Uncategorized

தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உலகமகாப் பொய்ச் செய்தியை நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.   இன்றைக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்பட பல் வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.
Uncategorized

உபதேசம் ஊருக்கு மட்டும்தான்: தங்கை கனிமொழிக்காக சிறப்பு பூஜை செய்த செல்வி

நாத்திகம், பகுத்தறிவு என்று வெளியே பேசிக்கொண்டு மஞ்சள் துண்டு அணிவார். சமீப காலமாக அவர் கலந்து கொள்ளும் மேடை அலங்காரங்கள் கூட மஞ்சள் நிறம் தான். பாவம் தொண்டர்கள்.
 
அன்று அராஜகமாகத் தடுத்த பாவம்தான் கண்டோரும், கேட்டோரும் நகைக்க, கருணாவின் உறவுகள் இன்று அதே தெய்வங்களின் கோயில், கோயிலாக அலைந்து, எதைத் தின்றால் பித்தம் ( 2G பித்தம் ) தெளியும் என்று நாயாய், பேயாய் அலையும் நிலை வந்துள்ளது ?
உபதேசம் ஊருக்கு மட்டும்தான், அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடையாது, உதாரணமாக 
  1. ஸ்டாலின் மகளும் மருமகனும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்கள், கருணாவின் மணவி சமீபத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் எள் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் கொடுபதற்காக வந்த மறைந்த சாய்பாபாவுக்கு, கருணாவின் மனைவி பாத பூஜை செய்தார். ஆனால் இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாது. உபதேசம் எல்லாம் முட்டாள் மக்களுக்கு மட்டும்தான் தனக்கும் தன குடும்பத்துக்கும் கிடையவே கிடையாது, 
  2. இந்தியை எதிர்போம் ஆனால் என் மகன்கள் பேரன்கள் கொள்ளு பேரன்கள் வித்தியலயாவில் படிப்பதை படித்ததை பற்றி யாரும் கேட்ககூடாது, 
  3. உலக தமிழின தலைவர் என்பது எனக்கு நானே கொடுத்த பட்டம். ஆனால் ஈழ தமிழர்களை காப்பாற்ற மாட்டோம். இதையும் யாரும் கேட்ககூடாது, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவோம் ஆனால் யாரும் கேட்க கூடாது, 
  4. செந்தமிழ் மாநாடு நடத்துவோம், மாநாட்டு மேடையில் தமிழ் அறிஞர்களுக்கு இடம் கொடுக்காமல் எனது குடும்ப கவிஞர்களை தான் (கவிங்கர் கனிமொழி) அமர செய்வோம், 
  5. ஏழைகளின் நிலங்களை அபகரிப்போம் ஆனால் எழைகளின் காவலன் என்றுதான் என்னை அழைக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் ஊழலுக்கு ஊற்றுகண்ணாக நாங்கள் தான் இருப்போம், மேலும் நாடாளு மன்ற போது கணக்கு குழுவை செயல் படாமல் செய்வோம், லோக்பாலில் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் இந்திய நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை பிரதமர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டோம், 
  6. வருடபிறப்பை மாற்றுவோம் ஆனால் எங்கள் கொள்கைகளை மாற்ற மாட்டோம், மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரமாட்டோம் ஆனால் அதை தீர்க்க நடவடிக்கை எடுபவர்களை எதிர்த்து அறிக்கை விடுவோம், கவிதையே எழுத தெரியாத எனது மகளை கவிஞர் என்று அழைப்போம், அதற்கு உண்மையான கவிஞர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவோம், மாற்றம் வேண்டும் என்று சொன்ன மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சொல்லி புகார் கொடுப்போம், மாற்றம் வந்த பிறகு நாங்கள் மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்போம்.
Uncategorized

To know them, Our MP’s see the given link

பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம். 
http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html
பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம்.
Uncategorized

பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள்.

மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்தான் வரவேண்டும் என்று காங்கிரஸ் காரர்கள் கூறினால், மன்மோகன் திறமையற்றவர் என்றுதானே பொருள். முதலில் அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். சரி.  
பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம். 
லோக்பால் சட்டம் என்ற பெயரில் ஒரு உப்பு சப்பு இல்லாத சட்டத்தை உருவாக்குவதற்கே !! மக்கள் அனைவரும் ஜன லோக்பால் சட்டத்தை படிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் அரசாங்கம் கொண்டு வரும் லோக்பால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நான் அறிய முடியும். நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்தால் 7358251781 / 82 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு INDIA AGAINST CORRUPTION என்ற இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ளலாம். www.iacchennai.org என்ற இணைய தளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். நன்றி !!
Uncategorized

விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக்கூடாது: கருணாநிதி

மத்திய அரசு எப்போதும் போல் விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக் கூடாது. டீசல் விலை உயர்வு விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் வழியில், தமிழக அரசு செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இவரது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு ஒன்பது முறை பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திய போது வாய்மூடி மௌனம் காத்த பெரியவர் இப்போது வீறுகொண்டு எழுந்து விட்டார் . மத்திய அரசு லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்திய போது இவர் ஒரு ரூபாய் குறைத்தார் .விலைவாசி உயர்வு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, இவரது ஆட்சியில் மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருப்பதாக பெருமிதப்பட்ட பெருந்தகை இப்போது நடுத்தர மக்களைப் பற்றி கவலைப்படுகிறார் . வெங்காய விலை விஷம் போல் ஏறுகிறதே? என்ற பத்திரிக்கைகளின் கேள்விக்கு வெங்காய விலையா, பெரியாரிடம் போய் கேள்.. என்று சொன்னது யார்? காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்கிறதே என்று சட்டசபையிலே மார்க்சிஸ்ட் உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, வருமானம் உயரும் பொழுது விலைவாசியும் உயரத்தான் செய்யும் என்று அறிவுப்பூர்வமாக பதில் சொன்னது எந்த கட்சியை சேர்ந்தவர்? எந்த அரசில்? 
ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபாய் கடனாளியாக தமிழக மக்களை ஆக்கிவிட்டு சென்றிருக்கிறீர்கள் இதில் காஸ்,பெட்ரோலுக்கு மாநில அரசு வரி வசூலிக்காமல் இருந்தால் எப்படி மின்சார தட்டுப்பாட்டை போக்குவது. வளர்ச்சி திட்டங்களுக்கு பணத்துக்கு எங்கே போவது.தீதி ஆட்சியில் அங்கம் என்பதால் வேறு வழியே இல்லாமல் பதினாறு ரூபாய் குறைத்தார்.ஆனால் இந்த விலை குறைப்பினால் விலைவாசி ஏறாமல் இருக்குமா?மத்திய காட்டாட்சியை தட்டிகேட்க வக்கில்லை மாநிலத்தில் அரசியல் பண்ணுகிறீர்கள்.விலையேற்றமே தவறு என்கிறோம் நாங்கள். நீங்களோ மாநில அரசு பரிகாரம் காணவேண்டும் என்கிறீர். உங்களுக்கு எங்கள்மேல் எவ்வளவு அக்கறை.உலகிலேயே இந்தியாவில்தான் எரிபொருள் விலை அதிகம்.வளைகுடா நாடுகளில் சவுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாயில் (91 ) 5 /-ம் ,(95 ) 8 /-மட்டுமே.‌ சவுதி பணத்தில் சொல்வதென்றால் முறையே 45 பைசா மற்றும் 65 பைசா.ஏன் நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ் இலங்கையில் கூட இந்தியாவை விட விலை குறைவுதான்.நம் நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த நிலை.ரிலையன்ஸ் போன்ற பெரும் பண முதலைகள் மேலும் பணம் சம்பாதிக்கவே மத்திய அரசு பாவப்பட்ட மக்கள் தலையில் விலை உயர்வை திணிக்கிறது.2 ஜி உட்பட அனைத்து ஊழல்களுக்கும் இந்த பண முதலைகளே மூல காரணம்.எனவே விலை உயர்வே தவறானது.அதை முழுவதும் திரும்ப பெற்று மக்களாட்சி நடத்தினால் மத்திய அரசுக்கு நல்லது. இல்லாவிட்டால் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்த அமைதி புரட்சி இந்தியாமுழுவதும் நடக்கும்.காந்தி கண்ட கனவு நனவாகும்.
Uncategorized

