கட்டுரைகள், பொது, Moral Story, கதை - Story, தத்துவம் - Philosophy

முல்லா நஸ்ருதீன் கதை

முல்லா நஸ்ருதீன் கதை. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.

mullaதுண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

அந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் – என எழுதி இருந்தது..!

உடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது?