கட்டுரைகள், குடும்பம், பொது, மருத்துவம் - Medical, Uncategorized

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

அடிக்கடி கோபப்படுபவரா?

உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா?

கோபம்3கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். மன அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் தேவையற்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் உங்களுக்கு தான் வீண் விரயம். கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

கோபம்1சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம். சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லை கடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச்மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
கோபம் ஏன் ஏற்படுகிறது?

ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது!

ஆம்! நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும்போது/எழுதும்போது/கேட்கும்போது/படிக்கும்போது/செய்யும்போது…..
இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.

சரி! நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்?
1. வெறுப்பு
2. பழிவாங்குதல்
3. அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
4. தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
5. அடித்தல்/வன்முறை
6. முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல் (பாடிலாங்குவேஜ்)
இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம்.

இவை அதிகமாகும் போது பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை தெரிந்துகொள்ளும் முன் கோபப்படும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என பார்ப்போமா?

1. இதய துடிப்பு அதிகரிக்கிறது.
2. இரத்த அழுத்தம் அதிகமாகிறது
3. சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
4. தசைகள் வேகமாக இயங்குகின்றன.
5. மூச்சு விடுதல் வேகமாகிறது.
6. மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
7. உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

கோபப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள்:

நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்… (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது). கோபப்படும்போது இதயம் வேகமாக துடிப்பதால், அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கொழுப்பு/சர்க்கரை வியாதி இருந்தால் அவ்வளவுதான்!

கோபப்படும்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் மேற்கண்ட பிரச்சினை இரட்டிப்பாகிறது.  கோபப்படும்போது நம் உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைகிறது.

சரி இவ்வளவுதானா! என்றால் இல்லை, சிலர் கோபமாக இருக்கும்போது.. சிகரெட், மது போன்றவற்றை தேடி செல்கின்றனர். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். சிலர் நாள்பட்ட கோபத்தை டிவி, கம்ப்யூட்டர் முன் நேரத்தை கழிப்பதன் மூலம் மறக்கப் பார்க்கின்றனர்.

இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..

கோபம் வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
கோபம் திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
கோபம் சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
கோபம் உடல்நலத்தை பாதிக்கிறது.
கோபம் உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.
எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

1.கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2.கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3.அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4.நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5.செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6.அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7.எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8.கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9.உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம்  இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

12. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

13. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

14. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

15. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல்,  மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.

Uncategorized

நவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja

நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.
புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். 

வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.
நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.
அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்
விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.
வட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியைகொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.
எனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.

குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.
5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.
21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.
31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.
32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.
33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.
41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.
42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.
43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.
44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.
45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.
49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.
51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.
52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.
54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.
63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
67. தாராசுரம் ஐராவதேஸ்வரர்கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.
68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.
73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.

நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
1. முதலாம் படியில்:- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;
2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :- மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி:-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள்:- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.
6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்
Uncategorized

எளிய முக அழகு குறிப்புகள்

இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை…
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம். இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே. ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது. மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிகளிடம் இருந்து சுட்ட அழகுக் குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.
இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.

பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.

சோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்.

உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.

முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.

ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

முகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும். 

நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
இதழ்களை பராமரிக்க:
நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.

கழுத்தை பராமரிக்க:
நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.
சருமத்தைப் பராமரிக்க:
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.
கருவளையம் நீங்க:
கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். 
இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.
கருப்பு திட்டுகளை நீக்க:
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

முகத்தில் உள்ள தழும்புகள் மறைய
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு
அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
*ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
Uncategorized

மதமாற்றம் சிறந்த வியாபாரம்

இந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.

மரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா? என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் புறம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

பக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.

கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

Tamil_News_large_1901046இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பதுகிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டுநம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக்காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பதுமருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டுவருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்றதன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒருஉலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர்ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும்முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையேஏற்படுத்தும்.”

ஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும்,மூலமதமான ஹிந்து மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.

இந்த ஒற்றுமை நிலை முஸ்லீம் இந்தியாவில் படை எடுத்து வெற்றி கண்ட பிறகு பாதிக்கப்பட்டு, ஹிந்துகளின் மதமாற்றம் வெகு தீவிரமாக முஸ்லீம் அரசர்களால் கையாளப்பட்டு வெற்றி கண்டனர். அதன் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு இந்துக்கள் பலரை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்து அந்தப் பிரசாரம் இன்னும்.தொடர் கதையாக இந்தியாவின் மதச் சார்பின்மையையே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதைப் பல சம்பவங்கள் நீரூபித்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப் பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

ஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும் செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில் நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால் உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும்? கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற ஒன்றாகும். ஹிந்துக்கள் இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம் ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம் ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின் மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப் பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை உடை பாஷை,உணவு, குடி நீர் ஆகியவைகளில் வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும் தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான்.ஏசு மட்டும் அல்ல. என்னை நான் சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய கருத்து,சைத்தானின் கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும் சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’

பார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. பார்பி பொம்மைகள் குட்டை பாவடையுடனும், தங்கள் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டும் வகையிலும் இருக்குமாறு செய்து, சிறுவர், சிறுமிகளை முதலில் அது போன்ற ஆபாச உடைகளை அணியச்செய்து அவர்களின் வெட்கத்தை சிறிது சிறிதாக குறைத்தது மேற்கத்திய கிறிஸ்தவம். பின்னர் வளரிளம் பெண்களை அப்படியான ஆபாச உடைகளை அணியச்செய்ய ஊக்குவித்து ஒரு தலைமுறைக்கு பிறகு ஆபாசமாக உடையணிவது நம் பிறப்புரிமை என்பது போல நம்பச்செய்து விட்டது கிறிஸ்தவம். அவர்களின் பண்பாட்டை அழித்ததன் மூலம் எளிதாக கிறிஸ்தவ அடித் தளத்திற்குள்ளேயே அவர்களை நிலை நிறுத்தி கொள்ள பெரிய சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது.

