Uncategorized

சுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம். புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம். தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம். தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.

தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம். தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம். இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம். தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.

தேனின் வகைகள்
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், என தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலைகளில் கிடைப்பது மலைத்தேன்.  அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இந்த மலைத்தேன் கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது. மரத்தில், காடுகளில், குகைகளில் கூடுகட்டியிருக்கும் தேன் கூட்டில் இருந்து  கிடைப்பது கொம்புத்தேன்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

மலைத்தேன்
நோய் எதிர்ப்புத் தன்மையானது இது வயிற்றுப்புண், தொண்டைப்புண், தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும். தேன் குளியல் எடுத்து வந்தால் முடி கருமையாகவும், அடா்த்தியாகவும் இருக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்துகிறது. மலைத்தேன் குடித்தால் நரம்பு சம்பந்தமான நோய் வராது. பேதி ஆனவா்களுகக்கு கொடுத்தால் உடனே நிற்கும். இது மலத்தை இறுக்கும் குணமுடையது.

கொம்புத்தேன்
எல்லா மருந்துகளுக்கும் இது ஒரு ஊக்கியாக பயன்படுகிறது.. விளையாட்டு வீரா்கள் சோர்வு அடையாமல் இருக்க இத்தேனை சாப்பிட்டு வரலாம். ஜலதோஷம், காய்ச்சல் அண்டவிடாம் பார்த்துக் கொள்ளும். ஒற்றைத் தலைவலிகாரா்கள் இத்தேனை சாப்பிட்டால் சரியாகிவிடும். வெட்டுக் காயத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். தேன் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும். குறைவாக சாப்பிட்டால் பேதி நிற்கும்.

குறிஞ்சிப்பு தேன்
சா்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஒரு தேனாகும். பெரிய நெல்லிக்காய் இத்தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

வேப்பம்பு தேன்
நோய் எதிர்ப்புத் தன்மையுடையது. சா்க்கரை அளவைக் குறைக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

கதம்பப்பு தேன்
தேனில் தினமும் பல் தேய்த்தால் பல் வெண்மையாகவும், வலிமையாகவும் இருக்கும். உடல் உறுப்பு மற்றும் கல்லீரலை வலிமைப்படுத்துகிறது. கோதுமை மாவு, பன்னீா் கலக்கி முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

சிறு தேன்
கேரளா மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. தேன், குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக ஒரு வருடம் கொடுத்து வந்தால் உடல் உறுப்புகள் வலிமை பெரும். பிற்காலத்தில் நோயின்றி வாழலாம். இது மரப்பொந்து கிணற்று பொந்து சுவா்சந்துகளளில் வளரம் தேன் ஆகும். இதை பொந்து தேன் என்றும் அழைப்பார்கள்.

சூரியகாந்தி புத்தேன்
கசப்பும், புளிப்பும், துவா்ப்பும் கொண்ட தேனாகும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடம்பு இளைக்கவும் குண்டாகவும் தேன் சாப்பிடலாம்.

சதும்பப்பு தேன்
விஷம் முறிவுக்கு உகந்ததேன், பாம்பு, தேள், புரான், பல்லி, வண்டு போன்ற புச்சிகள் கடித்தால் முதலுதவி செய்த உடன் தும்பை செடியை தேனில் கலக்கி கொடுத்தால் உடனே விஷ முறிவு ஏற்படும். உயிர் பிழைக்கலாம். இத்தேதை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் விஷ கடியிலிருந்து தப்பிக்கலாம். உடல் தசைகள் கூடவும் இளைக்கவும் இத்தேனை பயன்படுத்தலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும்.

நெறிஞ்சிப்பு தேன்
இத்தேன் உடன் நெறிஞ்சி முல்லை அரைத்து தேனுடன் கலக்கி உண்டால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனே குணமாகும். இத்தேனை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் (கிட்னி) சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இத்தேனும் நல்ல சுவையாக இருக்கும். உடல் தசைகள் கூடவும், உடல் இளைக்கவும் இத்தேனை பயன்படுத்தலாம். நீரழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும்.

