அழகு குறிப்புகள், இந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், குடும்பம், செய்தி - News

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

அறிவோம் சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா? ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும். தூங்கும்போது, உணவு குடல் வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, heartburn, bronchical problems போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்சனை, sleep apnea போன்றவை ஏற்படலாம். மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கெனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.

குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்குவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

உடனே நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.