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்

சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் – பா.ம.க., – விடுதலைச் சிறுத்தைகள் – கொங்குநாடு முன்னேற்றக் கழகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளைக் காட்டிலும், கூடுதலாக தி.மு.க., வாரி வழங்கியதால், மகிழ்ச்சியோடு தேர்தல் களம் கண்டன. ஆனால், தி.மு.க., அரசின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, கோபம் காரணமாக, தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்துள்ளன.
தி.மு.க., கூட்டணியின் அடுத்த பிரதான கட்சியாக பா.ம.க.,விற்கும், தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. இதனால், அன்புமணியை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, டில்லி அனுப்ப வேண்டும் என்ற கனவும் கலைந்து போயுள்ளது. “நாங்கள் இருக்கும் அணிதான் வெற்றி பெறும்’ என்ற பா.ம.க.,வின் பெருமைப்பேச்சுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தன்ராஜ் உள்ளிட்டோர் கட்சித்தலைவர் ஜி.கே.மணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக எடுத்துவைத்துள்ளனர். அடுத்தகட்டமாக, ராமதாஸ், அன்புமணிக்கு எதிராகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த, பா.ம.க., கூடாரம் கலகலத்துப் போயுள்ளது.
வெற்றி தோல்வி அரசியலில் சகஜம்.ஆனால்,இப்போது தி மு காவை பழித்து பேசும் கட்சிகளிடமிருந்து தி மு கா நல்ல பாடத்தை கற்க வேண்டும். ஆனால் தி மு காவும் கற்கவில்லை.”உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்கின்றது குறள்.இது அரசியலுக்கும் பொருந்தும்.ஆனால்,இன்று உள்ள நிலைமையை பார்த்து தி மு காவோ “கூடா நட்பு கேடாய் முடியும்” என்கின்றது.காங்கிரஸ் கட்சியும் ப ம கவும் தி மு காவால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சொல்கின்றன.தோல்வி பற்றி பரஸ்பரம் குற்றம் சுமத்துவதிதான் அணைத்து கட்சிகளின் கவனம் உள்ளது.இது ஆரோக்கியமான அரசியலுக்கு உதாரணம் அல்ல.சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு கட்சிகூட உள்ளடி வேலை பார்த்து இல்லை என்று சொல்ல முடியாது.பல தொகுதிகளில் தி மு காவின் தோல்விக்கு அந்த அணியில் இருந்த உள்ளடி வேலைகள்தான் காரணம்,மற்றபடி மக்கள் அ தி மு கா அணியை விரும்பி ஓட்டலிக்கவில்லை.
Uncategorized

அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம்னு சொல்லிட்டு பிரதமரையும் தலைமை நீதிபதியையும் மக்களை விட்டு வேறுபடுத்துவது

“லோக்பால் மசோதா தயாரிப்பில் இனி ஹசாரே தலைமையிலான மக்கள் நல அமைப்புகள் அமைப்பின் கருத்தை கேட்கமாட்டோம். அதற்கான வரைவு மசோதாவை அரசே தயாரிக்கும்’ என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
 
பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. வலுவுள்ள அமைப்பாக லோக்பாலை உருவாக்காவிட்டால், ஆகஸ்ட் மாதம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
My Comment:
2 G விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை, அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் இல்லை என்றெல்லாம் பேசியவர்களும் லோக்பால் வரைவு மசோதா குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் வேறு எந்த மாதிரியான பேச்சுக்களை எதிர்பார்க்க முடியும். அப்படி ஏதும் இல்லை என்றால் எதற்கு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும், திகார் ஜெயிலும்? இந்திய மக்கள் அனைவரும் ரொம்ப நல்லவங்கப்பா. அதனால் எல்லா நீதிமன்றங்களையும், ஜெயில்களையும் இழுத்து மூடிவிடுங்கள். 
அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம்னு சொல்லிட்டு பிரதமரையும் தலைமை நீதிபதியையும் மக்களை விட்டு வேறுபடுத்துவது முன்னுக்கு பின் முரணான ஒன்று. சுதந்திரம் கிடைத்த உடன் காங்கிரஸ் கட்சியை காந்தி நினைத்தது போல கலைத்து இருந்தால் இந்தியாவுக்கு இந்த வேதனை வந்து இருக்காது. திருடன் கிட்ட போயி சட்டத்தை உருவாக்க சொன்னால் திருடுவதை அரசியல் சட்டப்படி சரி என்று சொல்லி தான் சட்டம் இயற்றுவான்.
 
நம் நாடு பணம் வெளிநாட்டில் இருக்கிறது அதை கொணர்து நாட்டை முன்னேற்ற பார்காமல் விலை வசியை ஏற்றிவிட்டுக்கொண்டு ஊழலை ஊதிவிட்டுக்கொண்டு இருக்கும் வெளிநாட்டு அடிமை காங்கிரஸ் பச்சோந்திகள் ஏழைகளின் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறார்கள். ஹசறேயின் குரல் அவர் ஒருவருடையது மட்டுமல்ல, நியாயம் அட்ட்றது மட்டுமல்ல. அன்று வெளிநாட்டவரிடம் சுதந்திரம் வேண்டி போராடினார்கள். இன்று வெளிநாட்டு சுயநல அடிமழை எதிர்த்து நம்மவர்களிடமே போராடவேண்டியுள்ளது. 
Uncategorized

