ஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், பொது, மருத்துவம் - Medical

பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 

பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

மனிதன் வாழ்நாளில் அவன் பார்த்த காட்சிகளில் தன் கண் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், தாங்கள் அன்பு செலுத்தியவர்கள் பறவைகள் மிருகங்கள் திடீர் என்று ஒருநாள் நோய் விபத்து என்று மரணத்தை சம்பவிக்கிறார்கள். சிலர் வயது முதிற்சியினால் மரணம் அடைகிறார்கள். இதனைப் பார்த்த மனிதன் தன் வாழ் நாளை நீடிக்கவும் நீண்ட காலம் வாழவும் ஆசைப்பட்டான். மற்றும் தன் கண்முன் இளமை மாறியும் வயோதிகத்தன்மை ஏற்படும் முதியவர்களைக் கண்டான். என்றும் இளமையோடும் நீண்டநாள் வாழமுடியாத? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான். இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார்? என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். உள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது ? அது நிலைப்பட என்னசெய்யவேண்டும் என்று பல விதங்களில் ஆய்வுகளை செய்தனர். ஆய்வுகளின் தங்கள் அனுபவங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இவ்வகையில் சித்தர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதிலும் புறம், அகம் என்று இரு பிரிவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உடலோடு இருப்பதற்கு கற்பம் சாப்பிடவேண்டும் உண்மையுடன் பத்தியம் இருக்கவேணும். உப்புகளைக் கட்டவேனும் குரு என்னும் முப்பு முடித்துக் கொள்ளவேணும் இவ்வாறு இருப்பவனே சித்தனாம்.இவனே உலகில் நீண்டநாள் இருப்பானே.என்று சொல்கிறார். கருவூராரின் இப்பாடலில் இருந்து அறியலாம் மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையே மனிதனை கற்பம் யோகம் போன்ற வழிகளை தோற்றுவித்தது எனலாம் சரி இக்காராணம் மட்டுமே கற்பம் கொள்ள காரானமாயிடுமா.

மனிதன்தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமானோர் பலியாயினர். இப்படியான நோய்களை என்னவென்று அறியாது பேய், பிசாசு, தெய்வக்குற்றம் என இவர்களே அதற்கு ஒரு பெயரிட்டுக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கொண்ட மக்கள் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களை நாடிச் சென்றனர்.

இவர்களின் அறியாமையையும், நோயின் தாக்கத்தால் அவர்கள் படும் வேதனைகளையும் கண்ட சித்தர்கள் தங்களின் தவப் பயனால் மனித உடல்கூறுகளை கண்டறிந்தனர். இவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்தனர். பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு கோள்களின் ஆதிக்கம் மிகும்போது மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டனர். இதனால் புரியாத நோய்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர். மனித உடம்பினுள் உள்ள எலும்பு, தசை, நரம்பு இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதனால் நாடியைப் பிடித்துப் பார்த்தவுடன் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சித்தர்கள் கண்டறிந்தனர். நோய்க்கு மருத்துவம் செய்வதை விட அந்த நோய் உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அகற்ற மருத்துவம் செய்தனர். இதற்கு மூலிகைகளைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு ஆதி காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்த மருத்துவம்தான் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம்.

இந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.

சித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.

அவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்!,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு?’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.

”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம்?, அதனால் ஆபத்து விளையாதா?” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்?,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.

இந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.

நாட்டை ஆளும் மன்னர்களுக்கு என தனியாக ராஜ வைத்தியர்கள் நியமிக்கப் பட்டனர். சாதாரண மக்களுக்காக பல வைத்திய சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வந்தது.

பின்னாளில் நம் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்ததால் அவர்கள் அல்லோபதி மருத்துவத்தை நம்நாட்டில் புகுத்தினர். அதோடு எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளில் சிலவற்றை களவாடி ஆங்கில மருத்துவத்தில் இணைத்துக்கொண்டனர். இதனால் ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகியது. மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

குறிப்பாக கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் இன்றும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சித்த மருத்துவம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் இந்திய மருத்துவ முறையின் சிறப்புகள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை. மேலும் பல மருத்துவச் சுவடிகள் சுயநலவாதிகள் சிலரிடம் சிக்கி வெளியேறாமல் அழிந்து வருகிறது.

