Uncategorized

மதமாற்றம் சிறந்த வியாபாரம்

இந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.

மரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா? என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் புறம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

பக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.

கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

Tamil_News_large_1901046இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பதுகிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டுநம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக்காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பதுமருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டுவருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்றதன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒருஉலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர்ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும்முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையேஏற்படுத்தும்.”

ஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும்,மூலமதமான ஹிந்து மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.

இந்த ஒற்றுமை நிலை முஸ்லீம் இந்தியாவில் படை எடுத்து வெற்றி கண்ட பிறகு பாதிக்கப்பட்டு, ஹிந்துகளின் மதமாற்றம் வெகு தீவிரமாக முஸ்லீம் அரசர்களால் கையாளப்பட்டு வெற்றி கண்டனர். அதன் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு இந்துக்கள் பலரை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்து அந்தப் பிரசாரம் இன்னும்.தொடர் கதையாக இந்தியாவின் மதச் சார்பின்மையையே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதைப் பல சம்பவங்கள் நீரூபித்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப் பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

ஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும் செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில் நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால் உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும்? கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற ஒன்றாகும். ஹிந்துக்கள் இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம் ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம் ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின் மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப் பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை உடை பாஷை,உணவு, குடி நீர் ஆகியவைகளில் வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும் தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான்.ஏசு மட்டும் அல்ல. என்னை நான் சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய கருத்து,சைத்தானின் கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும் சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’

பார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. பார்பி பொம்மைகள் குட்டை பாவடையுடனும், தங்கள் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டும் வகையிலும் இருக்குமாறு செய்து, சிறுவர், சிறுமிகளை முதலில் அது போன்ற ஆபாச உடைகளை அணியச்செய்து அவர்களின் வெட்கத்தை சிறிது சிறிதாக குறைத்தது மேற்கத்திய கிறிஸ்தவம். பின்னர் வளரிளம் பெண்களை அப்படியான ஆபாச உடைகளை அணியச்செய்ய ஊக்குவித்து ஒரு தலைமுறைக்கு பிறகு ஆபாசமாக உடையணிவது நம் பிறப்புரிமை என்பது போல நம்பச்செய்து விட்டது கிறிஸ்தவம். அவர்களின் பண்பாட்டை அழித்ததன் மூலம் எளிதாக கிறிஸ்தவ அடித் தளத்திற்குள்ளேயே அவர்களை நிலை நிறுத்தி கொள்ள பெரிய சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது.

சினிமா நடிகைகள், பிரபலங்கள் பற்றிய ஆபாச செய்திகள், கலாச்சார விரோத நடவடிக்கைகள் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இவற்றைத் தொடர்ந்து படித்து கொண்டிருக்கும், பார்த்து கொண்டிருக்கும் பொது மனம், இது போன்ற சீரழிவுகளே வரவேற்பை பெறக்கூடியது என்பது போன்ற பொது சிந்தனையால் வார்க்கப்ப்ட்டு அதை ஆதரிக்கும் மன நிலைக்கு வந்து விடுகிறது. உதாரணமாக, மேற்கத்திய இயந்தி ரமயமாக்கலின் காரணமாக, அதிகரித்த உற்பத்தியை விற்பனையாக்கி லாபம் சம்பாரிப்பதற்காக குடும்பங்களை சீர்குலைத்த கதை அனைவரும் அறிந்ததே.

கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள். ஐரோப்பாவிலும், ரோம், காந்தாரம், முதல் எகிப்து வரை தங்கள் பண்பாட்டை மறந்து பாலைவன மதங்களை தழுவிக்கொண்ட நாடுகளின் பேரழிவுகளை பாருங்கள். அவர்கள் கலாச்சார அனாதைகளாக இன்று நிற்பதை பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு, கலாச்சார சீரழிவில் பாரதத்தை தள்ளி மக்களை பாலைவன அரசியல் அடிமைகளாக மாற்றுவதற்காக பெரும் முயற்சி நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் வேறு வேறு கண்ணிகள் தான் இவை என்பதை நாம் எப்போது உணர இருக்கிறோம்?

இப்படியான கருத்துருவாக்க வேலையை, இந்து மதம் மீதும், இந்து ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீதும் முதலில் உருவாக்க வேண்டியது. பின்னர், மாற்று மதம் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட பொய்களை மெதுவாக நுழைத்து, அவர்களை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்குவது, பின்னர் பெருமளவு பிரச்சாரம் மூலமும், ஆட்கள் மூலமாகவும் மதமாற்று மூளை சலவையை செய்வது.

இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பப் பையை ஆக்ரமித்து தங்கள் மதத்திற்கான அடியாட்களை விதைத்து உருவாக்கி, அவர்களை கொலை காரர்களாகவும், அடிப்படைவாத வெறியர்களாகவும், கயவர்களாகவும் வளர்ப்பது. அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவது அல்லது பிச்சை எடுக்க செய்வது. அல்லது அவர்களின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது. இல்லை தொடர்ச்சியாக பாலியல் அடிமையாக வைத்திருப்பது. குழந்தைகளை பெற்று தரும் இயந்திரமாக மாற்றுவது.

இப்படியான ஆர்கனைஸ்ட் கிரைம்கள் மதமாற்ற வியாபாரத்தில் கோலோச்சி கொண்டிருக்கிறது.

பழங்காலத்தில் இருந்தே மத மாற்றம் வன்முறையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்திய சரித்திரம் இத்தகைய நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. அடக்குமுறையாலும், பலவந்தத்தாலும், சித்திரவதையாலும், படுகொலையாலும் இந்தியர்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டது வெறும் புனைகதைகள் அல்ல. “The inquisition” எனக்குறிப்பிடப்படும் புனித விசாரணையும் அதன் நிகழ்வுகளும் உலக வரலாறு. இவை எல்லாம் மத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டவை தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறை மேலும் வன்முறையையே வளர்க்கும் – இது இயற்கையின் நியதி.

“Don’t target converts” என்று சொல்லும் கட்டுரையாசிரியருக்கு ஒருவர் தனது மதத்தை பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் அனுமதியளிக்கும் நாட்டில், மதம் மாற்றுபவர்கள் குறிவைக்கப்படுவது வினோதமாகத் தோன்றுகிறது. ஆனால், பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் மட்டும்தான் இந்த நாட்டின் அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது; மோசடியாலும், பலவந்தத்தாலும் மக்களை மதமாற்றம் செய்ய அது அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.

காசு பணம் துட்டு மணி மணி  வெளினாடுகளில் இருந்து வருகிறது. மிடியாக முதலாளிகள் பணத்திற்கு தாயை கூட விற்றுவிடுவார்கள். இப்பொது நாட்டை விற்கிறார்கள்

