Uncategorized

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்

“செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு’ என்று வாழ்ந்து பழகியவன் தமிழன். தன் கையே தனக்கு உதவி, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற சுயமரியாதை உணர்வு இயல்பாகவே தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. இறைவா என்னை யாரிடமும் கையேந்த வைத்துவிடாதே, பிச்சையெடுத்துத் தின்னும் கேவல நிலை மட்டும் எனக்கு வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்ளும் தமிழர்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளனர்.

உலகனைத்தும் உள்ள உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவன்கூட பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான். அதாவது உழைக்காமல் உண்பதைத் தவறு என சிவபெருமானே தனது திருவிளையாடல் மூலம் உணர்த்தியுள்ளார்.

தமிழகத்தின் அடிப்படைத் தேவைகளான நதிநீர் இணைப்புத் திட்டங்கள், மின்உற்பத்தித் திட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம் வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, மழைநீர் சேகரிப்பு, விவசாய வளர்ச்சி, நெசவுத் தொழில் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், முழுமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, தேர்ந்த நிர்வாகம் ஆகியவை குறித்து இரு அரசியல் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.

கருணாநிதி அறிவித்த இலவசத் திட்டங்கள் அனைத்துமே அவரது குடும்பத் தொழில்களுக்கு மூலதனமாக அமைந்து அவரது குடும்ப வருவாயைப் பெருக்கியது என்பதுதான் கண்கூடாக நாம் கண்ட உண்மை.

உதாரணமாக, இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதன் மூலம் கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் குடும்பத்தினரின் சுமங்கலி கேபிள் நிறுவனமும், கருணாநிதியின் மகன் அழகிரி குடும்பத்தின் கேபிள் நிறுவனமும் பயனடைந்தன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திய தனியார் நிறுவனமாகிய ஸ்டார் குழுமம் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான நிறுவனம்.

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி அறிவித்துள்ளதன் உள்நோக்கம் ஏழ்மை அகற்றப்பட வேண்டும் என்பதல்ல, ஏழைகள் என்றும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும், அவர்களின் வாக்குகளை இத்தகைய இலவசத் திட்டங்களின் மூலம் பெற்று தானும் தன் குடும்பத்தாரும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்த அறிவிப்புகளின் உண்மையான நோக்கமாகும்.

மீபத்தில் நடைபெற்ற குஜராத், பிகார் சட்டமன்றத் தேர்தல்களில் கருணாநிதியின் தேர்தல் அறிக்கை பாணியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலவசத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளைக் கொடுத்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை முறியடிக்கவும், காங்கிரஸ் கட்சி இத்தகைய தந்திரமான முயற்சிகளைச் செய்தது.

இலவச மின்சாரம், வண்ணத் தொலைக்காட்சி என குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் நரேந்திர மோடியை வீழ்த்த முடியவில்லை. மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தியர்கள் தன்மானம் உள்ளவர்கள், குஜராத்தியர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கும் காங்கிரஸýக்குத் தக்க பதிலடி கொடுங்கள் என்று குஜராத் மாநில மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இதேபோல நிதீஷ்குமாரின் திறமையான நிர்வாகத்தால் பிகார் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதைக் கண்டு பொறுக்காமல் இத்தகைய கருணாநிதி பாணி இலவசத் திட்டங்களை லல்லுவும், காங்கிரஸ் கட்சியும் பிகார் மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளாகக் கொடுத்தனர். சுயமரியாதை உணர்வுள்ள பிகார் மக்கள் இலவச கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறமைக்கே வாக்களித்தனர். மிகப் பின்தங்கிய மாநிலமான பிகார் இப்போது தொழில் விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

Advertisements
Uncategorized

விஷ உணவுகளை கண்டுபிடிக்க உதவும் புதிய பேக்கேஜிங் பிலிம் ஜெர்மனியில் கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் உள்ள உணவுகள் குறித்த ஆய்வுக்கழகம் வீணான மற்றும் விஷத்தன்மை உள்ள உணவுகளை உடனடியாக அடையாளம் காட்டும் புதிய பேக்கேஜிங் பிலிம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிய கண்டுபிடிப்பு நிற மாற்றம் மூலம் உணவின் தன்மையை உணர்த்தும்.

