உணவு - Food, கட்டுரைகள், செய்தி - News, பொது, மருத்துவம் - Medical

பேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet

பேலியோ டயட்.jpgஉலகம் முழுவதிலும் தற்போது பரவியிருக்கும் பேலியோ டயட் என்ற உணவு முறையால் மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸ்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகில் எத்தனையோ ‘டயட்’ முறை கள் உள்ளன. இயற்கை உணவு, சைவ உணவு, பத்திய உணவு, பழங்கள் உணவு, காய்கறி உணவு, எண்ணற்ற இனங்கள், மதம், ஜாதிகளின் உணவு, சாமியார்கள் கூறும் உணவு எனப் பல விதங்கள் உள்ளன. இதில் ‘உணவே மருந்து; மருந்தே உணவு!’ என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். அந்த வரிசையில் தான் பேலியோவும் பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பேலியோ ஏற்படுத்திய மாற்றம் வியப்பானது. பேலியோ உணவு முறை விஞ்ஞானப்பூர்வமானதுதான். ஆனால், இதில் பெரிய அளவு ஆய்வுகள் நடப்பதில்லை. ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பேலியோ உணவு முறையில் இருக்கலாமா என்பது விவாதத்துக்கு உட்பட்டது. இது சார்ந்து பலருடைய கருத்து, சரியான உடல் எடையை நாம் அடைந்தவுடன் அல்லது நம் உடல் ஆரோக்கியம் அடைந்தவுடன், பேலியோவைக் கைவிட்டுவிட வேண்டும். சக்கை உணவைத் தவிர்த்த அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள், குறைவான சர்க்கரை உள்ள பழங்கள், அளவான புரதம்-கொழுப்பை உட்கொள்ளும் உணவு முறைக்குக் மாற வேண்டும் என்பதுதான். நம் உடல் உறுப்புகள் இளமையில் இருப்பது போன்றே, முதுமையிலும் இருப்பதில்லை. நாளாக நாளாக எளிமையான உணவை செரிக்கக்கூடிய தன்மையையே ஜீரண உறுப்புக்கள் பெற்றிருக்கும். அப்போது கொழுப்பு அதிகமுள்ள உணவு பிரச்சினை யாகும் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.

சர்க்கரை வியாதி, உயர் குருதி அழுத்தம் போன்ற நோயின் காரண கர்த்தா எம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத உடல் எடை. உடல் எடையின் அதிகரிப்பால் பல ஆரோக்கிய கேடுகள் சொல்லாமலேயே வருகின்றன. இதற்கு மருத்துவர்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அவர் ஒரு உணவு கட்டுப்பாட்டு பட்டியலை முன்வைப்பார். அதனை நீண்ட காலம் பின்பற்றினால் தான் உடல் எடை கட்டுக்குள் வரும். ஆனால் மக்கள் உடனடியாக உடல் எடை குறையவேண்டும் என்று விரும்பி, பேலியோ டயட்டை பின்பற்றுகிறார்கள்.

இதனால் பலருக்கு உடல் எடை குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆரோக்கியமானவுடன் வலியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மருத்துவ துறையினர் இந்த பேலியோ டயட் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பேலியோ டயட் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்வைத்தாலும், அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலை கழக விஞஞானிகள், இதனை பரிசோதித்து இந்த டயட்டை பின்பற்றுவதால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கடந்து, இதன் வெற்றிக்கு ஒரு காரணம் உள்ளது! இதைக் கடைப்பிடித்த யாரும் இதுவரை தோல்வி அடையவில்லை. அப்படியென்ன இதில் சிறப்பு என்றால் ஒரே வரியில் பதில் சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவுகளே பல நோய்களுக்குக் காரணம். அந்த உணவை நிறுத்தும் போது, நோயும் நின்று போகிறது. எரிவதை அடக்கினால், கொதிப்பது நிற்கும்!

உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?
1. மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்)
2. கொழுப்புச்சத்து (ஃபேட்)
3. புரதம்
4. வைட்டமின்கள்
5. நார்ச்சத்து
6. தாதுஉப்புக்கள் (மினரல்ஸ்)
7. நீர்
8. நுண்ணூட்டச்சத்துக்கள்

உணவுகள்

 • கேரட், கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கத்திரிக்காய், பச்சை வெங்காயம் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறிகள்.
 • அவகேடோ, லெமன்
 • கோழி முட்டை மற்றும் வாத்து முட்டை.
 • பாதாம் பருப்பு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, வால்நட்ஸ், மற்றும் முந்திரி.
 • சத்தான எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய்.
 • தாவரம் உண்ணும் விலங்கு-பறவைகளின் இறைச்சிகளான கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, இறால், முயல் கறி, ஆட்டு இறைச்சி, ஈமு கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் காடை இறைச்சி.
 • கடல்வாழ் உயிரினிங்களான மத்தி மீன், வாளை மீன், நண்டு, இறால், சிப்பி மீன் போன்றவை.

பேலியோ டயட்டில் தவிர்க்கவேண்டிய உணவுகள்…

 • பால் சார்ந்த உணவுகளான சீஸ், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம், இனிப்பு பதார்த்தங்கள்.
 • பழச்சாறு வகைகளான ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாம்பழ ஜூஸ்.
 • பிரெட், ஓட்ஸ், தானியங்கள், கோதுமை மற்றும் சோளம்.
 • சோயாபீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை.
 • இயற்கை இனிப்பூட்டிகள்.
 • உப்பு பதார்த்தங்கள்.
 • ஸ்நாக்ஸ் வகைகளான சிப்ஸ், பிஸ்கெட்ஸ்.
 • ஊட்டச்சத்து பானங்கள்.
 • மது.
 • இனிப்பு மிட்டாய் வகைகள்.