Uncategorized

மதமாற்றம்

உலகத்திலேயே ஹிந்துக்கள் இந்தியாவில் மட்டும் தான் அதிக அளவில் இருக்கின்றனர். படிப்பு, வேலை, வியாபாரம், கலை ஆகியவைகள் காரணமாக உலகில் சில இடங்களில் பரவலாக ஹிந்துக்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். ஹிந்து மதம் மதமாற்றத்தை கொள்கை ரீதியாக ஏற்பதில்லை. ஹிந்துமதம், சமணமதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவைகள் இந்தியாவில் பிறந்த நான்கு மதங்களாகும். இந்த மதங்களில் கட்டாய மதமாற்றங்களோ, மற்ற மதங்களைப் பற்றிய தூஷணைகளோ கிடையாது. உண்மையில் ஹிந்து மதம் இந்த இந்தியாவில் பிறந்த மற்ற மதங்களை தங்கள் கிளைமதங்களாகவே பார்க்கின்றது. அவ்வப்போது சில தீவிரவாத ஹிந்துக்களும் மற்ற மதத்தவர்களும் சண்டை போட்டாலும், அவைகள் அந்தந்த மதத்தலைவர்களால் கலவரங்களாக மூளாமல் அமைதியை இந்தியாவில் பாதுகாத்து வந்துள்ளனர்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மதமாற்றம் நடந்துவருகிறது. அதுவும் தமிழகத்தில் நிம்மதியாய் ஒரு பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லமுடியாது. டிப்டாப்பாக வரும் ஆசாமிகள் திடீர் பிரச்சார பீரங்கிகளாய் மாறி நம்மிடம் சாத்தானின் கதைகளை அள்ளித்தெளிக்கிறார்கள். உங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனையா? மாறுங்கள் எங்கள் மதத்திற்கு! உடனே உங்கள் பிரச்சனை, கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று எர்வாமேட்டின் பாணியிலான இவர்களின் பிரச்சாரங்களால் மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். உலகில் பிரச்சனையில்லாதவன் எவனுமில்லை. உயிர்போனபின் என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியாததால், சாகும் வரை பிரச்சனைக்குப் பழக்கப்பட்டவர்களாய்த் தானிருக்கிறோம்.  இதற்காக நான் ஒன்றும் பிறமதங்களின் எதிரி என்று அர்த்தமில்லை. என் மதம் எனக்கு முக்கியம். அதைக்காக்க என்னாலான பணியைச்செய்வேன். அது பிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கலாம். மதம் மாறுவது அவர்களது சொந்த விஷயம் அதை பற்றி நாம் பேச கூடாது என்று நீங்கள் சொல்வீர்கள் நான் அதை கேட்க வரவில்லை தங்களுக்கு ஒரு துயரம் வந்துவிட்டால் அதற்கு காரணம் தாங்கள் சார்ந்திருக்கும் மதமே அத்தகைய மதத்தை விட்டு விடுவோம் என்று வேறு மதத்திற்கு மாறுவது சரியானது தானா? 
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம்? அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே? நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது?
இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள். 
எறும்பிற்கும் எண் ஜான் உடம்பு என்று சொல்வார்கள் அதாவது அவரவர் தரத்திற்கு ஏற்ற துயரம் என்பது தவிர்க்கவே முடியாது. சிலநேரம் தரத்திற்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டு கூட துன்பங்கள் வரும். வந்த துன்பத்திற்கு காரணம் என்னவென்று யோசிக்க வேண்டுமே தவிர அதற்காக மற்றவர்களின் மீது பழிபோட முயற்சிக்க கூடாது.
ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன்? என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.
பொதுவாக மனிதன் தனது செயல்களே தனது துன்பமாக வருகிறது என்பதை ஒத்துகொள்ள மாட்டான் மற்றவர்களால் தான் தனக்கு துன்பம் வந்தது என்று பிறர் மீது பொறுப்பை சுமத்தி தட்டிகழிக்கவே விரும்புகிறான். இது மனிதனின் பொதுவான இயல்பு ஆனால் இங்கே நீங்கள் குறிப்பிடும் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒரு விபத்தால் வந்தது என்றே சொல்லவேண்டுமே தவிர யாராலையும் திட்டமிட்டு வந்தது என்று கூற இயலாது. 
மரணம் என்பது விதிப்படி நடப்பது. அது இந்த இடத்தில் தான் நடக்கும் இங்கு நடக்காது என்று கூற முடியாது. எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் மரணம் நிகழலாம். அது ஆலயமாக இருக்கலாம். அரசமரத்தடியாக இருக்கலாம். ஒருவன் புளியமரத்தில் மரத்தில் தூக்கு போட்டு செத்து விட்டான் என்றால் நாங்கள் சமையலில் புளியே சேர்க்க மாட்டோம் என்று சொல்வது எத்தகைய முட்டாள் தனமோ அத்தகைய முட்டாள் தனமே மதமாற்றம் என்பது!
இவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே?’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.
தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி.. 
ஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும்,மூலமதமான ஹிந்து மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.
இனி இந்தியாவில் கிறித்தவ மதம் வளர்ந்த வரலாற்றையும், மதமாற்றம் நடந்த சில பகுதிகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.
கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.
அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.
