந்தார். சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷமர் அரசியலை தேவர்களின் குருவானபிரகஸ்பதியிடம் இருந்தும் வேதங்களை வசிஷ்டரிடம் இருந்தும் வில்வித்தையைபரசுராமரிடம்இருந்தும் கற்றுக்கொண்டார்.

தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, பிரமச்சாரியாக வாழ்ந்தது மட்டுமன்றி, அரசாட்சியையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் – தான் விரும்பும் போதே மரணம் என்ற வரமாகும். போரின் போது சிகண்டி என்பானை முன்னிறுத்தி பாண்டவ சேனை சண்டையிட, பீஷ்மரோ அவன் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகது என்று தன்னுடலில் அம்பு தாக்கவும் திரும்பத்தாக்காமல் இருந்தார். ஆயினும் தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல், தன் உயிரை நீக்க விரும்பிய போதே உயிர்நீத்தார்.

சகுனி: கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் கொல்லப் பட்டார்.

மாதுரி: மாதுரா அரசின் இளவரசியும் பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். பாண்டு அத்தினாபுரம் செல்லும் வழியில் மாத்ரா அரசின் சாலியன் என்னும் அரசனைச் சந்தித்தான். பின்னர் இருவரும் நண்பர்கள் ஆயினர். பின்னர் சாலியன்மாதுரியைப் பாண்டுவுக்குக் மணமுடித்து வைத்தான்.

நகுலன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் குதிரைகளையும் பசுக்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
தருமன்: பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின்வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர். இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர். தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார். அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள். அதை இப்போது தனபதியிடம் தெரிவித்தாள். அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]

வீமன் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன்கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன் இவரது பேரன்.

அர்ஜூனன்: பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர், மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.

சகாதேவன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர். பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார். இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார். இவரது மச்சினனின் பெயரும் சகாதேவன் ஆகும்.

வசிட்டர்: (வசிஷ்டர்) மாமுனிவர் (மகரிசி, மகா இருடி) ஏழு புகழ்பெற்ற இருடிகளுள் (ரிசிகளுள்) ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இத்வே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்ஃகிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி.தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.

பரசுராமர்: என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.

விதுரன்: அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் அவர்களுக்கு அமைச்சராக இருந்தார்.

அம்பிகா: காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார். இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பலிகா ஆகியோரும் தங்களுடைய  சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார்.

விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது மற்றொரு மகனான வியாசரிடம் அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்பொது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்ததிருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.

இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.

துச்சலை: துரியோதனின் சகோதரி. இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதாஎன்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.

திரௌபதி: பஞ்ச பாண்டவர்களின் மனைவி. சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் சொந்தமானார். இதன் போது கௌரவர்கள் திரெளபதியை சபையிலே துகிலுரிந்து அவமானப்படுத்த நினைத்தபோதும் அது கிருஷ்ணரின் உதவியால் கைகூடாமல் போனது.

இடும்பி: இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன்.

பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகியான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.

கடோற்கஜன்: இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.

அகிலாவதி: ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள்.அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன்மணம் புரிந்தான்.

அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.

துரியோதனன்: கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன்உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.

துச்சாதனன்:. இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியானகாந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.

அபிமன்யு: அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார். அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.

குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று போர் புரிந்த அபிமன்யு அதில் உயிரிழந்தான்.
அரவான், இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன்.  அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்”என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

கர்ணன்: பண்டைய இந்தியாவிலிருந்து இருக்கும் மகாபாரதம் இதிகாசத்தில் மையக் கதாப்பாத்திரங்களில் ஒருவர். அவர் அங்கா நாட்டின் அரசராக இருந்தார் (இன்று அது பாகல்பூர் ஆகும்). கர்ணன், கிருஷ்ணா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட நிபுணர்களால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார் என்பதை மகரிஷி வேத் வைஸ்யாவின் உரையில் விளங்குகின்றது. அவர் சூர்யா (சூரியக் கடவுள்) மற்றும் குந்திதேவி ஆகியோரின் மகனாவார். அவர் குந்தி தேவிக்கு மகனாக, அவருக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நடைபெறும் முன்னரே பிறந்தார். அவர் துரியோதனனின் மிக நெருங்கிய நண்பராக விவரிக்கப்படுகின்றார்.
கர்ணன் அவருக்குப் பதிலாக பாண்டவாக்களை (அவரது சகோதரர்கள்) எதிர்த்து குருக்ஷேத்ரா போரில் சண்டையிட்டார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். அவரது இந்த வீரம் மற்றும் பெருந்தன்மைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.

