கட்டுரைகள், பொது

உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று

உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

வறுமை ஒழிப்புத் தினம் 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

உலக வறுமை ஒழிப்பு தினம்இந்நிலையில் உலகில் எதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்றார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக். 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. இந்நாள் 1987ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

உணவு ,உடை, வசிப்பிடம், சுத்தமான நீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் பெறும் மரியாதை என்பன வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதாக அமைக்கின்றது. இவற்றை இழந்தவர்களையே வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களாக கணிக்கின்றோம்.

உலக மக்கள் தொகையில், 129 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 68.7 சதவீதம் பேர், 100 ரூபாய் வருமானத்தில் வாழ்கின்றனர் என 2008ல “உலக வங்கி’ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்ற முடியாது. இப்போதிருந்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் வறுமைக் கோட்டில் வசிப்பதை தவிர்க்கலாம். கல்வியறிவே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. உலகில் 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா, வும், 2015ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசுகளுடன் மக்களும் முயற்சி எடுத்தால், ஏழ்மை நிலையை முடிந்தளவு குறைக்கலாம்.

இதனை இல்லாதொழிக்க விவசாயத்தை அதிகரித்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து நாட்டில் வறுமை நிலையினை குறைத்துக் கொள்ளலாம்.