இதன் மூலம் புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். உணவில் உடலுக்கு தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது அதன் விஷத்தன்மை அதிகரிக்கும். இந்நிலையில் அந்த உணவை உட்கொள்பவர்கள் ஒவ்வாமை எனப்படும் புட் பாய்சனிங் பாதிப்புக்கு ஆட்பட நேரிடும். இது பாதிப்பாளர்களை மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாக்கும்.

உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். கவனிக்கப்படாமல் விடும் போது பாதிப்பாளர்களை ஆபத்துக் கட்டத்துக்கு தள்ளிவிடும். இந்நிலையில் இந்த பாதிப்பில் இருந்து மனித குலத்தை காக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மாட்யுலார் சாலிட் ஸ்டேட் டெக்னாலஜிஸ் மற்றும் ஃப்ரான்ஹோஃபர் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இது குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு புதிய பேக்கேஜிங் பிலிம்.

குறிப்பாக இறைச்சி மற்றும் மீன்கள் உண்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்பதை இந்த பிலிம்களைக் கொண்டு பரிசோதிக்கும் போது அவை நல்ல நிலையில் உள்ள உணவை மஞ்சள் நிறத்திலும் கெட்டுப்போன அல்லது விஷத்தன்மை உள்ள உணவுகளை நீல நிறத்திலும் அடையாளம் காட்டும்.

இதன் மூலம் இவற்றின் உபயோகம் குறித்து முடிவு செய்ய முடியும். ஒரு சில நொடிகளிலேயே உணவின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் இந்த ப்ரத்யேக ஃபிலிம் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இறுதிக்கட்ட ஒப்புதலை அடுத்து விரைவில் அமல் படுத்தப்பட உள்ளது உணவின் தன்மையை உடனடியாக தெரிவிக்கும் புதிய பேக்கேஜிங் பிலிம். அறிமுகத்துக்குப் பின் மக்களின் தேவையறிந்து இதில் மாற்றங்கள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி குறித்த படம் பார்க்க…..
http://www.thedipaar…ws.php?id=27529

Uncategorized

“49ஓ” படிவத்தை பயன்படுத்திய வாக்காளர்களிடம் விசாரிக்ககூடாது: கியூ பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு தடை

“49ஓ” படிவத்தை பயன்படுத்திய வாக்காளர்களிடம் விசாரிக்ககூடாது: கியூ பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு தடை.
தம்முடைய வோட்டு உரிமைய தவற பயன்படுத்த கூடாது என்று

ஒரு குடிமகனின் கடமையாக வந்து 49 ஒ என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து செல்பவர்களை விசாரிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. இது இந்தியா வோட்டு உரிமைக்கு எதிரானது. இப்படி பயமுறுத்தினால் இந்த ஒரு முறையை மக்கள் கை விட்டுவிடுவார்கள் என்று அரசியல்வாதிகள் ஏவி விடிருபார்கள்.

காவல்துறை இன்னும் எவ்வளவு காலம் அரசியல்வாதிகளின் அடியாளாக இருக்க போகிறார்கள் ?
Uncategorized

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..இவர்களே குற்றவாளிகளாக

தமிழர்கள் நலனிலும், இலங்கையைத் தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.
——————பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

————————————————————————————————–

போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக, ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை, சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக நிறுத்த வேண்டும்’

——————ஜெ., வலியுறுத்தல்

ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா கஞ்சா கருப்புவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது வாழ்த்து சொல்லாதது ஏன்?
————————————————————————————————–
“”மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு, இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்,”

—————–தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்

————————————————————————————————–

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு “”இப்போதாகிலும் செயல்படுங்கள்” என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும். இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது? தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..