துரோணர்: கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர்பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. அசுவத்தாமன்இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்.

இவர் அசுவத்தாமனுக்குப் பால்வேண்டிப் பசு கேட்கத் தன் பால்ய நண்பன் துருபதனிடம் சென்றார். துருபதன் மறுக்கவே, என் மாணாக்கனைக் கொண்டு உன்னைக் கட்டிக்கொண்டுவரச் செய்வேன்” என சூளுரைத்தார். பின்னர் பீஷ்மர், பாண்டு மக்களுக்கு வில்வித்தை பயிற்றுவித்து, அருச்சுனனைக் கொண்டு துருபதனை கட்டிக் கொணர்ந்தார். பிரம்மனிடம் இருந்து இந்திரனுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் துரியோதனனுக்குத் தந்தவர். ஏகலைவனிடம் அவனது குருதட்சணையாக அவன் கட்டை விரலை பெற்றவர். இவர் பாரதப் போரின் 15ம்நாளில் திட்டத்துய்மன் என்பவனால் கொல்லப்பட்டார்.

அம்பா: காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், [இளவரசர்]]களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட அம்பா, அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் துருபதனுக்கு மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர்சிகண்டி என்பதாகும். மகாபாரதப் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.

சாத்தியகி: மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான்.
சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.

பாரதப் போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்.

சஞ்சயன்: மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.

மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.

விராடன்: ஒரு அரசனாவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர். இவன் சுதேஷ்னா என்பவளை மணந்து கொண்டான். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவனது மக்களாவர். பாரதப் போரின்போது இவன், துரோணரால் கொல்லப்பட்டான்.

கிருபர் அல்லது கிருபாச்சாரியார்: அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர். சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்புகிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார்.

குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் போரிட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றுகிறார். இறவாதவர்கள் எனக் கருதப்படும் எண்மரில் ஒருவர்

அசுவத்தாமன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த போது, அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.

போரின் முடிவில் கௌவுரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன்.தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனை இரவில் தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் பாண்டவ கடைகளையும் அதே இரவில் கொன்றான்.

ஏகலைவன்: சிறந்த வில்லாளன்; பிறப்பினால் ஒரு வேடன். துரோணரிடம் வில்வித்தை கற்கச் சென்றபோது கல்வி மறுக்கப்பட்டான். பின்னர் அவரது உருவத்தை அமைத்துத் தானே வித்தை கற்றான். பின்னர் துரோணரிடம் சென்றபோது அவர் குருதட்சணையாக அவனது வலக்கைப் பெருவிரலை வெட்டிப் பெற்றார்.

கிருதவர்மன்: கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். மகாபாரதம் தவிர விஷ்ணுபுராணம்,பாகவதம் மற்றும் அரிவம்சம் பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன். போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன்.அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்.

ஜராசந்தன்: மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த் இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.

மயாசுரன்: தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று.

துர்வாசர்: இந்து தொன்மவியலில் அத்திரி முனிவருக்கும் அனுசூயாவிற்கும் பிறந்த மாமுனிவர்.உருத்திரனின் மறு அவதாரமோவென்ற அளவு முன்கோபமுடையவர். மற்ற முனிவர்களைப் போலன்றி அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர்.இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார்.காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலையை தனது காதலனை மறக்க சபித்தவர் இவர்.

ஜராசந்தன்: மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த் இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.

மாயா ராஷ்ட்ரா என்ற தனது தலைநகரைக் கட்டினான். இராவணனின் அழகிய மனைவி மண்டோதரியின் தந்தையாவான்.

ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கதை - Story, பொது

அரவான் கதை – மகாபாரதம்

இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில்விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.மற்றும் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா அருணாபுரம் கிராமத்தில் 515 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் புகழ் பெற்ற அருணாபுரம் ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயில் தவிர [பாண்டிச்சேரி|பாண்டிச்சேரியிலுள்ள]] பிள்ளையார் குப்பம், மடுகரை, சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் கோயில்கள் இருக்கின்றன. இருப்பினும் விழுப்புரம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில்தான் மிகவும் புகழ்பெற்றது.
மகாபாரதப் பெருங்காதையில் அர்ச்சுனனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க “எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்” என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாக இருப்பவர்கள் அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

aravan.jpg
அர்ஜீனனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.