அப்போது ஐரோப்பாவில் அழிந்து வந்த இசுலாமியப் பேரரசும், மத்தியக் கிழக்கின் புனித நகரமான ஜெருசலேத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் துருக்கியுடன் நடத்திய சிலுவைப் போர்களும் மத உணர்வை அரசியல் விவகாரங்களோடு இறுக்கமாகப் பிணைத்தன. மேலும் மறுமலர்ச்சிக் கால எழுச்சியின் ஒரு விளைவாக ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார். இது கிறித்தவ மதத்தின் கடுங்கோட்பாடு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அம்மத வரலாற்றில் நிகழ்ந்த முதல் பிளவாகும். இவை அனைத்தும் வாத்திகனின் திருச்சபைக்கு, இழந்து போன கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கினை மீட்கும் அவசியத்தையும், விரிவாகப் பிரச்சாரம் செய்யும் தேவையையம் உணர்த்தின. சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் ‘புராட்டஸ்டண்ட்’ பிரிவிற்கு மாறினாலும் பல நாடுகள் மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. சிற்றரசர்களும், பேரரசர்களும் கிறித்தவ மதப் பணிக்காக ஆள் பலமும், பண பலமும் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.
ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும்–கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541 இல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.
அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.
அதன் பின்னரே 18, 19, 20 ஆம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?
10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். 
கீழ்கண்ட நிகழ்ச்சி மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு எனும் நாலில் இருந்து பெறப்பட்டது .
ஒருமுறை பாரதியைக்காண , அவருடைய நண்பர் சுரேந்தரநாத் ஆர்யா வந்திருந்தார் . ஆர்யா சுதந்திர போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று , விடுதலையாகி பாரதியைக்காண வந்திருக்கிறார் . சகல விசாரிப்புகளுக்கு பின், “பாரதி . உனக்கு விஷயம் தெரியாதே !நான் கிறித்துவனாக மாறிவிட்டேன். சிறையிலும் வெளியிலும் டேனிஷ் பாதிரிமார்கள் எனக்கு மிகவும் பரிவுகாட்டிச்செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச்சொல்வது ? நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா .
“இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு, நீ என்ன செய்வாய்? இந்துசமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது; உயிரற்றஜன சமூகம்” என்று பதறிக்கொண்டே பாரதியார் கூறினாராம் .
“ஜெயிலிலிருந்து நான் வெளிவந்தபிறகு என்னிடம் ஒருவரும் பேசத்துணியவில்லையே! எங்கே போனாலும் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள். பாதிரிமார்கள்தாம் என்னிடம் நல்லமுகம் காண்பித்து, எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள். பிரசங்கத்திலே கைத்தட்டுறதும், வீட்டுக்குப்போனதும் பயப்படுகிறதுந்தான் இந்துக்களின் வேலை. இக்கூட்டத்தில் இருக்க  எனக்குச்சற்றுகூடப் பிடிக்கவில்லை .நான் கிறித்துவனானதில்ல உனக்கு வருத்தமோ ! ” என்றார் ஆர்யா .
பாரதியார் ஒன்றுமே சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்; பிறகு சொன்னார்; “மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு இந்துவும், அதுவும் புத்தியும் தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு இந்துவும் ஜனசமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்கமுடியாமல், வேறு மதத்திற்கு போய்விட்டால், அந்த ஹிந்து சமூகத்தின் கதி என்னவாகும்! புருஷன் செய்த தப்பிற்கு மனைவி தற்கொலை செய்துகொள்வதும், மனைவியின் தவறுக்காக புருஷன் சந்நியாசம் வாங்கிக்கொள்வதும் சகஜமாய்ப் போனால், குடும்ப வாழ்க்கை என்பதைப்பற்றியே பேசமுடியாது. இனி நீ பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்கவேண்டியவன். உன்னுடைய தேசபக்தியை (இந்த இடத்தில் பாரதி கண்ணீர்விட்டார்) அவர்கள் மதப்பிரசாரத்து்ககாக பயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும் . உனக்கு நான் உபதேசம் செய்வது தவறு.”
மேலும் பாரதி கூறியதாவது ,
“ஒருவர் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை . அதை ஒப்புக்கொள்கிறேன். அந்த இயற்கை இல்லாமல் போனால் உலகம் கட்டுக்கொள்ளாது. ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்ணோ ஹிந்து ஜனசங்க ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள், கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும். அவைகளை ஒழிக்கமுடியாது என்று பயந்து, வேறு மதத்தில் சரண்புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி . எல்லா மதங்களிலும் உண்மை உண்டு. நம்  ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம் வரலாம் . அதற்காக அவர்களை ஒழிக்கவோ, அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணலாகாது”.