சினிமா நடிகைகள், பிரபலங்கள் பற்றிய ஆபாச செய்திகள், கலாச்சார விரோத நடவடிக்கைகள் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இவற்றைத் தொடர்ந்து படித்து கொண்டிருக்கும், பார்த்து கொண்டிருக்கும் பொது மனம், இது போன்ற சீரழிவுகளே வரவேற்பை பெறக்கூடியது என்பது போன்ற பொது சிந்தனையால் வார்க்கப்ப்ட்டு அதை ஆதரிக்கும் மன நிலைக்கு வந்து விடுகிறது. உதாரணமாக, மேற்கத்திய இயந்தி ரமயமாக்கலின் காரணமாக, அதிகரித்த உற்பத்தியை விற்பனையாக்கி லாபம் சம்பாரிப்பதற்காக குடும்பங்களை சீர்குலைத்த கதை அனைவரும் அறிந்ததே.

கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள். ஐரோப்பாவிலும், ரோம், காந்தாரம், முதல் எகிப்து வரை தங்கள் பண்பாட்டை மறந்து பாலைவன மதங்களை தழுவிக்கொண்ட நாடுகளின் பேரழிவுகளை பாருங்கள். அவர்கள் கலாச்சார அனாதைகளாக இன்று நிற்பதை பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு, கலாச்சார சீரழிவில் பாரதத்தை தள்ளி மக்களை பாலைவன அரசியல் அடிமைகளாக மாற்றுவதற்காக பெரும் முயற்சி நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் வேறு வேறு கண்ணிகள் தான் இவை என்பதை நாம் எப்போது உணர இருக்கிறோம்?

இப்படியான கருத்துருவாக்க வேலையை, இந்து மதம் மீதும், இந்து ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீதும் முதலில் உருவாக்க வேண்டியது. பின்னர், மாற்று மதம் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட பொய்களை மெதுவாக நுழைத்து, அவர்களை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்குவது, பின்னர் பெருமளவு பிரச்சாரம் மூலமும், ஆட்கள் மூலமாகவும் மதமாற்று மூளை சலவையை செய்வது.

இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பப் பையை ஆக்ரமித்து தங்கள் மதத்திற்கான அடியாட்களை விதைத்து உருவாக்கி, அவர்களை கொலை காரர்களாகவும், அடிப்படைவாத வெறியர்களாகவும், கயவர்களாகவும் வளர்ப்பது. அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவது அல்லது பிச்சை எடுக்க செய்வது. அல்லது அவர்களின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது. இல்லை தொடர்ச்சியாக பாலியல் அடிமையாக வைத்திருப்பது. குழந்தைகளை பெற்று தரும் இயந்திரமாக மாற்றுவது.

இப்படியான ஆர்கனைஸ்ட் கிரைம்கள் மதமாற்ற வியாபாரத்தில் கோலோச்சி கொண்டிருக்கிறது.

பழங்காலத்தில் இருந்தே மத மாற்றம் வன்முறையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்திய சரித்திரம் இத்தகைய நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. அடக்குமுறையாலும், பலவந்தத்தாலும், சித்திரவதையாலும், படுகொலையாலும் இந்தியர்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டது வெறும் புனைகதைகள் அல்ல. “The inquisition” எனக்குறிப்பிடப்படும் புனித விசாரணையும் அதன் நிகழ்வுகளும் உலக வரலாறு. இவை எல்லாம் மத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டவை தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறை மேலும் வன்முறையையே வளர்க்கும் – இது இயற்கையின் நியதி.

“Don’t target converts” என்று சொல்லும் கட்டுரையாசிரியருக்கு ஒருவர் தனது மதத்தை பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் அனுமதியளிக்கும் நாட்டில், மதம் மாற்றுபவர்கள் குறிவைக்கப்படுவது வினோதமாகத் தோன்றுகிறது. ஆனால், பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் மட்டும்தான் இந்த நாட்டின் அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது; மோசடியாலும், பலவந்தத்தாலும் மக்களை மதமாற்றம் செய்ய அது அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.

காசு பணம் துட்டு மணி மணி  வெளினாடுகளில் இருந்து வருகிறது. மிடியாக முதலாளிகள் பணத்திற்கு தாயை கூட விற்றுவிடுவார்கள். இப்பொது நாட்டை விற்கிறார்கள்

Uncategorized

ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை… (இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலோ?) ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில்,மழை,தூசியிலும் செல்வார்கள்.ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும். வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன். வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்

மோட்டார் சைக்கிளில் போகும் ஆண்கள் கைகளிலும், முகத்திலும் அரைமணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷன்தடவிக் கொண்டால் சருமம் கறுக்காது.

முன்னாடி எல்லாம் ஆண்கள் தலைக்கு எண்ணை வைத்து அழுத்தி படிகிற மாதிரி தலைவாருவார்கள். இப்போது எல்லாம் ஆண்கள், பெண்களைப் பார்த்தவுடன் ஸ்டைலாக விரலால் தலையை கோதிவிடுகிறார்கள். அதனால் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள்.

தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசப்பு குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

வெய்யிலில் அலைந்து திரிவதாலும், அதிக வேலையினாலும் எப்போதும் முகம் சோர்வாக தெரியும். அதற்கு சிறந்த பலன் கிடைக்க கூடியதானது, அரை கப் பப்பாளியுடன், கொஞ்சம் அவித்த பூசணிக்காயைச் சேர்த்து மசித்து எடுக்கவும், பின்னர் முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். களையிழந்த முகச்சருமம்பளிச்சிடும்.

ஆண்களின் முக அழகிற்கு: பொதுவாக அதிகமாக வெய்யிலில் சுற்றித்திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீற்றூட் சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளை சாற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

ஆண்களின் முக அழகிற்கு: பொதுவாக அதிகமாக வெய்யிலில் சுற்றித்திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.

beauty-trends-blogs-daily-beauty-reporter-2016-02-19-men-and-makeupசில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீற்றூட் சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளை சாற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்:
6c17e-male2b2வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

தேன், முட்டை:
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.

நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க் (neem leaf mask):
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.

வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் நான்கு தேய்த்து, பின் அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் முடி வளர தொடங்கும்.

தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.

செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்குவதுடன் வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.(தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

தலைமுடி:
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ இதனை காய வைத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

உள்ளாடைகள்:
உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.

கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள் t-shirt போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.

இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.

உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும்,பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கெடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க…

“ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம்” அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.

முகம் வரட்சியினை போக்க:கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம்
ஒருமுறை பூசி வரலாம்.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.

தீவிரவாதம், Uncategorized

தீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை ‘தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்’ என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது. இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்.”

“இங்கு கிறிஸ்தவ தீவிரவாதம் கிடையாது. யூத தீவிரவாதம் கிடையாது. அத்துடன் முஸ்லிம் தீவிரவாதமும் .அனைத்து மக்கள் மற்றும் மதங்களில் வன்முறை¬மிக்க தனி நபர்கள் உள்ளதாகவும் அவர்களே தீவிரவாதத்துக்கு காரணம்.

கிறிஸ்தவ நாடுகளுக்கும் மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போர்கள் தீவிரவாதமாக பார்க்கப்பட கூடாது என்று பிரிட்டனின் முன்னாள் தலைமையமைச்சர் டேவிட் கேமருன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சிறியதொரு பிரிவை அழித்தோழிக்கும் நடவடிக்கைதான் இதுவென அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை விமர்சித்த கேமருன், இஸ்லாமிய மதம் பற்றிய திரிக்கப்பட்ட பார்வையை கொண்டுள்ளோருக்கு எதிரான போர் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் கருத்துப்படி, மேற்குலக கிறிஸ்தவ நாகரீகத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கையாக இது தெரிகிறது. இந்த பார்வை மிகவும் தவறானது என்று கேமருன் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக பொரும்பான்மையினர் போர் நடத்தி வரும் நிலையில், சிறுபான்மை எண்ணிக்கையினர் மதத்திற்கு எதிரான திரிக்கப்பட்ட பார்வையை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனை சமாளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கேமருன் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: “இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செterrorயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது”. ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும்,

1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும்
2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).

ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது “எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்”, இஸ்லாமியர்கள் சொல்வது போல, “அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்” என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!.

தீவிரவாதத்திற்கு அதிகம் சம்பந்தமே இல்லாத இரான் நாடு மீதும், இராக் நாடு மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது கிறிஸ்தவ அமெரிக்கா. இது ஏன்?

அமெரிக்கா மற்றும் பிற கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகளுக்கு தங்கள் ஆயுதங்களை விற்க இது ஏதுவாக உள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாமியர்களை அடியாட்கள் போன்று பயன் படுத்தி இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இடையே பிளவை பெரிதுபடுத்தி மேலும் ஆயுதங்கள் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பஞ்சாயத்து செய்துகொண்டே தங்களைத் தலைமை இடத்தில் தக்க வைத்துக்கொண்டு உலகை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் சௌதி அரசருக்கும் நாட்டுக்கும் அனைத்துவகை ஆயுதங்களோடு தங்களின் முப்படைகளையுமே கொடுத்து மிகவும் தாராளமாக எதோ ஓர் வள்ளல் போல உதவுகிறார்கள் மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகள்.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்.

2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.

3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்

4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik…etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,  பயங்கரவாதம்!

இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்…

1) 1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால். சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர், அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2) 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

3) 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

4) 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

5) 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6) 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்! இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

8)1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9) முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்..?

10) 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11) 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

12) இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13) அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

14) 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

15) நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16) பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

17) 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

18) 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.

19) அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

20) 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

21) 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

terror2மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, “தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்”. கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது “உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்” என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.

ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் தன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான்.

மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள்.

Uncategorized

ஒரு வாரத்தில் எடை இழப்பு

இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. தற்போதைய எடை இழப்பு துறையானது முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்ததாகவே உள்ளது. உடல் பருமனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில விஷயங்கள், எடையைக் குறைக்கும் என்ற எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே பின்பற்றி வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் எடை இழப்பது சாத்தியமே ஆனால் நீங்கள் இழக்கும் எடையை கண்காணிக்க வேண்டும். ஒரு நொறுக்கு உணவை பின்பற்றுவது உங்களை ஒரு வாரத்தில் 5 கிலோ எடை இழப்பிற்கு உதவும் ஆனால் உணவு நிபுணர்களை நம்பினால், அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல மற்றும் நிறைய நல்லதை விட தீங்கை உடலுக்குச் செய்கிறது. எனினும், ஆரோக்கியமான உணவு கூட உறுதியாக 7 நாட்களில் விளைவுகளைக் காண்பிப்பதால், நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம்.இங்கே நீங்கள் ஒரு வாரத்தில் எடை குறைக்க உதவும் ஒரு வழிகாட்டி இருக்கிறது.

சிலர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், அவற்றால் எந்த பலனும் கிடைத்திருக்காது. இதனால் நவீன மருந்துகளின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்கலாம் என்று, அதைப் பின்பற்ற நினைப்பார்கள். அப்படி உடல் எடையை வேகமாக குறைக்க அதிகம் பயன்படுத்தப்படுபவைகள் தான் சப்ளிமென்ட்டுகள் மற்றும் எடை இழப்பு மாத்திரைகள்.

எடை இழப்பு ஊசிகள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான எடை இழப்பு ஊசிகள் உள்ளன. ஒருவர் எடை இழப்பு ஊசிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்துவிட்டால், உங்களை நீங்களே ஒருசில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே இதுவரை எடையை குறைக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்றி உள்ளீர்களா? எடை இழப்பு ஊசியைப் போட்டுக் கொள்ள மனதளவில் தயாராக இருக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள். அப்படி படித்த பின்பும் எடை இழப்பு ஊசி போட்டுக் கொள்ள தயார் என்றால் போட்டுக் கொள்ளுங்கள்.