அரவான், இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்”என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது. அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.

மற்றொரு கதை

திருமணமாகாத இளைஞனைக் கள பலியாக்குவது மரபில்லை. அதற்காக அரவானுக்கு திருமணம் செய்விக்க வேண்டும். ஆனால், நாளைக்குச் சாகவிருக்கும் ஒருவனுக்கு யாராவது பெண் தருவார்களா? அதாவது, ‘அன்னு கட்டி அன்னு அறுக்க பெண் வேணும்!’ என்றால் கிடைக்குமா? எனினும், பீமனும் கிருஷ்ணனும் மணப்பெண்ணைத் தேடுகிறார்கள். அன்றே திருமணம் செய்து அன்றே புருஷனை இழக்க எந்தப் பெண் வீட்டார் சம்மதிப்பார்கள்?
பெண்ணே அகப்படாத நிலையில் அயோத்தியாபுரி பட்டினத்தில் பூலுவர் தெருவில் பொங்கியம்மாள் என்ற பெண்ணை எடைக்கு எடை பொன் கொடுத்தால் தருவதாகச் சொல்கிறாள் பெண்ணின் சின்னம்மா காளியக்காள். எடைக்கு எடை பொன் கொடுத்து பொங்கியம்மாளை அரவானுக்குத் திருமணம் செய்விக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு, அரவான் கள பலியாவதைத் தடுக்க மணப்பெண்ணின் சமூகத்தார் மாப்பிள்ளை அரவானைப் பல வழிகளில் மறைத்து வைக்கிறார்கள். அதையும் மீறி கள பலியாகும் கணவனைத் தேடிப் பொங்கியம்மாள் அனுமன் துணையுடன் கட்டுச் சோறு கட்டிக்கொண்டு செல்கிறாள். இறுதியில் கள பலியான அரவானை கண்டு மயங்கிச் சரிகிறாள். கள பலியான அரவான், ‘நான் பலியான பிற்பாடு மக்கள் என்னை பூலோகத்தில் கூத்தாண்டையாகக் கொண்டாட வேண்டும்!’ என்று மாயவனிடம் வரம் பெற்றிருக்கிறான். அதை முன்வைத்தே இந்தத் திருவிழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். யாரும் பெண் கொடுக்க முன்வராத நிலையில் கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானைத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள் பெண்ணாக மாறிய கிருஷ்ணனின் நினைவாக மூன்றாம் பாலினத்தவர் கூத்தாண்டவர் கோயிலில் இந்த விழாவைக் கொண்டாடுவதாகவும் கருதப்படுகிறது.

Uncategorized

கூத்தாண்டவர் – கூவாகம் – அரவான்

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.


தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.


தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான நிழல்-பொம்மலாட்ட (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.

Uncategorized

உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதி யார்?

            

உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதி துச்சளை,  துரியோதனன், துச்சாதனன், யுயத்சு, துச்சகன், துச்சலன், துர்முகன், விளிஞ்சதி, விகர்ணன், சலசந்தன், சுலோசனன், விந்தன், அதுவிந்தன், துர்த்தருஷன், சுவாகு, துர்ப்பிரதருஷணன், துர்மருஷ்ணன், துருமுகன், துர்க்கருணன், கர்ணன் (துரியோதனாதிகளில் ஒருவனுக்கும் இப்பெயர் உண்டு), சித்திரன், உபசித்திரன், சித்திராக்கன், சாரு, சித்ராங்கதன், துர்மதன், துர்பிரகாஷன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாதிபதி, சுடேணன், கண்டோதரன், மகோதரன், சித்ரவாகு, சித்ரவர்மா, சுவர்மா, துருவிரோசனன், அயோவாகு, மஹாவாகு, சித்திரசாயன், சுகுண்டலன், வீமவேகன், வீமபாலன், பாலகன், வீமவிக்ரமன், உக்ராயுதன்… இப்படி 50 பேருக்கு பெயர் சூட்டப்பட்டது. அடுத்து பிறந்த 50 குழந்தைகளுக்கு வீமசரன், கனகாயு, திருஷாயுதன், திருஷவர்மா, திருஷகத்ரன், சோமகீர்த்தி, அநூதரன், சராசந்தன், திருஷசந்தன், சத்தியகந்தன், சுகச்சிரவாகு, உக்ரச்சிரவா, உக்ரசேனன், சேனானி, மகமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருஷகத்தன், சுகத்தன், வாதவேகன், சுவர்ச்சசன், ஆதித்யகேது, வெகுவாதி, நாகத்தன், அநுயாயி, நிஷல்கி, கவசி, தண்டி, தண்டதரன், தனுக்கிரகன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரவாகு, அலோலுபன், அபயன், ரவுத்ரகம்மன், திருஷரதன், அநாதிருஷ்யன், குண்டபேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கவாகு, மகாவாகு, வியுகுடாகு, கனகரங்கதன், குண்டசித்து, சித்திரகன்