வளா்ப்புத் தேன்
Box Honey சா்க்கரை பாகுவை காய்ச்சி Box-க்குள் வைத்து விடுவார்கள். இதிலுள்ள புச்சிகள் காத்தடிக் காலம், மழை காலம் போன்ற காலங்களில் இதிலுள்ள தேன் புச்சி Box விட்டு வெளியே போகாது. சா்க்கரை பாகையை சாப்பிட்டு அதிலேயே தேன் கட்டும். புச்சிகள் எதை சாப்பிட்டு தேன் கட்டுகிறதோ அதனுடைய தன்மை தான் தேனுக்கு இருக்கும். இது சுகா் பேசன்ட் உண்பது நல்லதல்ல. இதை சூடு செய்வார்கள். தேன் விரைவில் கட்டியாக இருக்கவும். Agmark பாசாகவும் Moister Contain இல்லாமல் இருக்கவும் சூடு பண்ணுகிறார்கள். இதனால் அதில் உள்ள மருத்துவத் தன்மை போய் விடுகிறது. தேன் 42C மேல் சூடு பண்ணக் கூடாது. தேன் சாப்பிடுவதில் சந்தேகம் என்றால் அணுகவும். 

தேனின் மருத்துவ குணங்கள்
நச்சுக் கலக்காத இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடியது தேன் என்று கூறப்பட்டுள்ளது. 
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. 

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை.
தேனை  வெந்நீர்  சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு சரியாகும். துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

ஒரு டீஸ்பூன் அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காய்  தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த தேன் நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால்  ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும். அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும். முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் தேன் நெல்லிக்காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

நாவல் தேன் 
நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. நன்மை செய்யும் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. நாவல் பழ மரங்களின் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் அதிக மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ சக்தி கொண்ட நாவல் பழத்துடன் வைட்டமின் சத்து நிறைந்த தேனும் கலந்து சாப்பிடுவதனால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும். தேனும் தினைமாவும் நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, துளசி, பூண்டு என தேன் வகைகள் பல உள்ளன.  சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை பலவகையாக பிரிக்கின்றனர். tredyfoods.comல் தேனுடன் கலந்த பேரிச்சை, தேன் நெல்லிக்காய், ரோஜா குல்கந்து, துளசி தேன், தேனும் தினைமாவும் கலந்த குக்கீஸ், உலர் பழங்கள் இணைந்த தேன், லவங்கப்பட்டை தேன் என பல வகையில் தேன் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனையாகிறது இதனை  வாங்கி சுவையுங்கள்.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள்
01 உடல் ஆரோக்கியத்திற்கதேன் வழி வகுக்கும் தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் மற்றும் தலை வலி குணமாகும்.
03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தா ல் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்ச ி அதில் தேன் கலந்து சாப்பிட கீழ் வாதம் போகும்.
11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக் குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12 தேனோடு பாலோ எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13 அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும் இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரஇ குணமாகும்.
15 முருங்கைக்காய்ச ் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால் தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18 அதிகாலையிலும் படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19 நெல்லிக்காய்களை த் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய் ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
21 சிறந்த மருத்துவரும்இ மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ஒவ்வொரு நேரமும் உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்” என்று கூறினார் அவர்.
22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம ் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தா ல் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை கால்கள் விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ்இ நிச்சயம் குணம் காண்பார்கள்.
24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது மூட்டுகள் வலிக்காது
25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள் பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால் விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார் கள் கொம்புத்தேன் மலைத்தேன் குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
26 ஆஸ்துமா அலர்ஜி தொல்லைகளிலிருந் து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.
28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
29 சோர்வுற்றநிலை, அதிக வேலை பசியின்மை, அதிக அமிலத்தன்மை பித்தம் சம்பந்தமான தொல்லைகள்
இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல்
மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு
கர்ப்பிணிகளுக்க ு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள்
ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத ் தேன் மிகுந்த பயனுள்ளது.
30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம் பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்க ு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.
33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
34 குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து பெண்களிடத்திலுள ்ள மலட்டுத்தனத்தைத ் தேன் போக்கி விடுகிறது.
35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவம். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன்இ இரண்டு ஸ்பூன் பால்இ கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும். மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும் எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