எடை இழப்பு ஊசிகளின் வகைகள் எடை இழப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்வதற்கு தயாரான பின், எடை இழப்பு ஊசிகளில் உள்ள வகைகள் குறித்தும், எப்படி வேலை செய்கிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதுக்குறித்த தகவல்கள் அனைத்து கிளினிக்கிலும் கிடைக்கும். ஆனால் தவறான ஊசிகளைப் போட்டுக் கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

பி12 இந்த வகை எடை இழப்பு ஊசியானது நம் உடலில் வைட்டமின் பி12 விளைவை பயன்படுத்துகிறது. இந்த வைட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புச் செல்களை வேகமாக ஆற்றலாக மாற்றும் செயலை செய்யும். இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவு குறையும். ஒருவர் சரியான அளவில் பி12 ஊசியைப் போட்டுக் கொண்டால், அது கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மற்றும் எடையையும் குறைக்கும். ஆனால் இந்த வகை ஊசியின் விளைவை பல மருத்துவர்கள் மறுக்கிறார்கள்.

லிப்போட்ரோபிக் லிப்போட்ரோபிக்ஸை கொழுப்பு எரிபொருளாகப் பயன்படுத்தும் பல லிப்போட்ரோபிக் ஊசிகள் உள்ளன. லிப்போட்ரோபிக்கில் உள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகளால் தான், இந்த ஊசிகள் உடல் எடையைக் குறைக்கும் ஊசிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊசியில் மெத்தியோனைன், கோலைன் மற்றும் இனோசிடோல் போன்ற முக்கிய கெமிக்கல்கள் உள்ளன. இந்த ஊசியை சரியான அளவில் போட்டு வந்தால், லிப்போட்ரோபிக் ஊசிகள் எளிதில் உடலில் உள்ள தேவையற்ற உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் பி மற்றும் லிப்போட்ரோபிக் இந்த வகை ஊசியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி6, பி12 மற்றும் சி-யுடன், 3 லிப்போட்ரோபிக்ஸ் மற்றும் லிடோகைன் போன்றவை அடங்கியிருகும். இந்த ஊசியில் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கத் தேவையான அனைத்து உட்பொருட்களும் உள்ளன. அதே சமயம் முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு விடோகைன் அழற்சி என்றால், இந்த வகை ஊசியைத் தவிர்த்திடுங்கள். இந்த ஊசியில் உள்ள லிடோகைனைத் தவிர வேறு எதுவும், அழற்சியை ஏற்படுத்தாது. இந்த ஊசியைப் பயன்படுத்துவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வகை ஊசிகளின் பலனும் கிடைக்கும்.

குறிப்பு எடையைக் குறைக்க எடை இழப்பு ஊசியைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு எந்த அளவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களால் மட்டுமே எந்த அளவு மருந்தை எடுக்க வேண்டும் என்பதைக் கூற முடியும். மேலும் இந்த எடை இழப்பு ஊசியை தாங்களாகவே போட்டுக் கொள்ளலாம். ஒருவேளை முடியாவிட்டால், அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த ஊசியை தொடர்ச்சியாக போட்டுக் கொண்டால் மட்டுமே, உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உடனே காண முடியும்.

எடை இழப்பு ஊசியின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், இது தற்காலிகம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேப் போல் இந்த ஊசியைப் போட்டாலும், ஆரோக்கியமான டயட் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். ஒருவேளை இந்த ஊசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பழைய படி கண்ட உணவுகளை உட்கொண்டு வந்தால், மீண்டும் பழைய உடல் பருமனைப் பெறக்கூடும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருங்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தவும் எடையைக் குறைக்க நினைத்தால், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது 1-1.5 மணிநேரத்திற்குள் 24-30% ஊக்குவிக்கப்பட்டு, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும். முக்கியமாக உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1/2 லிட்டர் நீரைக் குடித்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

காலை உணவாக முட்டை முட்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று இது எடையைக் குறைக்க உதவும். ஆய்வுகளில் காலை உணவாக தானிய வகை உணவுகளுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால், அடுத்த 36 மணிநேரத்திற்கு குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவி, அதிக எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு முட்டை பிடிக்காவிட்டால், பரவாயில்லை. முட்டைக்கு பதிலாக இதர புரோட்டீன் உணவுகளை சாப்பிடலாம்.

க்ளுக்கோமானன் என்னும் நார்ச்சத்து, உடல் எடையைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகை நார்ச்சத்து நீரை உறிஞ்சி, நீண்ட நேரம் குடலில் தங்கச் செய்து, பல மணிநேரம் பசி எடுக்காதவாறு தடுப்பதோடு, குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவும். எடையைக் குறைக்க நினைப்போர் க்ளுக்கோமானன் சப்ளிமெண்ட்டுகளை எடுத்ததில், இந்த சப்ளிமெண்ட் எடுக்காதவர்களை விட அதிகமாக உடல் எடை குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும் மார்டன் டயட்டிலேயே மிகவும் மோசமான பொருள் உணவுகளில் சர்க்கரையை சேர்ப்பது. பெரும்பாலானோர் இந்த சர்க்கரையை தங்களது டயட்டில் அதிகம் சேர்க்கிறார்கள். ஆய்வுகளில் சர்க்கரையை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பசியின் போது ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், எப்போதும் தங்களைச் சுற்றி ஆரோக்கியமான உணவுகளை வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பசியும் கட்டுப்படும். அதுவே ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், பசியுணர்வு மேலும் அதிகரிக்கும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் நற்பதமான பழங்கள், நட்ஸ், பேபி கேரட், தயிர், வேக வைத்த முட்டை என்று சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

ப்ரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகளில் லாக்டோபேசில்லஸ் என்னும் நல்ல பாக்டீரியா அடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா உடலில் உள்ள கொழுப்புக்களின் அடர்த்தியைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே ப்ரோபயோடிக்ஸ் சப்ளிமெண்ட்டுகளை மட்டுமின்றி, அது நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம்.

கார்டியோ பயிற்சிகளுள் ஒன்றான ஏரோபிக் உடற்பயிற்சி கலோரிகளை எரிப்பதிலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த ஒன்று. முக்கியமாக இந்த ஏரோபிக் பயிற்சி வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தொப்பையைக் குறைக்க செய்வதோடு, இதர பகுதிகளில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களையும் கரைக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்துமே ஆய்வாளர்களால் நிரூபணம் செய்யப்பட்ட முக்கியமான சில எடையை இழக்கச் செய்யும் வழிகள். இந்த வழிகளை ஒருவர் மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தை விரைவில் காணலாம்.