Uncategorized

கௌரவர்கள் நூறு பேர்… அவர்களின் பெயர்கள்





கௌரவர்கள் கதைக்குள் செல்லும் முன்…

மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்… மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.

கௌரவர்கள் நூறு பேர்… அவர்களின் பெயர்கள்
1 துரியோதனன் 

2 துச்சாதனன் 

3 துசாகன் 

4 ஜலகந்தன்

5 சமன் 

6 சகன் 

7 விந்தன் 

8 அனுவிந்தன் 

9 துர்தர்சனன் 

10 சுபாகு 

11 துஷ்பிரதர்ஷனன் 

12 துர்மர்ஷனன் 

13 துர்முகன் 

14 துஷ்கரன் 

15 காஞ்சநத்வாஜா 

16 விகர்ணன் 

17 சலன் 

18 சத்வன் 

19 சுலோசனன் 

20 சித்ரன் 

21 உபசித்ரன் 

22 சித்ராட்சதன் 

23 சாருசித்ரன் 

24 சரசனன் 

25 துர்மதன் 

26 துர்விகன் 

27 விவித்சு 

28 விக்தனன் 

29 உர்ணநாபன் 

30 சுநாபன் 

31 நந்தன் 

32 உபநந்தன் 

33 சித்திரபாணன் 

34 அயோபாகன் 

35 சித்திரவர்மன் 

36 சுவர்மன் 

37 துர்விமோசன் 

38 மகாபாரு 

39 சித்திராங்கன் 

40 சித்திரகுண்டாலன் 

41 பிம்வேகன் 

42 பிமவிக்ர 

43 பாலகி 

44 பாலவரதன் 

45 உக்ரயுதன் 

46 சுசேனன் 

47 குந்தாதரன் 

48 மகோதரன் 

49 சித்ரயுதன் 

50 நிஷாங்கி 

51 பஷி 

52 விருதகரன் 

53 திரிதவர்மன் 

54 திரிதட்சத்ரன் 

55 சோமகீர்த்தி 

56 அனுதரன் 

57 திரிதசந்தன் 

58 ஜராசங்கன் 

59 சத்தியசந்தன் 

60 சதஸ் 

61 சுவாகன் 

62 உக்ரச்ரவன் 

63 உக்ரசேனன் 

64 சேனானி 

65 துஷ்பரஜை 

66 அபராஜிதன் 

67 குண்டசை 

68 விசாலாட்சன் 

69 துராதரன் 

70 திரிதஹஸ்தன் 

71 சுகஸ்தன் 

72 வத்வேகன் 

73 சுவர்ச்சன் 

74 ஆடியகேது 

75 பாவசி 

76 நகாதத்தன் 

77 அமப்ரமாதி 

78 கவசி 

79 கிராதன் 

80 சுவீர்யவ 

81 குண்டபேடி 

82 தனுர்தரன் 

83 பீமபாலா 

84 வீரபாகு 

85 அலோலுபன் 

86 அபயன் 

87 உக்ராசாய் 

88 திரிடரதச்ரயன் 

89 அனாக்ருஷ்யன் 

90 குந்தபேதி 

91 விரவி 

92 சித்திரகுண்டலகன் 

93 தீர்தகாமாவு 

94 பிரமாதி 

95 வீர்யவான் 

96 தீர்கரோமன் 

97 தீர்கபூ 

98 மகாபாகு 

99 குந்தாசி 

100 விரஜசன்