இதுக்குமேல் என்ன சொல்வது? ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்காக உங்கள் மதத்தை விட்டு இன்று வெளியேருகிறீர்கள் . நாளை வேறொரு மதத்தவன் உதவி செய்து என் மதத்திற்கு வா என்று அறைகூவல் விடுத்தால் அந்த  மதத்திற்கும் மாறுவீர்களா? நன்கு யோசியுங்கள். மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் . இதற்குமேலும் யாராலும் மதமாற்றத்தைப் பற்றி சொல்லிவிடமுடியாது. 
அசோக மஹாராஜா அனைத்து மதமும் சம்மதம் என்பதை மக்களுக்குப் பரப்பினார். பிற மதத்தினரைப் பழிக்காமல், அவரவர்கள் தம் தம் மதக் கொள்கைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை பிரகடணம் செய்து, தம்மை ஒரு உயர்ந்த மதச் சார்பற்ற மன்னராக வெளிப்படுத்தி உள்ளார். இது கி.மு. 3-வது நூற்றாண்டு கால அளவில் ஏற்பட்ட உன்னத நிலை என்பதை அறியவேண்டும். இந்த நிலை முஸ்லீம் ஆட்சியில் மாறிவிட்டது. முஹமத் கஸ்னி,அவுரஹங்க சீப், கஜினி முகமது ஆகியவர்களால் ஹிந்துக்கள் பெரும் அளவில் மதமாற்றம் செய்யப்பட்டனர். அவுரங்க சீப் மதம் மாற ஒவ்வொரு ஹிந்துவுக்கும் – அவன் ஆணாக இருந்தால் ரூபாய் 4, பெண்ணாக இருந்தால் ரூபாய் 2 இனாம் கொடுக்க உத்திரவிட்டார்.இந்தப் பணம் ஒரு மாதச் சம்பளத்திற்குச் சமம் என்று கூட அந்த உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லீம் அரசர்களில் அக்பர் காலத்தில் தான் ஹிந்துக்களுக்கு ஓரளவு துன்பம் குறைந்தாலும், இந்த மத மாற்ற பூதம் ஆங்கில ஆட்சியிலும் ஹிந்துக்களை வாட்டி எடுத்தது.  
ஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப் பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
ஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும் செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில் நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால் உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும்? கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற ஒன்றாகும். ஹிந்துக்கள் இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம் ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம் ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின் மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப் பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை உடை பாஷை,உணவு, குடி நீர் ஆகியவைகளில் வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும் தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான்.ஏசு மட்டும் அல்ல. என்னை நான் சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய கருத்து,சைத்தானின் கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும் சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’
மதத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்ற கொள்கையினைக் கொண்ட காம்ரேட் கட்சிகளும் முஸ்லீம்கள் – கிருஸ்துவர்கள் ஆகியவர்களுக்கு ஆதரவாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர். இது எங்களது மதவாதக் கட்சிகளை எதிர்க்கும் கொள்கைக்கு ஏற்புடையதாகும் என்று காரணம் சொல்கிறார்கள். 
சமீபத்தில் ஆக்ராவில் சுமார் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லீம்கள் ஹிந்து பரிவார் அமைப்புகளால் ‘கர் வாப்சி’ – ‘சொந்தமான இடத்திற்கே திரும்பி வருதல்’ என்ற அடிப்படையில் ஹிந்து மதத்திற்கு மாறி வந்துள்ளனர். இது இந்திய பாராளு மன்றம் – மீடியா – பத்திரிகைகள் ஆகியவைகளில் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்காளம், பிஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆக்ராவில் குடிசையில் குடியேறியவர்களாவர். அந்த ஏழை முஸ்லீம் மக்களை ஆசை காட்டி மதம் மாறச் செய்துள்ளனர் என்ற குற்றச் சாட்டை எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளனர். ஆனால், கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் உத்திரப்பிரதேசத்தில் இயற்றப்படவில்லை.  தற்போது, இந்த கட்டாய மதமாற்றச் சட்டம் – ஒரிசா, மத்திய பிரதேசம், குஜராத், சதீஷ்கர், ஹிமாசல் பிரதேசம், தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மட்டுமே இயற்றப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இதே மாதிரி சட்டம் இயற்ற பி.ஜே.பி. கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 25-யில் அளிக்கப்பட்ட மதப் பிரார்த்தனை, மதபோதனை, மதத் தேர்வு ஆகிய குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அமைகிறது என்று வாதிடுகிறார்கள். இந்தியா முழுதும் செயல்படும் அளவில் ஒரு பொதுவான மத மாற்றச் தடைச் சட்டம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் இப்போது தயாராக இல்லை. அதாவது சிறுபான்மை இன மதத்தவர்களை பெரும் பான்மை மதத்தில் சேர்ப்பதைத் தடுக்க வழி வகுக்க மட்டுமே அந்த ‘சிக்குலர்’ எதிர்கட்சியினர் தயாராக இருப்பதாகவே படுகிறது. ‘பெருவாரியான ஹிந்து மதத்தவர்களை சிறுபான்மை மதத்தவர்கள் மத மாற்றம் செய்வது தவறில்லை. தடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தான் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த ஒரு வழிப்பாதைக் கொள்கையை சங்க பரிவார்கள் மதமாற்றக் கொள்கையாக ஏற்கத் தயாராக இல்லை.  