உணவு திட்டம்
ஒரு பட்டினிக்கு பதிலாக சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் குறைந்த அளவு உணவை அடிக்கடி நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.
•காலை சிற்றுண்டி: : தானியம்,பால் மற்றும் ஒருபழம்
•மத்திய உணவை: •ஏதாவதுஒரு பழம், மில்க் ஷேக், சிறு பகுதிசாலட்,2 பிஸ்கட், போன்றவற்றிலிருந்து தேர்வு செய்யுங்கள்.
•மதிய உணவுமற்றும் இரவு உணவு: தாரளமான காய்கறிகள் பரிமாறல்,ரொட்டிஅல்லது அரிசிபோன்றதானியத்தின் ஒரு பகுதி,ஒரு பருப்பு, தயிர் அல்லது மோர்
•மாலைசிற்றுண்டிஒரு துண்டு டோஸ்ட் அல்லது ஒரு பழம், அல்லது அரிசிசெதில்களாக அல்லதுகாக்ரா
சரியான உணவுடன், நீங்கள் கலோரிகளை எரிக்க உடற்பயிற்சியும் தேவை மற்றும் மிகவும் முக்கியம் என்பதை கவனியுங்கள். உங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், நீங்கள் உடல் முழுவதற்கும். குறிப்பிட்ட உடல் பாகங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி எந்த வடிவத்திலும் ’45 நிமிடங்கள்,ஒரு வாரத்திற்கு ஐந்து முறை பயனுள்ள எடை இழப்பு பரிந்துரைக்கப்படுகிறது”.

ஒரு மாற்றுஉடற்பயிற்சிதொழில்முறையாளர் ஊர்மி கோதாரி, ஒரு வாரத்திற்கு ஐந்து முறை அதிக தீவிரஇடைவெளி பயிற்சி (HIIT) செயவதற்கு, அது கொழுப்பு மற்றும் அங்குல இழப்பிற்கும் உதவுவதால், பரிந்துரைக்கிறார். இது குறைந்த காலத்தில் நீங்கள் வழக்கத்தை விட ஒல்லியாக தோற்றமளிக்க செய்கிறது.

நீங்கள் உங்கள் கலோரிகளை மற்றும் கொழுப்பை எரிக்கவும், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கவும் நீங்கள் கார்டியோ மற்றும் எடை பயிற்சியை ஒரு கலவையாக இணைத்துக்கொள்வது கூட அவசியம். இது விரைவான முடிவிற்க்கு வழி வகுக்கும்,.

நீங்கள் முயலக் கூடிய சில வடிவங்கள்/முறைகள்
•ஜும்பா
•ஏரோபிக்ஸ் அடிகள்
•உட்புறத்தில் சைக்கிளிங்
•சக்தி யோகா

வளர்சிதைவை ஊக்குவிக்கும் உணவுகள்
உங்கள் வளர்சிதைமாற்றத்திற்க்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிடுவது வேகமாக எடை இழக்க உதவும். எனவே கீழ்கண்டவற்றை உங்கள் தினசரி உணவில் சேருங்கள்.
•கீரை
•இஞ்சி
•குடைமிளகாய்
•டோபூ
•புரோக்கோலி
•மசாலாக்கள்

கொழுப்பை எரிக்கும் உணவுகள்
சில உணவு பொருட்கள் நீங்கள் எடை இழப்பு உணவில் இருக்கும் போது கொழுப்பை எரிக்க உதவும் எனவே அவை உங்கள் உணவில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
•பச்சை மிளகாய்கள்
•பச்சை தேனீர்
•குளிர்ந்த தண்ணீரி

குறைந்த கலோரி உணவுகள்
எடை இழப்பு உணவில் இருக்கும் போது, ஒரு குறைந்த கலோரி மற்றும் உயர்ந்த புரோட்டின் உள்ள உணவுகளின் கலவையை சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் ஆற்றலைத் தக்க வைக்க உதவும் மற்றும் நீங்கள் பசி உணர்வையும் பெற மாட்டீர்கள். இங்கே நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில குறைந்த கலோரி உணவுகள்:
•கோஸ்
•வால் மிளகு
•பூண்டு
•பாதாம்
•வெள்ளரி
•தர்பூசணி

எடை இழப்பு கடுமையான முடிவுகளுடன் ஒரே இரவில் நடப்பது இல்லை என்பதை நினைவில் கொள்க. இது பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய படிப் படியான திட்ட முறையாகும். ஒரு பற்று பட்டினி உணவு அல்லது கனமான உடற்பயிற்சி வடிவங்கள் மூலம் அதிக எடை இழந்து,தினமும் வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகிற அத்தியாவசிய ஊட்டச்சத்து, உங்கள் உடலிலிருந்து அகற்றும் முடியும் அது மந்தமாக மற்றும் சோம்பேறிதனமாக உங்களை விட முடியும் மற்றும் உங்கள் உடல் செயல்பாட்டில் அபாயகரமானதாக விளைவுகளை ஏற்படுத்தும்.

