Uncategorized

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்

உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய்முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.


கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..


எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை, இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..


அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்

Advertisements
Uncategorized

கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்

யணங்கள் இப்போதும் எப்போதும் பலருக்கும் உவப்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. தனது வாழ்நாளில் தனக்குத் தெரிந்த எல்லைகளை இன்னும் இன்னும் விரிவாக்கி பல்வேறு வகையான நிலங்களையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் சந்திப்பது என்பதுபயணங்கள் மட்டுமே தரக்கூடிய போதை. இன்றைய நிலையில் பயணம் என்பது மிக எளிதான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால் 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு. 14, 15 நூற்றாண்டில் பயணம்மேற்கொண்டவர்கள் எவற்றையெல்லாம் சமாளித்திருப்பார்கள்பணத்தைவிடப் பயணத்திற்கான அடிப்படை விஷயங்கள் வரைபடமும் (மேப்) திசைகாட்டியும்தான் (காம்பஸ்). இப்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கும் ஸ்மார்ட்போன் இந்த இரண்டையும் ஒன்றாக்கி உள்ளங்கையில் கொடுத்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெகஸ்தனிஸும் மார்கோபோலோவும் யுவான் சுவாங்கும் உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்தபோது அவர்களது கைகளில் இருந்த மேப் எப்படி இருந்திருக்கும்? அன்றைய காலகட்டத்தில் பயணங்களின் வழியேதான் உலகம் அறிந்திராத பல புதிய புதிய நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டுபிடிப்பதற்காகவே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி ஒரு பயணத்தில்தான் தவறுதலாக அமெரிக்க கண்டத்தை கண்டறிந்தார் கொலம்பஸ். இன்று வரை உலக வரலாற்றில் அது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு.

15-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஐரோப்பாவைச் சார்ந்த பல்வேறு நாட்டினரும் உலகின் பல்வேறு மூலைக்கும் வழி கண்டுபிடிப்பதை முக்கியச் செயலாகச் செய்து வந்தனர். அதுவரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்த பயணிகளின் குறிப்புகளின்படி வளமான பகுதிகளுக்குச் செல்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அந்தப் பயணிகளின் குறிப்புகளைத் தாண்டியும் பல்வேறு நிலப்பரப்புகள் ஐரோப்பியர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. அப்போதைய பயணிகளின் குறிப்புகளின்படி ஆசியாதான் உலகிலேயே வளமான பகுதியாக நம்பப்பட்டது. 1492-ம் ஆண்டு ஆசியாவுக்கு விரைவாகச் சென்றடையும் வகையில் ஒரு பாதையைக் கண்டுபிடிக்கப் பயணத்தை மேற்கொண்டார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் தவறுதலாகப் போய் சேர்ந்தது அமெரிக்க கண்டம். இதே போன்று மீண்டும் மீண்டும் நான்கு முறை பயணம் செய்தும் அவர் ஆசியாவை அடையவே இல்லை. அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளைக் கண்டறிந்து ஐரோப்பாவுக்குக் காட்டினார். அதுவரை அப்படி ஒரு நிலப்பரப்பு இருப்பதே பலருக்கும் தெரியாது. இதனால், கொலம்பஸ் அமெரிக்காவை மட்டும் கண்டறியவில்லை; புதிய உலகத்தையே கண்டறிந்தார் எனப் புகழ்வதுண்டு.
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க கண்டங்களை மேப்பில் குறித்தது வால்ட்சீமூல்லரின் மேப்தான். மார்டெல்லஸின் மேப்பில் அமெரிக்க கண்டம் பற்றிய சித்திரிப்பு இல்லை. ஆனாலும் உலக வரைபடத்திற்கான கூறுகள் அனைத்தும் உண்டு. மேலும் பல இடங்கள் இதில் வரக்கூடும் என அதனை விரிவாக்கம் செய்யக்கூடியதாக உருவாக்கியிருக்கிறார் வன் மார்டெல்லஸ் என்கிறார் வன் துசர். வால்ட்சீமுல்லர் மட்டுமல்ல கொலம்பஸும் மார்டெல்லஸின் மேப்பினால் தாக்கம் பெற்றவர்தான். இருவரும் இத்தாலியைச் சார்ந்தவர்கள் என்பதால் கொலம்பஸ் கண்டிப்பாக மார்டெல்லஸின் மேப் பற்றி கேள்விப்பட்டிருப்பார். இந்த மேப் தயாரிக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டே கொலம்பஸ் தனது பயணத்தில் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்தார். அட்லான்டிக் பெருங்கடலின் வழியே மேற்கில் செல்வதன் வழியே ஜப்பானையும் அதற்கடுத்த ஆசியாவையும் அடைவதே இவர்கள் குறிக்கோளாக இருந்தது. அதற்கு மார்டெல்லஸின் மேப்பும் ஒரு காரணம். கொலம்பஸின் முதல் பயணத்தில் ஒரு தீவில் இறங்கியதும் பலரும் ஜப்பான் என்றே நினைத்துள்ளனர்.
1492-ம் ஆண்டு ஆசியாவுக்கு விரைவாகச் சென்றடையும் வகையில் ஒரு பாதையைக் கண்டுபிடிக்கப் பயணத்தை மேற்கொண்டார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் தவறுதலாகப் போய் சேர்ந்தது அமெரிக்க கண்டம். இதே போன்று மீண்டும் மீண்டும் நான்கு முறை பயணம் செய்தும் அவர் ஆசியாவை அடையவே இல்லை.