மேலும் இந்திய மருத்துவத்திற்கென சரியான பாடசாலைகள், கல்லூரிகள் இல்லாமல் குருகுலக் கல்வியாக மட்டுமே இருந்து வந்தது. இதனால் இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை. இந்திய மருத்துவம் கற்றவர்களும் சுயநலவாதிகளாக செயல்பட்டதும் இந்திய மருத்துவம் வளராததற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக இந்திய மருத்துவம் மிகவும் நுட்பமான மருத்துவ முறையாகும். நோயின்றி வாழ, வருமுன் காக்க, வந்தபின் சிகிச்சை அளிக்க என வகைப்படுத்தி மருத்துவமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதை முறையாகக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் இன்று 30 வயது இளைஞன் கூட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகளால் தாக்கப்பட்டு அவதிப்படுகிறான். இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் அந்நியநாட்டின் மீதுள்ள மோகமே எனத் தோன்றுகிறது.

இயற்கைக்கு மாறுபட்ட உணவுகள் உதாரணமாக ரசாயனம் கலந்த குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் என வகைவகையாக உண்டு, உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் வேலை செய்து, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது இதற்கு முதற் காரணம்.

இயற்கையை மறந்துபோன மனிதன் இயற்கை மருந்துகளையும் மறந்து நாகரீக முன்னேற்றத்திற்கு ஆட்பட்டு சுகாதாரமற்ற வேகமான வளர்ச்சி யடைந்ததால் நவீன அதிவேக சிகிச்சைகள் தேவைப்பட்டன. இந்த சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் எளிமையாக நடைபெறுவதால் இந்திய மருத்துவத்தை மக்கள் நாடாமல் ஆங்கில மருத்துவத்தையே நாடினர்.

ஆனால் அவர்களால் முழுமையாக குணமடைய முடியாமல் உடல் ரீதியாக பக்க விளைவுகளுக்கு ஆளாயினர்.

உதாரணமாக அண்மையில் சிக்குன் குனியா என்ற நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து கிடைக்கவில்லை. ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் இருந்தன. சித்த மருத்துவத்தில் இதனை மொழி முறிச்சான் காய்ச்சல் என அழைக்கின்றனர். சித்த மருத்துவத்தின் மூலமே இந்த நோயைத் தீர்க்கும் சரியான மருந்து கண்டுபிடித்தனர். இந்த மருந்துதான் நோயை முழுமையாக அழித்தது.

இதுபோல் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்திய மருத்துவத்திற்கு உண்டு.

’சித்தமருத்துவர் நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம்’,- தமிழக உயர் நீதி மன்ற சமீபத்திய தீர்ப்பும், அதை செயல்படுத்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. பெருவாரியான சித்த மருத்துவரிடையே வரவேற்பையும் நவீன மருத்துவரிடையே கசப்பான உணர்வையும் பெற்றிருக்கிறது இந்த அரசாணை. இது குறித்த விவாதமோ, ஆங்காங்கே பெரிதாய் எழத் தொடங்கியுள்ளது. வர இருக்கும் ஐஎம்ஏ தேர்தலில் இந்த ஆணையை அரசு திரும்ப பெற வைக்க முழக்கங்கள் குறுந்தகவல்கள் வழியாக தமிழகமெங்கும் பரவலாகி வருகின்றன.
சமீபத்தில் ஐஎம்ஏ அந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு, அந்த அரசாணையை தற்காலிகமாக உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? இதை முழுமையாக புரிந்து கொள்ள சில முன்னூட்டங்களும் சில வரலாறும் அவசியம் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

சித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.

அவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்!,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு?’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.

”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம்?, அதனால் ஆபத்து விளையாதா?” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்?,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.