காலை உணவு: 100 கிராம் பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.

மதிய உணவு: நான்கு முட்டை (மஞ்சள் கருவுடன் உண்ண வேண்டும்). ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.

மாலைச் சிற்றுண்டி: ஒரு கிளாஸ் பால் அருந்த வேண்டும். கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். காய்கறிகளை சாலடாகவோ, வாணலியில் நெய் விட்டு வதக்கி எடுத்தோ உண்ணலாம்.

இரவு உணவு: இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி போன்றவற்றைப் போதுமான அளவு உட்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முட்டை, இறைச்சி போன்றவற்றை வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். பேலியோவில், கொழுப்பே பிரதானமான எரிபொருள். எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது. கொழுப்புக் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கன், லீன் கட் என்று சொல்லக்கூடிய உணவுகளைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ண வேண்டும். உணவுகளை எண்ணெயில் பொறிப்பதைத் தவிர்த்து, வேகவைத்தோ, கிரில் செய்தோ, அவன், வாணலியில் சமைத்தோ சாப்பிடலாம்.
சமையலில் நெய், வெண்ணெய், ஹைட்ர ஜனேட் செய்யப்படாத செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், வெண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

பேலியோ நன்மைகள்!

உடல் பருமன், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சொரி யாசிஸ், உடம்பு வலி, முட்டி வலி, யூரிக் ஆசிட் பிரச்சினை, ஆஸ்துமா பிரச்சினை, கிட்னி பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, மகளிர் தொடர்பான நிறைய பிரச்சினைகள், இரத்தம் குறைவு, கால்சியம் குறைவு, இரும்புச் சத்துக் குறைவு, வைட்டமின்-டி குறைவு, மாரடைப்பைத் தடுத்தல், புற்று நோயைத் தடுத்தல், வலிப்பு வராமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகிறது. பெரும்பாலான நோய்களை அறவே குணமாக, சில நோய்கள் கட்டுக் குள் வருகிறது.

பேலியோ டயட்’ உணவு முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கும் அதேநேரம், அதிலுள்ள பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை:

ஆதிமனித உணவு முறையில் அதிக அளவு இறைச்சியை உட்கொள்வதால் சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரின் அமில காரச் சமநிலை பாதிக்கப்படலாம். சிட்ரிக் அமிலம் அதிகமாக வெளியேறும். அதனால் கல்லடைப்பு (Hypocitraturia) வரும். (ஆதாரம்: American journal kidney disease, 2002 Aug, 265-274)

சிறிது சிந்திப்போம்.

நமக்கு உடல் எடை ஏறுவதும் இதே உணவுகளை உண்பதால்தானே? இறைச்சிக்காக கொழுக்க வைக்கப்படும் பன்றிகளுக்கும், மாடுகளுக்கும் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவுதானே நமக்கும் ஆரோக்கிய உணவு எனும் பெயரில் வழங்கப்படுகிறது? பிறகு எப்படி எடை குறையும்?

ஆக நவீன டயட் முறைகளும், நவீன ஆரோக்கிய உணவுகளும், நாட்டுப்புற ஆரோக்கிய உணவுகளுமான கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்ற எவையுமே நம்மை ஆரோக்கியமாக இருக்க வைப்பதில்லை. வியாதிகள் இன்றி வாழும் ஒரே மனிதர்கள், பழங்குடி மக்களே. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் உடலுழைப்பு மட்டுமே எனக்கூற முடியாது.

நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நாள் முழுக்க கைவண்டி இழுப்பவர்களையும், வயல்வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்களையும்கூட நாகரிக மனிதனின் வியாதிகளான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், ரத்தசோகை, மாலைக்கண் வியாதி போன்றவை தாக்குகின்றன.

ஆக, இவ்வியாதிகள் எல்லாம் குணப்படுத்த முடியாத வியாதிகளோ அல்லது குணப்படுத்த முடியாமல் மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய வியாதிகளோ அல்ல. பலரும் ‘நாற்பதைத் தாண்டினால் எல்லாருக்கும் சுகர் வரும்’ ‘ஆறுமாதக் குழந்தைக்குக் கூட டைப் 2 டயபடிஸ் இருக்கிறது’ எனச் சொல்லி ஆறுதல் அடைவார்கள். ஆனால் டைப் 2 டயபடிஸ் வந்திருக்கும் ஆறுமாதக் குழந்தை என்ன சாப்பிடுகிறது எனப் பார்த்தால் அது புட்டிப்பாலாக இருக்கும். புட்டிப்பாலில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் அதிலும் சர்க்கரையும், அரிசியும், கோதுமையும், சோயாபீன் ஆயிலும், செயற்கையான வைட்டமின்களும் இருக்கும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பிள்ளைகளுக்கு டைப் 2 டயபடிஸ் வராது.

இதற்கான தீர்வு: இறைச்சி உணவு உட்கொண்டால் சித்த மருத்துவத்தில் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்வது அல்லது குடம்புளி (Hydroxy citrate) பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. இதன்மூலம் அதிகமான சிட்ரிக் அமிலம் வெளியேறுவது தடுக்கப்பட்டு, கல்லடைப்பு உருவாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு வழிமுறை குறித்து ஆதிமனித உணவு முறை எதையும் குறிப்பிடவில்லை.