கிபி 1491-ல் ஃபுளோரன்ஸைச் சேர்ந்த ஹென்றிகஸ் மார்டெல்லஸ் உருவாக்கிய மேப்தான் கொலம்பஸின் பயணத்துக்கு வழிகாட்டியாகவும் உந்துதலாகவும் இருந்திருக்கக்கூடும் எனச் சொல்கின்றனர். 527 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த மேப், தற்போது ஆய்வாளர்களால் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதனை டிஜிட்டலுக்கும் மாற்றியுள்ளனர். 1491-ல் உருவாக்கப்பட்ட அந்த மேப் 1962-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தது. அதன்பிறகு தற்போதுதான் அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெய்னெகே ரேர் பு & மூலப்பிரதி நூலகத்தைச்சார்ந்த ஐந்து ஆய்வாளர்கள் மார்டெல்லஸின் மேப்பை ஆய்வு செய்துள்ளனர். மேப்பில் பல்வேறு தகவல்களும் படங்களும் தெளிவற்ற முறையில் அழிந்துபோய் இருந்துள்ளன. மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜிங் எனும் முறையின் மூலம் மேப்பின் பெரும்பான்மையான தகவல்களை மீட்டெடுத்துள்ளனர். மார்டெல்லாஸின் மேப் 1491 ம் ஆண்டில் மேற்கில் அட்லான்டிக்கிலிருந்து கிழக்கில் ஜப்பான் வரை விரிந்துள்ளது. இதற்கிடையில் இருக்கும் நிலப்பரப்பையும் கடற்பரப்பையும் ஓரளவு சரியாகவே சித்திரித்துள்ளார். ஆசியாவைச் சித்திரித்தது மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களையும் குறித்துள்ளனர்
மேலும் இந்த மேப்பில் சுவாரஸ்யமான விஷயமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆறுகளின் அமைப்புகள், இடங்களின் பெயர்கள் மிகத்துல்லியமாக இருக்கின்றன. ஒருவேளை இதனை தாலமியின் புவியியல் புத்தகத்தில் உள்ள எகிப்டஸ் என் ஒவெலோ மேப்பில் இருந்து பெற்றிருக்கலாம் என்கின்றனர். மேலும், எத்தியோப்பாவைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் ஃபுளோரன்ஸ் கவுன்சிலுக்கு 1441 ம் ஆண்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம். மார்டெல்லசின் மேப்தான் அவருக்குப் பின் வந்த உலகின் மற்ற வரைபடத் தயாரிப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருந்திருக்கும் என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைவரான வன் துசர்வ். உதாரணமாக கி.பி. 1507-ல் உலக வரைபடம் உருவாக்கிய ஜெர்மன் வரைபடத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லரின் மேப்பும் தற்போதைய வரைபடத்துடன் ஒற்றுப்போகிறது.