எடை இழப்பு குறிப்புகள்
1. யதார்த்தமான இலக்குகளை அமைக்கவும்:
உங்களுக்கு எடை இழப்பு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். இது ஒரு விலையுடன் வருகிறது. நீங்கள் குறைந்த காலத்தில் அதிகபட்ச முடிவுகளை பெற ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வரிசைப்படுத்தி பின்பற்ற வேண்டும். எனினும் நீங்கள் அதை பற்றி யதார்த்தமானதாக நினைவில் கொள்ள வேண்டும். அதனால் ஒரு வாரத்தில் 5 கிலோ எடை இழக்க முடியாது. நீங்கள் இழக்க முடியும் என்றால் அதிகபட்சம் 1 வாரத்தின் (1) பிரிவின்படி 2 பவுண்டு ஆகிறது. இது ஒரு கடுமையான மாற்றமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக நீங்கள் மென்மையாக உணர உதவும். அந்த இறுக்கமான ஜீன்ஸ் நன்றாக உங்களுக்கு பொருந்தும்.
2. ஒரு முறை அமைக்கவும்:
நீங்கள் ஒரு வாரத்தில் எடை இழக்க செய்ய ஒரு ஸ்மார்ட்டான விஷயம் சாப்பிடும் போது உங்களது காலத்தை குறித்து வையுங்கள். வேகமாக முழு நிறைவு நிலை (2) மகிழ்ச்சி மற்றும் ஹார்மோன்களை தூண்டச் செய்கிறது. நீங்கள் ஒரே நிமிடத்தில் உங்கள் இறைச்சி விழுங்குதலின் போது, நீங்கள் நிறைய சாப்பிடுவதில் முடிவடையும். எனவே நீங்கள் ஒரு மெதுவாக சாப்பிட உங்களை 20 நிமிடங்கள் வரை நேரத்தை வைத்துக் கொள்ள உறுதி செய்யுங்கள்.
3. நிறைய காய்கறிகள் சாப்பிடவும்:
நீங்கள் ஒரு வாரத்தில் எடை குறைக்க முயற்சிக்கும் போது, அதில் காய்கறிகளின் மீதும் கவனம் செலுத்துவது நல்லது! மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உணவாக உண்பது சில பவுண்டுகளை கைவிட வேண்டிய ஒரு இயற்கையான மற்றும் விரைவான வழியாகும். இது ஒரு சில கலோரிகளைக் கொண்டு உங்களை நிரப்பும் நார் மற்றும் நீர் அதிகமாக உள்ளது. எந்த கூடுதல் கொழுப்பு இல்லாமல் செய்தபின் அவற்றை சமைக்கவும். மேலும் தாளிக்க சில எலுமிச்சை சேர்க்கவும்.
4. சூப்!
சூப்கள் எடை இழக்க ஒரு அற்புதமான யோசனையாகும். நீங்கள் கூடுதலாக சூப்கள் குடிக்கும் போது, நீங்கள் இன்னும் எடை இழக்க முடியும். மைன்ஸ்ட்ரோன், சீன வெற்றி-டன் மற்றும் பொடியாக்கப்பட்ட சூப்கள் பெரும் தேர்வுகளாக உள்ளன. ஒரு உணவின் ஆரம்பத்தில் சூப்கள் கொண்ட துவங்கும் போது நீங்கள் குறைவாக சாப்பிட இது விளைவாகும்,மேலும் உங்கள் பசியை கட்டுப்படுத்தும். அதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட சூப் கொண்ட, மெலிந்த இறைச்சி, மற்றும் புதிய காய்கறிகள் பயன்படுத்தி வீட்டில் செய்யலாம். அவற்றுக்கு கிரீமி சூப்கள் வேண்டும்.
5. முழு தானியங்கள்:
முழு தானியங்களின் தேர்வு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த வகையின் கீழ் பிரவுன் அரிசி, பழுப்பு ரொட்டி, கோதுமை, ஓட்ஸ் மற்றும் கோதுமை வீழ்ச்சி ஆகும். அவற்றில் குறைவான கலோரி உள்ளதால் உங்களை நிரப்பி மற்றும் மிகவும் கொழுப்பு அளவுகளை மேம்படுத்துகிறது.
6. பேகன் சாப்பிட வேண்டாம்:
பன்றி இறைச்சியை தவிர்க்கவும். நீங்கள் வீட்டில் ஒரு ரொட்டி செய்ய நீங்கள் விரும்பினால், முட்டை மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதில் இறைச்சி சேர்க்க வேண்டாம். இது 100 கலோரிகள் சேமிக்கும் மற்றும் சும்மா ஆண்டு இறுதியில் 10 பவுண்டுகள் இழக்க உதவும். நீங்கள் சரியாக சாப்பிட்டுக் கொண்டு மற்றும் உடற்பயிற்சி செய்தால் நீங்கள் ஒரு வாரத்தில் சில எடையை இழக்க முடியும்.
7. சர்க்கரையை நீக்கவும்:
சர்க்கரை நீங்கள் எடை இழக்க செய்ய முயற்சிக்கும் போது, அதை பற்றி யோசிக்க வேண்டிய கடைசி விஷயமாகும். இது கலோரிகள் மற்றும் எடை இழப்புக்கான உங்களது வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் நிறைய கொழுப்பினைக் கொண்டிருக்கிறது. இது அனைத்து கலோரிகளை எரிக்க கடினமாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் இனிப்பின் மீது காதல் என்றால், பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சுவையை சேர்க்க உங்களது பானங்களில் ஸ்ட்ராபெர்ரி, புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
8. க்ரீன் டீ குடிக்கவும்:
தினமும் கிரீன் தேநீர் அருந்துவது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உத்தி ஆகும். ஆய்வுகளின் படி பச்சை தேயிலை தற்காலிகமாக உங்கள் உடலில் கலோரிகளை எரிக்கும் இயந்திரமாக அதிகரிக்க முடியும் என்று அறியப்படுகிறது. இது வளர்சிதையை கூட்டுகிறது மற்றும் எளிதில் தொப்பையின் கொழுப்பினை நீக்குகிற ஒரு புத்துணர்ச்சி பானம் ஆகிறது.
9. சில யோகா செய்யலாம்:
யோகா மேலும் எடை குறைக்க ஒரு சிறந்த வழியாக உள்ளது. அமெரிக்க உணவு கட்டுப்பாடு சங்கத்தின் படி, யோகா பெண்கள் தினமும் செய்யும் போது குறைந்த எடையைப் பெறுகின்றனர். இது நடைமுறையில் நீங்கள் உண்ணுகிறீர்கள் என்றும் நீங்கள் கவனத்தில் இருக்க செய்கிறது மற்றும் மிகவும் சுய விழிப்புணர்வினை உருவாக்குகிறது.
10. கூடுதல் 100 கலோரிகளை எரிக்க:
நீங்கள் விரைவாக மற்றும் எளிதான பயிற்சிகள் ஒரு ஜோடி செய்து, நாள் முழுவதும் கூடுதலாக 100 கலோரிகள் எரிக்க முடியும். 20 நிமிடங்களில் ஒரு மைல் நடக்கவும் அல்லது 30 நிமிடங்கள் வீட்டை சுத்தம் செய்யவும். நீங்கள் 10 நிமிடங்கள் ஓடுவது அல்லது சிறிது காலம் ஸ்கிப்பிங் கயிறு பயன்படுத்தலாம். இந்த கட்டுபாடு, நீங்கள் டயட் இல்லாமலே ஒரு வாரத்திற்குள் எடை இழக்க உதவும்.
11. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடவும்:
உணவு உண்பது ஆரோக்கியமான சிற்றுண்டி மேலும் எடை இழக்கும் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உங்கள் பையை நீங்கள் வெளியே செல்வதென்றால் ஒவ்வொரு முறையும் சத்தான ஏதாவது ஒன்றை எடுத்து செல்வதை உறுதி செய்யுங்கள். பழங்கள், கிரானோலா பார்கள் அல்லது வெற்று பாப்கார்ன் ஒரு பாக்கெட் ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. இந்த குறைந்த கலோரி சிற்றுண்டி அதிக கலோரி விருந்தினை (3) விட நன்றாக இருக்கும்.
12. உங்கள் பகுதிகளை குறைக்கவும்:
ஒரு வாரத்திற்குள் எடை இழக்க முயற்சி செய்தால், அது உங்கள் தட்டின் அளவினை குறைக்க புத்திசாலித்தனமாக இருக்கும். குறைவான உணவு குறைவான கலோரி பொருளாகும். மற்றும் குறைந்த கலோரி எடை இழப்பதற்கு அர்த்தம். நாம் சாப்பாட்டின் போது, நாம் அடிக்கடி நாம் கருதப்படுகிறதை விட அதிகமாக சாப்பிட முனைகின்றன. அரை பகுதிகளாக வெட்டி சிறிய பகுதிகளை தேர்வு செய்ய உறுதி செய்யுங்கள். நீங்கள் வீட்டில் சாப்பிடும் போது, நேற்றைய மிச்சத்தை விட்டு வைக்க நினைவில் கொள்ளுங்கள்.
13. தொலைக்காட்சி முன் சாப்பிட வேண்டாம்:
