ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை..

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்,  அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

அர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!

Uncategorized

மரணம் எப்ப‍டி இருக்கும்?

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்க ள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்ப டுகின்றனஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல் களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும்போது நான் ஒரு செவியர் என்ற முறையில் மிகுந் மகிழ்ச்சி அடைவேன்நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன்டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற் காலியில் அமரும் அள விற்கு குணம் பெற்று இருந்தார்இந்த நிலையில் திடீரெ அவர் நினைவிழந்து விழுந்தார், அவரது உடல் குளிர்ந்த து. எனது எந்த ஒருகேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.
நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லைவெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங் கள் தெரிய ஆரம்பித்தன.

நான் உடனடியாக அவருக் கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்த பின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்டபோது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரி வித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் ண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியி ல்லாத அனுபவமாக இருந்த தாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவ மனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந் ததாக அவர் தெரிவித்தார்.
அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னை யும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவி யைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததா பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச் சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இரு ந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக் கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொ ண்டு இருந்தேன்திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்பபோக சொன்னதாகவும் தன் பின் அவர் மிதந்து வந் து அவரது உடலுக்கு திரும் பியதாகவும் டாம் கூறினார்மேற்கண்ட இந்த அனுபவ ங்கள் உட்பட மேலும் பலரது மர அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத் தில் விவரித்துள்ளார்.