இதனிடையே, கொலம்பஸ் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. அவரின் பயணம் கீழே உள்ள கரீபியன் தீவுகளோடு முடிந்துவிட்டது என்றும் வரலாற்று ஆதாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, அப்போதைய உலக வரைபடங்களின் மூலம் வரலாற்றின் முரண்களையும் பயணங்களின் விளைவுகளையும் பயணத்துக்கான உந்துதலையும் பெற முடியும். பயணங்களுக்கான வழிகாட்டியாக எப்போதும் இருப்பது மேப்தான். அதற்கான வரலாறும் முக்கியமானதுதான்.
Uncategorized

பயனுள்ள இணையதள முகவரிகள்

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டாஅடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) பதிவேடுவிவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும்இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
5) சாதி சான்றிதழ்/ வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும்வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும்பஸ் பயண சீட்டு
http://www.tnstc.ticketcounters.in/TNSTCOnline/
 
2) விமான பயண சீட்டு
E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும்Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
 
2) Mobile ரீசார்ஜ் மற்றும் டாப்அப் செய்யும்வசதி
3) E.B. Bill கட்டணம்செலுத்தும் வசதி
 
4) NEFT / RTGS மூலம்பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும்வசதி
5) E-Payment செய்துவேண்டிய பொருள்வாங்கும் வசதி
6) Share Market – பங்குச்சந்தையில் On-Line வணிகம்செய்யும் வசதி
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கானவங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
 
2) பள்ளி மற்றும்கல்லூரி தேர்வுமுடிவு / மதிப்பெண்பற்றிய தகவல்அறிந்துக் கொள்ளும்வசதி
 
3) சமச்சீர் கல்விபாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
 
4) இனையதளங்கள் மூலமாக10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
 
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வுமாதிரி கேள்விதாள்கள் மற்றும்பாடங்களை படிக்கஅல்லது பதிவிறக்கம் செய்ய
 
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வுமற்றும் வேலைவாய்ப்புகள் பற்றியதகவல் அறிந்துக்கொள்ளும் வசதி
 
7) உள் நாடுமற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்அறிந்துக் கொள்ளும்வசதி, பதிவுசெய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
 
8) இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
 
9) இந்திய கப்பல்படையில் பயிற்சிமற்றும் வேலைவாய்ப்புகள் அறிய
 
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
கணினி பயிற்சிகள் (Online)
 
1) அடிப்படை கணினிபயிற்சி
 
2) சிறார்களுக்கு கணினிபயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
 
3) விளையாட்டுக்கள்
4) ப்ரௌசிங், மெயில், சாட்டிங், வெப்கான்ஃபெரென்ஸ், தகவல்தேடுதள்
பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும்உரிமை சட்டம்
 
2) சுற்றுலா மற்றும்முக்கிய தலங்கள்பற்றிய தகவல்பெறும் வசதி
http://www.incredibleindia.org/
 
3) திருமணம் புரியவிரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவுசெய்து தங்கள்வாழ்க்கை துணையைதேடி தேர்வுசெய்யும் வசதி
 
4) குழந்தைகளுக்கான தமிழ்பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும்தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்பதிவிறக்கம் செய்ய
 
5) இனையதளம் மூலமாகஇந்தியாவில் எந்தஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும்வசதி
 
6) இனையதளம் மூலமாகஉங்களுக்கு தேவையானVIDEO படங்களை தேடிகண்டு மகிழலாம்
 
7) இனையதளம் மூலமாகஉங்களுக்கு தேவையானதொழில் / வர்த்தகம்மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசிதகவல்கலை இலவசமாகதேடி தெரிந்துகொள்ளலாம்
 
8) இனையதளம் மூலமாகஉங்களுக்கு தேவையானமொழியில் தினசரி/ வார நாளிதல்களை இலவசமாக வாசித்துசெய்திகளை அறியலாம்
 
9) இனையதளம் மூலமாகஉங்களுக்கு தேவையானதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாகஇலவசமாக கண்டுமகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
 
10) SPEED POST மூலமாகநீங்கள் அனுப்பும்தபால்களை இந்தியதபால் துறையின்இனையதளம் மூலமாகதபால் சேர்ந்தவிவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
 
11) இந்திய தபால்துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின்இனையதளம் மூலமாகவிவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள்(Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாகஉங்களுக்கு தேவையானமென்பொறுளை இலவசமாகபதிவிறக்கம் செய்துஉபயோகிக்கலாம்
 
 வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின்இன்றைய தங்கம்மற்றும் வெள்ளியின் விலை விவரம்அறியலாம்
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின்அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள்(Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
2) பட்டதாரிகள் அரசுவேலைவாய்ப்பிற்கு பதிவுசெய்ய
http://www.tn.gov.in/services/employment.html
அரசு நலத் திட்ட படிவங்கள்(Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
 