அன்புமணியின் ராஜ்யசபா MP கனவு ,மத்திய மந்திரி கனவு கனவாவே போய்விட்டது. பாவம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

நங்கள் அரசியலுக்கு வர மாட்டோம் என்றுதானே ஜாதி கட்சி ஆரம்பிக்கும் பொது மருத்துவர் சொன்னார் அதனால் மக்களே உங்களை அரசியலை விட்டு துரத்துகிறார்கள். . சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது. தலை கணத்துக்கு சரியான பாடம்.எப்படியாவது யாருடனாவது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற குறுக்கு புத்தியை விட்டு விட்டு சொந்த தொழில் எதாவது (மரம் வெட்டுவது) இருந்தால் அப்பாவும் பிள்ளையும் பார்ப்பது நல்லது .தேர்தலில் நிற்பது மரம் வெட்டுவது இரண்டுமே நாட்டுக்கு கேடு. எதாவது ஒரு கேடு போதும் எங்களுக்கு. மொத்தத்தில் உங்கள் கட்சி நாட்டுக்கு கேடு .
 
சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது . இந்த மாதிரி விளக்கெண்ணை விளக்கங்கள் தருவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பசுமைதாயகம் சார்பில் நீங்கள் மரம் நடுங்கள் , உங்கள் அப்பாவை ஏதாவது போராட்டம் நடத்தச் சொல்லி மரத்தை வெட்டச் சொல்லுங்கள் ,பொழுது போக வேண்டாமா?
 
அட்டை ரத்தம் கிடைக்குமிடத்தில் ஒட்டிக் கொண்டு எப்படி உறிஞ்சி வாழக்கூடியதோ அதுபோல வெல்லும் வாய்ப்புள்ள கூட்டணியில் ரகசியமாக பேரம் நடத்தி கெஞ்சிக் கூத்தாடி இணைத்துக் கொண்டு, ஜாதியையே மையமாக வைத்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் / அமைத்துக் கொள்ளும் நீங்கள் இதுவரை மக்களால் ஆதரிக்கப்பட்டதே வியப்புக் குரியது! மக்களால் அருவருப்புடன் புறக்கணிக்கப் படவேண்டிய கட்சிகளில் நீங்கள் முதன்மையானவர்கள்! இந்தக் காரணத்தை முன்னிட்டே, உங்களுக்கு ஒரு வாக்காளர் ஆதரவு தெரிவித்தாலும் அவர் இந்தியக் குடிமகனாய் இருக்க லாயக்கில்லாதவர். ஏனெனில் ஜாதி மத வேறுபாடுகளை மையமாக வைத்து செயல்படும் ஒரு இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே அரசியல் சட்டத்திற்கு முரணானது.
 
இரண்டு கால்களும் இல்லாதவன் வேறு ஒருவன் முதுகில் தொத்தி கொண்டு தான் போக வேண்டும். பா மா கா வை பொறுத்தவரை கால்களும் இல்லை கைகளும் இல்லை. 
 
Uncategorized

தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ், திமுக, பாமக . யார் காரணம் ?

திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்: விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.  2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் காரணம் : நெல்லை கூட்டத்தில் தி.மு.க., கடும் தாக்கு: சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்தான். அந்த கட்சியை முன்பே கழற்றிவிட்டிருக்கவேண்டும்,” என நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், 9 தொகுதிகளில் தி.மு.க., அணி தோல்வியுற்றது.
வாகை முத்தழகன்: ஜாதியினருக்குத்தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர், காது கேட்காதவர்களையெல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும். சிறையில் இருக்கும் கனிமொழிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். நாம் அந்த கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும். இப்போது எடுக்கிற முடிவை கொஞ்சம் முன்பே எடுத்து காங்கிரசை கழற்றிவிட்டிருக்கலாம். இளைஞர் அணி, புண்ணாக்கு அணி என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் தி.மு.க.,விற்கு அறிவுரை சொல்கிறார்கள்.
Uncategorized

இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரி ஆவணப் படம் இதோ…

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ‘சேனல் 4’-ன் ஆவணப் படம் வெளியாகியுள்ளது. (வீடியோ – கீழே)

‘இலங்கையின் கொலைக்களங்கள்’ (Sri Lanka’s Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka’s Killing Fields ஆவணப் படத்தை காண… http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)
சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்…
இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் இதோ…

(முக்கியக் குறிப்பு: இந்த ஆவணப் படத்தில் கொடூரக் காட்சிகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள், இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் முதலானோர் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.)

 
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170