அழகு குறிப்புகள், உணவு - Food, கட்டுரைகள், மருத்துவம் - Medical

வெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு

வெண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்த ஒன்றாகும், எனவே இதனை அதிகம் சாப்பிட்டால் உடற்பருமன் அதிகரிக்கும், அதுமட்டுமின்றி இதய நோயாளிகள் இதனை தவிர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.
வெண்ணெய் மசாஜ்
வெண்ணெய் மசாஜ்சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வெளியிடங்களுக்கு நாம் செல்லும்போது ஏற்படும் சுற்றுச்சூழலால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தடுக்கிறது. அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். இதுபோன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.’

வெண்ணெய் அதிகம் சேர்த்தால், ‘பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே, கவனம் தேவை!’

அழகு குறிப்புகள்
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

Uncategorized

சரும பாதுகாப்பு

பருவநிலையில் மாற்றம் ஏற்படும் போது, உங்கள் சருமமும் மாறுகிறது. குறிப்பாக கோடை மற்றும் குளிர்காலத்தின் போது, நமது சருமம் வறண்டு போய் விடுகிறது. எந்த பருவநிலையாக இருந்தாலும் சரி, வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள் வருமாறு .

கோடைக் காலத்தில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு லைட்டான, பிசுபிசுப்பு இல்லாத சரும மாய்ஸ்ட்ரைசர் மட்டுமே, இது உங்கள் சருமத்தை மிகவும் ஸ்டிக்கியாக இல்லாமல் இளக்கமாகவும், நீர்ச்சத்துடனும் வைத்திருக்கவும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது பாண்ட்ஸ் சில்க் க்ரீம் மாய்ஸ்சுரைசர், இது ஒரு 24-மணிநேர மாய்ஸ்ச்சர் லாக் ஃபார்முலா கொண்டது. இதனால் உங்கள் சருமம் வறண்டு போவது தடுக்கப்படுவதோடு, கோடைக் காலத்தில் உங்கள் சருமத்தை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. ஆனால், அந்த முயற்சிகளில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் வரும் மாடல்களைப் பார்த்து மயங்கி, புதுப் புது கிரீம்களை உபயோகிப்பதில் பயனில்லை. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம். 

சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும். 

நன்கு பழுத்த தக்காளியின் சதைப் பகுதியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர், எட்டு சொட்டு தேன் கலந்து நன்கு கலக்கி, டேன் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிட்டால், நிறமாற்றம் பிரச்னையைச் சரிசெய்து விடலாம். 
சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம். 
சந்தனத்தைச் சிறிது இழைத்து, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து, டேனிங் இடத்தில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். வெயிலினால் ஏற்படக்கூடிய மற்ற சரும பிரச்னைகளும் வராது. 

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது, அதனால் தான் உங்களுக்கு அதிகப்பட்ச பராமரிப்பு, மாய்ஸ்சுரைசிங் மற்றும் ஊட்டத்தை கொடுப்பதில் மிக சிறப்பானதாக பாண்ட்ஸ் கோல் க்ரீம் விளங்குகிறது. வறண்ட சருமம் கொண்ட மனிதர்களுக்கு இது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ‘‘குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் சிலருக்கு  இயற்கையாகவே வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும்.  பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்னை  வரலாம். இதற்கு தண்ணீர் நிறைய குடிப்பது, நல்ல சோப்பை பயன்படுத்துவது, முடிந்தால் குளித்தபிறகு மாய்ஸ்சரைஸர்  பயன்படுத்துவது  போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.’’

‘‘வைட்டமின் டி’ யைப் பொறுத்தவரை சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல.  எனவே, ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அதற்காக  பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும்  என்பதையும் மறக்கக்கூடாது.’’

‘‘இது தனிநபரின் உடல் அமைப்பைப் பொறுத்தது. சிலருக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தாலும் அது ஒரு  பிரச்னையாக இருக்காது. அழகியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் சின்ன சுருக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக  மருத்துவரைத் தேடி வந்துவிடுவார்கள். முடி கொட்டுகிற பிரச்னைக்குக்கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு  விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன்  கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.’’
‘‘தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வரும்போது நன்றாக முகம் கழுவிக் கொள்ள  வேண்டும். முடிந்தால் மைல்டு ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம். ஸ்க்ரப் உபயோகப்படுத்துவது சருமத்தை  சேதப்படுத்தும். அதனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. கருமையடைந்த இடத்தைத் தேய்ப்பதால் இன்னும் அதிகமாகக்  கருமையடையும். ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து அழுத்தமாகத்  தேய்க்கக்கூடாது. மென்மையாக மசாஜ் செய்வதுபோல் தேய்ப்பதுதான் முடிக்கு பாதுகாப்பு!’’

சருமம் பளபளப்பாக
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.


சருமம் மிருதுவாக

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

வறண்ட சருமத்தை பாதுகாக்க
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவுஎடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

கருமை நீங்க

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி. தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.

முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.
வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

மேலும் சில முறைகள்

அனைவருக்குமே அழகாகவும், வெள் ளையாகவும், முகம் பளபளப் பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண் டு.

இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங் கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.

முகத்தை கழுவுதல்
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதா ல் முகம் பொலிவின்றி காணப் படும்.
எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களி ன்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தி ல் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு கள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கை யாகவே அதிகரிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொரு ள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல் லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத் தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத் தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலி வோடு மின்னும்.

பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடிய வை.
எனவே இத்தகைய பழங்களை சாப்பி டுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூரியக் கதிர்களின் தாக்கம்
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.
எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்தி ற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.
குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.

தயிர் மசாஜ்
தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

கிளின்சிங்
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனை த்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப் படும்.

தண்ணீர் குடிக்கவும்
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக் கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உடற்பயிற்சி
முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டு மெனில் மேற்கூறியவற்றுடன் தினமும் கா லையில் எழுந்து லேசான உடற்பயிற்சிக ளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.