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
 
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
 
4) நலிந்தோர் குடும்பநல நிதியுதவிபெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
 
5) ஆதரவற்ற முதியோர்/ விதவைகள் / கணவனால்கைவிடப்பட்ட பெண்கள்/ உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கானமனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
 
6) புல எல்லைஅளந்து அத்துகாட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
 
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்பபடிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
 
8) பட்டா பதிவுமாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம்சாதாரண பெயர்மாற்றம் / உட்பிரிவுமாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலானவிற்பனை நிலவரம்
2) பதிவு செய்துதினசரி சந்தைவிலைகளை பெறும்வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தைநிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/
5) தமிழ்நாட்டில் உள்ளவிவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
6) கொள்முதல் விலைநிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனைகூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
8)
தினசரி சந்தைவிற்பனை விலைநிலவரம்
9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/
தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும்பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
 
2) விதை கொள்முதல்செய்ய இருப்புநிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
 
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
 
4) அறுவடை பின்சார்தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
 
5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html
வேளாண்செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html
3) பண்ணை சார்தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சிதுறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html
 
2) வேளாண் மற்றும்ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
 
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html
 
4) வங்கி சேவை& கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
 
5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html
 
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
 
 
8) அக்ரி கிளினிக்
 
9) கிசான் அழைப்புமையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
h
ttp://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html
 
11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html
 
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
 
2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html
 
 
4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
 
5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html
 
 
7) மீன்வளம் மற்றும்கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
 
8)தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும்நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
 
9) விதை மற்றும்உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
 
10) உரங்களின் விலைவிபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
 போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர்உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf
 
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do
 
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html
 
4) புகார்/கோரிக்கைநிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do
 
5) ஓட்டுனர் உரிமம்சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do
 
6) தொடக்க வாகனபதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
 http://www.tneb.in/
தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
 த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
 http://www.rtiindia.org/forum/content/
 இந்திய அரசின் இணையதள  முகவரி
தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
இந்திய தூதரம் – இணையதள முகவரி
தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

 

Uncategorized

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா?

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்சப்படும், அல்லது பதட்டப்படும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள். அந்த டத்தில் நீங்கள் ஒரு தன்னம்க்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற்பனை செய்து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்குள் கொண்டு வாருங்கள். தைசெய்யும்போது வசதியா சாய்ந்து அமர்ந்தவாறு 
ண்களை மூடிக்கொண்டு ந்தக் காட்சியைக் காணுங்கள். அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உணர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல்லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான காட்சியாக உணருங்கள். இதையும் அடிக்கடி செய்யுங்கள்இது கொஞ்சம் முட்டாள்தனம் போலத்தோன்றினாலும் இது ஒரு மிகவும் வலிமையான பயிற்சிமனதின் எண்ணங்களே எம்மை வலுப்படுத்துகின்றன.

மேற்கூறிய பயிற்சி போலவே இதுவும், உங்களுக்குள் நீங்களே தட்டிக் கொடுத்துப் பேசிக்கொள்வது. அல்லது ஒரு கூச்சமானமற்றும் பதட்டமான மன நிலையை மறுத்து அதற்கு எதிரான வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுதல். உதாரணமா, நாளைக் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போதுஇன்றைக்கு நான் யாருக்கும் பயப்படப்போவதில்லை. யார் என்னைப் பார்த்து சிரித்தாலும் கவ லைப்படப் போவதில்லை. நான் கற்பதற்காகவே செல்கிறேன். அதனால் பிழைவிட்டு படிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லைபோன்ற வார்த் தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படிச் சொல்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதை மாற்றிவிடமுடியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முரண்டுபிடிக்கும் உங்கள் மனத்தையே நீங்கள் ஏமாற்றிவிடலாம். எனவே ந்தப் பயிற்சியை எல்லா சூழலுக்கும் ஏற்ப நீங்கள் பயிற்சி செய்யலாம்.