இன்னும் கூடுதலாய் சில நவீன மருத்துவர்கள், சித்த மருத்துவம் பயிலும் மாணவர்க்கு எதற்கு அனாடமி, பிசியாலஜி(உடல்கூறு/உடல் இயங்கியல்)? அதையெல்லாம் பாட திட்டத்திலிருந்து நீக்குங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். போலி மருத்துவரை பிடிக்க முனைந்த காவல்துறையினரிடம் சித்த மருத்துவரின் பட்டியலையும் கொடுத்து, காவல் துறையினர், ”நீங்கள் ஏன் ஸ்டெத் வைத்திருக்கிறீர்கள்?,” என விசாரணையைத் துவங்கியஅலமும் கூட நடந்தேறியது.

1985 களில், தமிழக அரசு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு சித்த மருத்துவர் பணியாற்ற ஆணை தந்தது. அதன் நோக்கு பாரம்பரிய அனுபவமான சித்த மருத்துவம் அதை அறிவியலாய்க் கற்ற சித்த மருத்துவ பட்டதாரிகளும் நவீன மருத்துவரும் இணைந்து விரைவாக, பூரணமாக தமிழகத்தின் கிராமப்புற ஏழை எளிய மக்களைக் நலம் காக்க வேண்டித்தான். ஆனால் இன்றுவரை பெருவாரியான முதன்மை மருத்துவ நல நிலையங்களில், அந்த ஒருங்கிணைப்பு பணியிலோ பழக்கத்திலோ இல்லவே இல்லை. ’என்க்கு தெரியாது..வேண்டுமென்றால் போய்க் கொள்ளுங்கள்’-என்ற விமரிசனத்துடன்தான் நவீன மருத்துவர், ”சித்தமருத்துவம் பார்க்கட்டுமா?”- என கேட்கும் நோயரிடம் பரிந்துரைக்கிறார். பரிதாபமான நோயாளியோ ஒண்ணும் புரியாமல், ”அலோபதி..வெங்டாசலபதி..எல்லாம் பார்த்தாச்சு..சித்தாவும் பார்க்கலாமா?,” என்ற அங்கலாய்ப்பு நிலைப்பாட்டில் தான் அதே கட்டடத்தில் ஒரு மூலையில் உள்ள சித்த நிலையத்திற்கு நுழைகிறார். இன்றுவரை தமிழகத்தின் இந்த நிலைப்பாடிருக்க இதே நிலையில் சீனத்தில் ஒரு காட்சியைப் பார்ப்போம்

”நாஞ்சிங்”- சீனாவில் ஷாங்காய்க்கு அருகில் உள்ள சீன மாகாணம். அதில் ஒரு சீன மருத்துவமனை. அதிரத்தக் கொதிப்புடன் உள்நுழைந்த ஒரு நோயாளிக்கு நுழைந்தவுடன் கூட்டாக மருத்துவர்களின் பரிசோதனைக்கிப் பின், அவசரத்திற்கு நவீன மருந்துகள் கொடுக்கப்பட, ஒரு சில மணித்துளிக்குப் பின், இந்த ரத்தக் கொதிப்பு வராது இருக்க, படிப்படியாக குறைய பாரம்பரிய சீன மருத்துவம் கொடுக்க, இன்னொரு சீன மருத்துவர் வந்து, மன அழுத்தம் குறைக்க டாய்-சீ நடனம் சொல்லித்தர முடிவில் வெளிவரும் அந்த சீன நோயாளி முகத்தில் தன் நோய் குறித்த கவலை முழுமையாய்த் தீர்ந்த புன்னகை. எதற்கெடுத்தாலும் சீனத்தை உதாரணம் காட்டும் நம்மவருக்கு இந்த மருத்துவ வழிமுறை ஏன் இன்னும் பிடிபடவில்லை. அங்கு ஒவ்வொரு சீன மருத்துவரும் நவீன மருத்துவம் தன் பட்டப்படிப்பிலேயே படிக்கின்றார். ஒவ்வொரு நவீன மருத்துவரும் சீனமருத்துவம் கற்றாக வேண்டியதும் கட்டாயம்.