சாப்பிடும் போது தொலைவில் அனைத்து கவனச்சிதறல்களையும் தவிர்க்கவும். தொலைக்காட்சி அணைத்து; நீங்கள் சாப்பாட்டு மேசையில் இருக்கும் போது ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கை படிப்பதை நிறுத்துங்கள். உணவு மற்றும் வாசனையான பருக்கை மீது கவனம் செலுத்துங்கள். இந்த பழக்கம் விழிப்புணர்வு அதிகரிக்கும் மற்றும் உன்ங்களுக்கு இது உதவும்.
14. எந்த மிருதுவானது, பாலேடு அல்லது கிரீம்கள்:
இந்த 3 சி உங்கள் தட்டில் வெளியே இருக்க வேண்டும். சுவையூட்டிகள், பொரித்த உணவுகள் அல்லது கெலரிஷியஸ் பரவுகிறது. அது ரொட்டி மற்றும் ரோல்ஸ் வரும் போது சீஸை தவிர்க்கவும். வீட்டில் ஏதாவது சமையல் செய்யும் போது கூட மயோனைசே அல்லது வெண்ணெய் சேர்க்க வேண்டாம். எலுமிச்சை மற்றும் மிளகு சுவைக்காகவும். கிரீம்களுக்கு பதிலாக சூப்களை சார்ந்து போகலாம்.
15. எச்சரிக்கையுடன் சாப்பிடவும்:
நீங்கள் பட்டினி கிடப்பதற்கு முன்பு சாப்பிடவும் நீங்கள் முழுமையாக உணருவதற்கு முன் நிறுத்தவும். நாம் பட்டினியின் போது, நாம் வேண்டும் அளவை விட சாப்பிட முனைகின்றோம். இது ஒரு பேரழிவு ஆகும். மெதுவாக மற்றும் நீங்கள் திருப்தியடையும் முன்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க இது உதவுகிறது.
16. தூக்கம்:
நீங்கள் தூங்கும் போது, நீங்கள் குறைவான எடையை பெற்கிறீர்கள். இப்போது இந்த ஆச்சரியம் இருக்கலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை. எடை இழக்க, நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் இரவில் வேலை செய்யும் ஒருவராக இருந்தால், மீண்டும் யோசியுங்கள். உங்கள் பையோரிதம்ஸ் ஆஃப் இருக்கும் போது, நீங்கள் இருக்க வேண்டியதை விட மிக குறைவான உணவினை உண்ண முடியும். தூக்கம் இழக்கும் போது ஹார்மோன்கள் உற்பத்தியை குறைக்கும் மற்றும் தொப்பை கொழுப்புக்கு (4) வழிவகுக்கும், உங்கள் உடல் வடிவம் பாதிக்கும்.
17. கொழுப்பு சாப்பிடவும்:
உடல் கொழுப்பு எரிக்க, நீங்கள் கொழுப்பு சாப்பிட வேண்டும். ஆமாம், நீங்கள் சரியாக கேட்கிறீர்கள்! நல்ல கொழுப்புள்ள மீன்களில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் வெண்ணெய் பழங்கள் அடங்கும். அவை நாள் முழுவதும் முழுமையாக உங்களை வைக்கும் சத்துக்களை கொண்டுள்ளது.
18. வைட்டமின் சி:
வைட்டமின் சி அனைத்து எடை இழப்பு திட்டங்களிலும் முக்கியமான ஒன்று. இந்த வகை அடங்கி பழங்கள் திராட்சைப் பழங்கள், ஆரஞ்சு, கிவி போன்றவை. அவை ஆரோக்கியமாக உங்கள் உடலை வைத்திருக்கிறது. வைட்டமின் சி இறுதியில் எடை இழப்பினை ஏற்படுத்துகிறது, இது எரிபொருளாகி உடல் கொழுப்பினை எரிக்கிறது.
19. குறுகிய வெடிப்பு உடற்பயிற்சி:
ஒரு நாளுக்கு நீங்கள் 100 க்ரஞ்சஸ் சிறந்த வயிற்று பகுதியை கொடுக்கும் . ஆனால் நீங்கள் மேலே இருக்கும் கொழுப்பு அடுக்கு பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே விரும்பிய முடிவுகளை பெற, உடற்பயிற்சி சிறிய வெடிப்புகள் முயற்சிக்கலாம்.அது உடல் கொழுப்பினை எரிக்கிறது. கார்டியோ சுற்று 15 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் ஒரு நல்ல யோசனை போல தெரிகிறது. நீங்கள் பிளாங் உடற்பயிற்சியை முயற்சி செய்ய முடியும். நாள் முழுவதும் உங்களை செயலில் வைத்திருக்க உதவுகிறது.
20. ஜிம் வெளியே யோசியுங்கள்:
இது உடற்பயிற்சி வரும் போது, எப்போதும் உடற்பயிற்சிக்கு வெளியே நினையுங்கள். விறுவிறுப்பான தரப்பினரையும் சென்று அடையும், ஸ்கிப்பிங் கயிறு பயன்படுத்தி லிஃப்ட் ஏற அல்லது வீட்டில் சில சுத்தம் செய்ய, வீட்டில் சில கார்டியோ செய்யலாம். இந்த அதிக கலோரியை எரிக்க நீங்கள் வேகமாக எடை குறைக்க உதவும். உண்மையில் கலோரிகள் எரிக்க முடியும் மேலும் உடற்பயிற்சி நடவடிக்கை சேர்க்கும் போது (5). இது நீங்கள் நீண்ட நாட்கள் இணைத்துக்கொள்ள முடியும் என்று ஒன்று உள்ளது.
21. தண்ணீர் நிறைய குடியுங்கள்:
தண்ணீர் 2 முதல் 3 லிட்டர் குடிக்கும் பழக்கம் ஒவ்வொரு எடை இழப்பு திட்டத்துக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு உணவினை துவங்குவதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் மற்றும் மற்றொரு கண்ணாடி தண்ணீருடன் அதை முடித்துவிடுவேண்டும். நீங்கள் வெளியே நுழைவதற்கு முன் உங்கள் பையில் ஒரு குவளை தண்ணீர் எடுத்து செல்ல உறுதி செய்யுங்கள். மேலும் நீர் மற்றும் சோடா அல்லது மற்ற கலோரி பூர்த்தி பானங்களை குறைவாக குடிக்கவும் மக்கள் எடை (6) இழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
22. நடைப்பயிற்சி அல்லது ஜாக்:
நடைபயிற்சி மற்றும் ஜாகிங் உடற்பயிற்சி இல்லாமல் பவுண்டுகள் சிந்த ஒரு சிறந்த வழி உள்ளது. நீங்கள் எளிதாக (7) நடைபயிற்சி மூலம் மைலுக்கு 100 கலோரி எரிக்க முடியும்.
23. காலையில் உடற்பயிற்சி:
பவுண்டுகளை எரிக்க ஒரு ஸ்மார்ட்டான வழி காலையில் உடற்பயிற்சி செய்வது ஆகும். அதிக எடையுள்ள பெண்கள் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, வாரத்திற்கு 4 மணி வரை செல்ல காலை உடற்பயிற்சிகளைச் செய்வதால் இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுத்தது. (8)
24. லிஃப்ட் மேலும் எடைகள்:
பளு தூக்கும் பயிற்சி உடல் கொழுப்பு இழக்க ஒரு ஸ்மார்ட்டான வழியாகும். இது உடலில் கொழுப்பினை எரிக்கும் மற்றும் ஒல்லியான தசைகளை உருவாக்க உதவும். இது அதிக தசை விரைவாக வளர்சிதை மாற்றம் (9) பொருள் என்பது உண்மை தான். இது நீங்கள் நன்றாக சாப்பிட்டாலும் அனைத்து கலோரிகளையும் கட்டுக்குள் வைக்கும்.
25. 80/20 உடை பின்பற்றவும்:
அதிகப்படியாக 80% ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் மற்றும் 20% வேண்டாம். இது நீங்கள் அந்த வாரம் முழுவதும் அதிக கரிம உணவுகள் சாப்பிட்டு மற்றும் ஜங்க் உணவினை வார இறுதியில் ஒரு வேளை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தம்! இந்த குறைவான கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேலை நிறுத்தங்களுக்கு உதவும்.
26. நேர்மறை மற்றும் மன அழுத்தம் குறைவாக இருக்கும்:
அளவில் கவனம் செலுத்த வேண்டாம்; அது எப்படி என்பதில் கவனம் தேவை. நேர்மறை அம்சங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்கள் எடை இழப்பு அனுபவத்தை மேம்படுத்தி, சுய மரியாதையை கட்டுக்குள் வைக்கும்.
இந்த குறிப்புகளை இன்று பின்பற்றவும் மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்! நாம் இந்த இடுகை உதவியால் எப்படி என்று பார்த்தோம். கீழே உள்ள ஒரு பெட்டியில் கருத்துக்களை கூறுங்கள்!