தேன் குறைந்த அளவு சாப்பிட்டால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு சாப்பிட்டால் மலச்சிக்கலை உண்டு பண்ணும். பேதியை நிறுத்தும். இரத்த சோகையை குணமாக்கும். தூக்கத்தை தரும் நீா் கோவையை சரிசெய்யும். சிறுநீா் கழிவை குறைக்கும். நஞ்சை முறிக்கும். இரத்த அழுத்தத்தை குணமாக்கும். சாப்பாட்டிற்கு பின் தேனுடன் குளிர்ந்த நீா் உடல் எடை கூட்டும். சாப்பாட்டிற்கு முன் வெந்நீா் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும். களைப்பை நீக்க தேன் சாப்பிடலாம். கறந்த பசும்பாலுடன் தேன் கலந்து அருந்தினால் உடல் வலிமை பெறும். உணவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சதை பெருகும். ஆட்டின் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் ஊறும். ரோஜா இதழ் கற்கண்டு ஆகியவற்றை கலந்து ஊற வைத்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். காய்ந்த திராட்சி பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, அழகு பெறும். நாட்டு கோழி முட்டையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும். நீரழிவு நோயும் குணமாகும். கணைய சூட்டினால் சில குழந்தைகள் மெலிந்து காண்பாா்கள். அவா்களுக்கு தினசாி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் கணைய சூடு குறையும். உடல் நலம் வரும். இளநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். தினசாி இரண்டு ஸ்புன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள காமாலை சம்மந்தமான நோய் வராது. செரிமான சக்தி தருவதில் மிகச் சிறந்தது தேன். தேனுடன் இஞ்சி சோ்த்து சாப்பிட்டால் பித்தம் போய்விடும்.

சுத்தமான தேன் எப்படி கண்டு பிடிப்பது (how to identify pure honey).

1.சுத்தமான தேன் எப்படி கண்டு பிடிப்பது பற்றி பார்போம் , ஒரு டம்லர் நீரில் தேன் ஒரு சொட்டு  விடவேண்டும் தேன் ஆனது நேர்ஆக அடிதூரில் பட்டு கரைந்தால் அது நல்ல தேன் 

2.நீயூஸ் பேப்பர் அல்லது காலண்டர் பேப்பர்ரில் ஒரு துளி சுத்த மான தேன் விட்டு பேப்பரை மடித்துபார்த்தால் வெளிபுரம் அல்லது பேப்பர் நமத்து போகாது இது போன்று இருந்தால் அது நல்ல தேன் 

3.குளிர்சாதனப்பெட்டியில் அல்லது குளிர்ஆன பகுதியில் தேன் இருந்தால் அந்த தேன் உரைந்து போக கூடாது 
Uncategorized

இல்லந்தோறும் இருக்க வேண்டிய தேன்

தேன் உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில்உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும் தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.
எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. 
தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் இஞ்சி
ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.
இரத்த சோகையை அகற்ற:
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக் கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. 
தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.
தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும்.  பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும். தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.
சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.
தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.
தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறுஎடுத்துரைக்கிறது.
தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப் பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.
டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்ட போது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப்பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.
முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 
நல்ல தேனை கண்டறிவது எப்படி? 
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.
வணிக நோக்கத்துக்காக சில நிறுவனங்கள் தேனில் வெள்ளை சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து வருகின்றன. தங்களது வியாபாரத்தைப் பெருக்க, இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தனியார் நிறுவனங்கள் சாமர்த்தியமாக மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கலப்படங்களின் விளைவாக தேனுக்கான மகத்துவமும், மருத்துவ குணமும் இல்லாமல் போகிறது. மேலும் தேனில் மற்ற சில கலப்படங்களும் நடக்கின்றன. இந்தக் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி, நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். 
* ஒரு  சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும்.  தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
* சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது. 
* சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால்,  சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை  அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.
* தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும். 
* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். 
* சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக  உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும்.