—————————————————————————————————

கதவை தொறந்த காற்று வரும், இவர்களின் வாயே தொரந்த பொய் கதை வரும். நாங்களெல்லாம் கூட்டுக் களவாணிகள், ஒன்று சேர்ந்த தமிழினத்துரோகிகள்.திமுகவுடன் இருந்து கொண்டே, எந்தவித எதிர்ப்பின்றி ஈழத்தில் தமிழர்களை அழித்து விட்டாயிற்று.

ராஜபக்ஷே கிட்ட தமிழர்களை காட்டி கொடுக்கலாம், ஆனா உங்க கட்சி (DMK) கொள்ளைய காட்டி கொடுக்காதீங்க. கனிமொழி உங்க கட்சி தொண்டர் காப்பாத்துங்க.அப்போ ராஜா உங்க கட்சி இல்லையா.நான் மட்டும் இல்லே கட்சி முழுதும் கொள்ளைதான் காட்டி கொடுக்க மாட்டேன் என்று இலைமறைவாக சொன்னீர்கள்.

இது போன்ற ஊழல்கள் இனியும் தொடராமல் இருக்க!

1 .அரசியல் சாசனம் முற்றிலும் மாற்றி அமைத்து ஊழல் செய்பவர்கள், செய்ய தூண்டுபவர்கள் தூக்கில் இட வேண்டும்
2 . இந்தியாவில் இருந்து swiss bank சென்ற எல்லா கருப்பு பணமும் இந்தியாவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
3 . பதவிக்கு வந்தபின் அரசியல் முறைகேடுகள் செய்யும் அமைச்சர்கள் முதல்வர்கள் பிரதமர் ஆகியோரை பதவியில் இருந்து இறக்கும் அதிகாரம் பெற்ற மக்கள் மசோதா அமைக்க பட வேண்டும்.
4 . நீதியும் நேர்மையும் இந்தியா முழுவதும் நிலை நாட்ட பட வேண்டும்.

Uncategorized

கேபிள் டி.வி.க்களை அரசுடைமை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளால் வெற்றி பெற முடியாது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் டி.வி.க்களை அரசுடைமையாக்கி ஜெயலலிதா முதல் கையெழுத்திடுவார்.
———————இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Uncategorized

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – நடிகையுமான ரோஜா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஹைதராபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:

கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்,” என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டி 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இவருக்கு இதுவரை எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. ஆனாலும் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அவர் தனது தந்தை ராஜ சேகரரெட்டி சமாதிக்கு சென்று வணங்கினார். பின்னர் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரத்தில் இறங்கினார்.

Uncategorized

கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவு,

கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவு, என்ற வசனம் இடம்பெற்றுள்ளதால் தம் மரோ தம் இந்திப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது.

அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்து, ரோகன் சிப்பி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் தம் மரோ தம்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில், கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவாகக் கிடைப்பார்கள் என்று வசனம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வசனத்தை பிபாஷா பாசு பேசுவது போல வசனம் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர்களிலும் அது இடம்பெற்றுள்ளது.

இது பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. கோவாவின் அரசியல்வாதிகள், சமூக ஆர்வர்கள் என அனைவரும் கொதித்துப் போய் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவா என்ற அழகிய நகரின் இமேஜைக் கெடுக்கும் வகையில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்காவிட்டால், வெளியாக விடமாட்டோம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் கோவா தலைவர் பிலிப் டிசூஸா கூறுகையில், ”இதே போல ஒரு காட்சியை வேறு எந்த மாநிலத்திலாவது போய் எடுத்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா… கோவாவை இழிவுபடுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இனி கோவாவில் படமெடுக்க வருபவர்கள், முதலில் படத்தின் கதை, திரைக்கதையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்,” என்றார்.

தம் மரோ தம் விவகாரம் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கோவா முதல்வர் திகம்பர் காமத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தடை செய்வது குறித்து மும்பை உயர்நீதி மன்றத்தை அணுக அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.