Uncategorized

படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி

தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.
th
வாரியார் சுவாமிகள், ” ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

Uncategorized

புரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்?

பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்.’மனிதனுக்குச் சிறந்த உணவு சைவ உணவா, அசைவ உணவா என்னும் சர்ச்சை காலங்காலமாகவே இருந்து வருகிறது. ஆதி மனிதன் பழங்கள், கிழங்குகள், காய்களைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்;. நெருப்பின் பயனை அறிந்த பின்னர்தான்  மாமிச உணவை உண்பவனாகவும் மாறினான் என்று சொல்வார்கள். அவரவருக்கு உரிய உணவுப்பழக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதெல்லாம், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதுபோல் ,வருடத்தில்  ஒரு மாதம்  மாமிச உணவிலிருந்து வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வந்திருக்கலாம்.

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். 

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்` என்பர்; “பட்சம்` என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. 

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 

புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். 

மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.


நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். 

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. 

பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். 

மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். 

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். 

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார். 

புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்…

ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

சஷ்டி-லலிதா விரதம் –  புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

Uncategorized

குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு, மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான்.ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம். குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 • குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
 • குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
 • குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
 • குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
 • குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
 • குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
 • குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
 • குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
 • குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
 • குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
 • குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
 • குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.