பணத்தாசை காட்டியும் மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு – அவற்றைக் கையாள்வதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களே போதுமானவை.”
இப்போது இருக்கின்ற சட்டங்கள் என்ன சொல்கின்றன?
”ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிஸ்ஸா, ம.பி. ஆகிய இரு மாநில காங்கிரசு அரசுகள் 70களில்  ஒரு சட்டமியற்றின. இந்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்தனிஸ்லாஸ் என்ற பாதிரியார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் ‘மத உரிமை’ எனும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதாடினார். ”மதப் பிரச்சாரம் செய்யும் உரிமை என்பது மதமாற்றம் செய்யும் உரிமை அல்ல” என்று கூறிய உச்சநீதி மன்றம் 1977-இல் அவரது வாழ்க்கைத் தள்ளுபடி செய்தது.
”சட்டப்பிரிவு 25(1) வழங்குகின்ற ‘மனச்சாட்சிச் சுதந்திரம்’ என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதேயன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது மதத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது என்பதைக் கடந்து, அடுத்தவரை தன் மதத்திற்கு மாற்றுவது என்ற முயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால், அத்தகைய நடவடிக்கையானது மற்ற குடிமக்களின் மனச்சாட்சிச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.”
எனவே, ”ஏமாற்றியோ ஆசை காட்டியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிசா, ம.பி. மாநில அரசுகள் இயற்றிய சட்டம் செல்லத்தக்கதே என 1977-லேயே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதுதான் மதமாற்ற உரிமை பற்றிக் கடைசியாக வந்துள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பு. இனி, இந்தப் பிரச்சினை குறித்து ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி.சேஷாத்ரி, 5.2.99 அன்று ‘இந்து’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.
”ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன?” ”எடுத்துக்காட்டாக, பிரச்சாரம் செய்து மக்களைக் கூட்டுவது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் எனக்கு வியாதிகள் குணமானது என்று பொய்சாட்சி சொல்லும் நபர்களைக் காட்டுவது, காடுகளில் பழங்குடி மக்களைத் திரட்டி நள்ளிரவு முகாம்கள், விருந்துகள் நடத்தி வீடியோ திரைப்படங்கள் மூலம் மதப்பிரச்சாரம் செய்வது… – மதமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகள் எல்லாம் ‘ஏமாற்று’ இல்லையா?”
”மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்துகள் கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் இவையெல்லாம் ”இவ்வுலக ஆசை”யைத் தூண்டுபவைதானே! இவற்றுக்கும் ஆன்மீக விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?” ”மகாத்மா காந்தியும், அன்றைய ம.பி.காங்கிரசு அரசு நியமித்த நியோகி கமிசனும் தெளிவாகக் கூறியதுபோல, கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய, கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள்; அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்.”
இந்திய அரசியல் சட்டம் பகுதி 370, பொதுவான சிவில் சட்டம் ஆகியவைகள் பல ஆண்டுகள் தீர்க்கப்படாமல் இருப்பதைப் போல்  இந்தியாவிற்குப் பொதுவான மத மாற்றத் தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதும் கானல் நீராகவே படுகிறது. பெருவாரி மக்களான ஹிந்துக்கள் தங்களுக்கு சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அளிக்க வழி செய்யுங்கள் என்று வேண்டும் நிலையில் தான் ஹிந்துக்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசியல் சட்டத்தையே அவமதிப்பதாகும் என்றால் அந்தக் கருத்தையே ஒரு மதவாதக் கொள்கை என்று முத்திரை இட்டுவிடும் ‘சிக்குலர்’ மேதாவிகளும், மீடியாப் பேர்வழிகளும் இந்தியாவில் இருக்கும் வரை தர்மம் தலை குனிந்து இருக்கும் நிலைதான் நீடிக்கும். ‘இந்தியாவின் இயற்கை வளங்களின் முதல் உரிமை சிறுபான்மையினருக்கே!’ என்று வெளிப்படையாக உரைத்த நமது முந்தைய பிரதம மந்திரி மன்மோஹன் சிங்கின் கூற்று இந்திய மக்கள் அனைவருக்கும் சம நீதி என்ற இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமையைத் தவிடு பொடி ஆக்குவதுடன், மக்களிடையே மதத்தின் அடிப்படையில் பேதமையை வளர்க்க வழி வகுக்கும். ஆனால் அவரது கூற்றை எந்த மீடியாவும் விமரிசிக்க வில்லை.