அசௌகரியமான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது அந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடத் தோன்றும். ஆனால்,          போகாதீர்கள். சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். அப்பொழுது தான் அந்தச்சூழ்நிலைகளை  நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளமுடியும்இத்தகைய சூழ்நிலையை உங்கள் ஆராய்ச்சிக்கேற்ற இடமாக மாற்றிவிடுங்கள். உங்களை நீங்கள் நிதானித்து ஆராயுங்கள்

இப்பொழுது எனக்கு இந்த சூழ்நிலை ஏன் அசௌகரியமாகஇருக்கிறது

எது என்னை வெளியே போக ச் சொல்கிறது? நான் ஏன் வெளியே செல்ல வேண் டும்

என உங்களுக்குள் ஆராய்ந்து கொள்ளுங்கள். இதனால், உங்களை ஆராய்வது மட்டுமன்றி சூழ்நிலை அவதானியாகவும் செயற்படுகிறீர்கள்மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு கற்றலின் போது தவறுகள் ஏற்படுவது இயல்பு. எனவே சுட்டிக் காட்ட பட்ட தவறு தனிப்பட்ட உங் களைத் தாக்குவதற்காக அல்ல. மறுப்புக்கள் வருவது வாழ்க்கையி ல்/கல்வியில் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு சுயபச்சா த்தாபம்(பரிதாபம்) ஏற்பட்டால் அதனை உடனேயே இனம் கண்டு கொண்டு அதனை நீக்கி விடுங்கள். சுயபரிதாபம் உடையவர்கள் வாழ்க் கையில் முன்னேற முடியாது.

எப்போதும் நாம் எம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது. நாம் இயல்பாக காரணமேயின்றி பிரபலமானவர்களை எம்முடன் ஒப்பிட்டு நோக்குவதுண்டு. ஆனால் நாம் அவர் களைப்போல் இருக்க முடியாது. நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனித்தனி அச்சுக்களில் வார்க்கப்பட்ட பொம்மைகளைப் பாருங்கள். ஒரு பொம்மைக்குரிய அச்சில் வேறு அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையைப் பொருத்த முடியாது. அப்படித் தான் நாமும். எனக்கு உங்களைப்போல் பேசத்தெரியாது, எனக்கு அவ னைப்போல் பாடவராது, எனக்கு அவர்களைப்போல் சிரிக்கத் தெரியாது ன்றெல்லாம் மற்றவர்க ளோடு ஒப்பிடுவதை விடுத்து, நான் மற்றவர்களைவிட வித்தியாசமானவன். என்னிடம் இருக்கும் பல விடயங்கள் மற்ற வர்களிடம் இல்லை. அதனால் நான் தனித்துவமானவன் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த எண்ணம் வலுப்படும் போது நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் அடையும் கூச்சமும் பதட்டமும் இல்லாமல் போயிருக்கும்.
இதுவும் மேலே குறிப்பிட்டது போல்தான்

உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள். நான் கூச்ச சுபாவமுடையவன்எனக்குப்பயம், நான் பேச மாட்டேன், நான் சிரிக்க மாட்டேன், நான் எழுதமாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.நீங்கள் நீங்கள்தான். ‘உங்களுக்கென்று சில இயல்புகள் உண்டுஎன்ற சிந்தனையோடு நிறுத்தி விடலாம் அல்லவா? மேலதிகசிந்தனை எல்லாம் எதற்கு?

பதட்டம் ஏற்படும் சூழ்நிலைக ளில் உங்களுக்குள் மந்திரம் போல மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருங்கள். இப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது, அந்த சூழ்நிலையில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும்.

நான் சீராக மூச்சுவிடுகிறேனா?

நான் இயல்பாக இருக்கிறேனா?

இன்னமும் இயல்பாகச் செயற்படுகிறேனா?

நம்மால் முடியாது அல்லது தோல்வியடைந்து விடுவோம் என நினைக்கும் விடயங்களில் தலையிடுங்கள். இது உங்கள் கூச்சத்தை அல்லது பயத்தை நீங்கள் போக்க உதவும். இந்தக் காரியத்தில் நீங்கள் வெற்றியடையா விட்டாலும், நீங்கள் நினைத்த அளவுக்கு அது ஒன்றும் பூதாகாரமான பிரச்சனை இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு வேளை முதலில் உங்கள் ஈகோ இதற்கு இடம் கொடுக்காது. ஆனால் பின்னர் அதை வெகு விரைவி லேயே விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சந்தோசமாய் இருக்க முடியும்.