சித்த மருத்துவம் என்பது தமிழரின் பாரம்பரிய அறிவியல். பல்லாயிரம் ஆண்டு அனுபவக் கோர்வை. தமிழ் மற்றும் தமிழர் தொன்மை குறித்த ஆதிச்சநல்லூர் தரவு போல, முகஞ்சதாரா ஆவணம் போல இன்னும் அதிகம் பிரிக்கப்படாத அறிவியல். பெரும்பாலான நவீன மருத்துவர்கள் பன்னாட்டு மருந்துக் கம்பெனியின் விற்பனையாளர் கூறும் கூற்றை நம்பும் அளவிற்கு, நம் நாட்டு அனுபவ அறிவை, தம் நுண்மாண் நுழைபுலத்தால் அறிந்து கொள்ள ஆய்ந்து கொள்ள அங்கீகரிக்க மறுப்பது வேதனை.

லுக் மாண்டேங்கர். இன்று உலகை அச்சுறுத்தும் எச்.ஐ.வி. கிருமியை முதலில் கண்டறிந்த, மருத்துவத்திற்கான நோபல்பரிசு பெற்ற மருத்துவ விஞ்ஞானி. கடந்த ஆண்டில் கேமரூன் நாட்டின் தலைநகரான யுந்தேவில் நடைபெற்ற ஒரு மாபெரும் பாரம்பரிய மருத்துவர் மாநாட்டில், அவர் வலியுறுத்திச் சொன்ன விஷயம் இது. ”எச்.ஐ.வி.வைரஸை நேரடியாகக் கொல்லும் மருந்தை எடுக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், உடல் நோய் எதிர்ப்பார்றலை உயர்த்தி அந்த கிருமிகளைச் செயலிழக்க வைக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கான அணுகுமுறை பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உள்ளது. கூட்டு முயற்சியாய் உழைத்தால் பெரும்பாலோரைக் காக்க முடியும்”.இந்த அறிஞரின் கூற்று மிக உண்மையானது. அதற்கான தேவை அதிகரித்திரிக்கும் காலம் இது.

வரலாற்றைப் பார்த்து சித்த மருத்துவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இன்றல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம். இது மருத்துவம் மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவே இருந்துவரும் ஓர் சேவை. அதன் வீச்சு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ. அன்று ஆசிவகமும் சாங்கியமும் பேசிய போது, வேதங்களுடன் மோதியது சித்த மருத்துவம். சமணம் பேசிய போது பக்தி மார்க்கத்தில் வேறு போராட்டம். நாட்டு மருத்துவமாய் இருந்தபோது ஆங்கிலேயத்துடன் போராட்டம். இன்றோ பன்னாட்டு மருந்துச் சந்தையுடன் இறுதிப் போராட்டம்.

இந்த இறுதிப் போராட்டத்தில் காப்பாற்றப்பட வேண்டியது மருத்துவர்கள் அல்ல. நம் நாட்டு சாமானிய மனிதர்கள். அதற்கு, இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். சமூக அக்கறையுள்ள இரு துறை மருத்துவருக்குமான இணக்கம் காலத்தின் கட்டாயம். நம் நாட்டைப் பீடித்திருக்கும் பன்னாட்டு மருந்துச் சந்தை கலாச்சாரத்தின் பிடியிலிருந்து விலக்க இருதுறை மருத்துவரும் நம் எளியவர் வறியவர் நலம் காக்க இணைந்து செயலாற்ற வேண்டும். பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைச் சொல்லும் அதே நேரத்தில், ஷ்கிமிக் அமிலம் நிறைந்த தக்கோலத்தை தேநீராக்கிச் சாப்பிடச் சொல்லவும் தயங்கக் கூடாது. ஏனென்றால், மருத்துவரிடையே உள்ள ’நானே கடவுள்!’ என்ற இந்த போட்டி தெரியாமல், நலம் தேடி அப்பாவியாய்க் காத்து நிற்கின்றனர் எட்டு கோடி தமிழக பக்தகோடிகள்.