எந்த நேரமும் நல்ல இருக்கை நிலையைத் தெரிவுசெய்யுங்கள். பலர் இருக்கும் இடத்தில் நிமிர்ந்து இருத்தல், கைகளை விரித்து வைத்திருத்தல் போன்ற இருக்கை நிலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நிற்கும்போதும் வளைந்து நிற்காமல் நிமிர்ந்து நில்லுங்கள்யாருடனாவது பேசும்போது கையில் எதையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

கூச்ச சுபாவம் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இருந்து நீங்கள் வெளியில் வரும்போது பல வெற்றிகளை டைந்திருப்பீர்கள். நீங்கள் எங்கெல்லாம் வெற்றியடைந்தீர்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொள் ளுங்கள். வெற்றிகளை மீண்டும் படிக்கும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை வளர்வது மட்டுமன்றி, உங்களுக்கு பயன் கிடைக்கக் கூடிய விடயங்களை நோக்கி உங்கள் கவனத்தை நகர்த்தும்

எனக்கே முடியலஇவ்வளவு விசயம் செய்யணுமா

ஆனால் இவ்வளவையும் செய்தால் உங்களைப்போல ஒரு தன்னம்பிக்கையாளனை எங்கும் பார்க்க முடியாது.
Uncategorized

காமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்

எது சிறப்பான ஆட்சி? மக்கள் மனதுக்குத் தெரியும் காமராஜர் ஆட்சி தான் மிகச்சிறந்தது என்று. இந்தக் காலத்திலும் அப்படி ஒருவரது ஆட்சிக்கு நாம் ஏங்குகிறோம் என்றால் காரணம் என்னபெருந்தலைவர் ஆட்சியில் செய்யப்பட்டவைகளை நிர்வாகத் திறமையை முன்னிறுத்தி அலசுகிறது இக்கட்டுரை.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க அமருகிறார் காமராஜர். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘ இது என்ன வரிசை?’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர்முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவைஎன்றும் கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர்முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன?’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்றாராம்.
அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப் போதுமான வேலை இல்லை. எனவே அத்தகைய பணியில் இருக்கும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்றும் அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும் என்றும் தலைமைச் செயலர் பரிந்துரைத்தார்.

கோப்பினைப் படித்த காமராஜர் தலைமைச் செயலரை அழைத்துஏங்க! 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க! அவங்க ஒவ்வொவரும் பட்டதாரிங்க! அஞ்சு வருஷமா அரசாங்கத்துல வேல பாக்கறவங்க! அவங்கள நம்பி குடும்பங்கள் இருக்கு, அவங்கள வீட்டுக்கு அனுப்பினா அவங்க குடும்பங்கள் வீதிக்கு வந்துடுமே! இது பெரிய பாவம்ங்க! அவங்களுக்கு போதுமான வேல இல்லேண்ணா புதிய பொறுப்புக்களை கொடுங்க. அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லே. அரசை நம்பி வாழும் பணியாளர் களின் நலனும் முக்கியம்என்றார் காமராஜர். அவரைப் பார்க்க ..எஸ் அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டு கிறவர், துணிவெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ..எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன…… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு? உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பார்.


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்
ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர்அமருங்கள், மகிழ்ச்சி, நன்றிஎன அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், ” என்னய்யாஇது?” என்பார் கொஞ்சம் வெட்கத்துடன்தான்கேக்
வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் “காமராசர்என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்குபச்சைத்தமிழன்என்ற பெயரை சூட்டியவர் .வெ.ரா.பெரியார்.

16. காமராஜர் தன் டிரைவர் உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லைஎன்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும்முக்கால் கைவைத்த கதர்ச் சட்டையும் 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லைஎன்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள் இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்திஎன்றால் `கறுப்பு காந்திஎன்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து 
தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து
வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சிஎன்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்.

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்
என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்கஎன
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவமாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்
ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்குபாரத ரத்னாஎனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.

81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம ராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா
இந்தக் கூட்டம்னேன்என்றும் தடுப்பார்.
88. மாதம் 30நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்
பொறுத்தவரை மாயா பஜார் விருந்து.
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்கஎன்று வாங்க மறுப்பார்.
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்கஎன்றுகமென்ட் அடித்தார்.
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்.
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள
முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.
96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போஎன்று முகத்துக்குநேராகவே சொல்லி
அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காத அவருக்கு. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
100. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்எல்லாம் எனக்கு தெரியும்என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
101. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
102. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார் தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.
103. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
104. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.
105. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
106. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
107. காமராஜர் எந்த வேலையையும் தள்ளிப் போட்டதில்லை.அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.
108. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.

Uncategorized

உளவியல் உண்மைகள்…

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் விதிபோல, நம்மை அறியாமலேயே செய்யும் செயல்பாடுகளுக்கும், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் செயல்களுக்கும் சில சுவாரஸ்யமான உளவியல் காரணங்கள் உண்டு’’ என்கிறார் மனநல ஆலோசகர்


நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

ஒருவரின் மீது 3 நாட்களுக்கு மேல் நம் கோபம் நீடிக்காது. அப்படி நீடித்தால் அவர்களிடம் நமக்கு எந்தவித அன்பும் இல்லையென்றே அர்த்தம். 
உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.


பெண்கள் ஒரு முடிவை எடுக்க ஆண்களைவிட அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். முடிவுகளில் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.


சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றித்தானே பெருமையாக செய்தி வெளியிடும்போது கிடைக்கும் சந்தோஷம், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் மயக்கத்துக்கு இணையானது. 


மற்றவர்களை கவனிக்காவிட்டாலும், மற்றவர் நம்மைப் பார்ப்பதை உணரக்கூடிய உள்ளுணர்வு ஒவ்வொரு வருக்கும் உண்டு.

நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்களோ அல்லது யாரை அதிகம் வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருகிறார்கள். 

தன் பணத்தைத் தனக்காக செலவிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மற்றவர்களுக்காக பணத்தை செலவழிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.


“உன்கிட்ட தனியா பேசணும்’ என்று யாரேனும் சொல்லும்போது, சமீபத்தில் செய்த தவறுகளையெல்லாம் மனது பட்டியலிட ஆரம்பித்துவிடுகிறது.


உடலில் ஏதேனும் காயம் உண்டாகும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, ஒருவர் நம்மை புறக்கணிக்கும்போதும் மூளையில் ஏற்படுகிறது.


சந்தோஷத்தால் ஒரு மனிதன் அழும்பொழுது முதல் கண்ணீர் துளி வலது கண்ணிலும், கவலையான தருணங்களில் அழும்போது முதல் கண்ணீர் துளி இடது கண்ணிலும் வரத் தொடங்கும். 


“கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்”

அதிகம் சிரிப்பவர்கள்… தனிமையில் வாடுபவர்கள்…
அதிகம் தூங்குபவர்கள்… சோகத்தில் இருப்பவர்கள்…
வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்… அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்…
அழுகையை அடக்குபவர்கள்… மனதால் பலவீனமானவர்கள்…
முரட்டுத்தனமாக உண்பவர்கள்… மன அழுத்தத்தில் இருப்பவர்கள்…
சின்ன சின்ன விசயங்களுக்கு அழுபவர்கள்… மனதால் மென்மையானவர்கள்…
சின்ன சின்ன விசயங்களுக்கு கோபப்படுபவர்கள்… அன்புக்காக ஏங்குபவர்கள்

Uncategorized

ஈழ இறுதி யுத்தம்? பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார்?

ஈழ இறுதி யுத்தம் முடிந்த 2009-ம் ஆண்டு முதல் பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார் என பல முறை செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுச் சொல்வது பொட்டு அம்மானைத்தான் என நம்புகின்றனர் தமிழ்த் தேசியவாதிகள். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் இந்திய அரசால் தேடப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் ஜூனியர் விகடன் வார இதழ் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டது. அந்தப் பேட்டியில்கூறியிருந்ததாவது. 

கேள்வி: பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?’ 
பதில்: எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.’ 

கேள்வி: சரி… உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்…?’ 
பதில்: (பலமாக சிரிக்கிறார்) ”மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு சிரஞ்சீவி மாஸ்டர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். பொட்டு அம்மான் உயிருடனேயே இருக்கிறார் என சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்போது மறைமுகமாக கோடிட்டுக் காட்டுகிறாரோ என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.

பிரபாகரனின் நிழல் அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.

பொட்டு அம்மான் எங்கே? பல மூத்த தளபதிகளின் சடலங்களையும் காட்டியது சிங்கள ராணுவம். ஆனால் பொட்டு அம்மான் பற்றிய தகவல் மட்டும் 9 ஆண்டுகளாக தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.

கருணா உறுதி செய்யவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.

பிரபாகரன் குறித்த தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் 9 ஆண்டுகளாக பொட்டு அம்மான் குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவும் இண்டர்போலின் கருத்தை உறுதி செய்வதாக அதாவது பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.