தீவிரவாதம், Uncategorized

தீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை ‘தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்’ என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது. இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்.”

“இங்கு கிறிஸ்தவ தீவிரவாதம் கிடையாது. யூத தீவிரவாதம் கிடையாது. அத்துடன் முஸ்லிம் தீவிரவாதமும் .அனைத்து மக்கள் மற்றும் மதங்களில் வன்முறை¬மிக்க தனி நபர்கள் உள்ளதாகவும் அவர்களே தீவிரவாதத்துக்கு காரணம்.

கிறிஸ்தவ நாடுகளுக்கும் மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போர்கள் தீவிரவாதமாக பார்க்கப்பட கூடாது என்று பிரிட்டனின் முன்னாள் தலைமையமைச்சர் டேவிட் கேமருன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சிறியதொரு பிரிவை அழித்தோழிக்கும் நடவடிக்கைதான் இதுவென அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை விமர்சித்த கேமருன், இஸ்லாமிய மதம் பற்றிய திரிக்கப்பட்ட பார்வையை கொண்டுள்ளோருக்கு எதிரான போர் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் கருத்துப்படி, மேற்குலக கிறிஸ்தவ நாகரீகத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கையாக இது தெரிகிறது. இந்த பார்வை மிகவும் தவறானது என்று கேமருன் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக பொரும்பான்மையினர் போர் நடத்தி வரும் நிலையில், சிறுபான்மை எண்ணிக்கையினர் மதத்திற்கு எதிரான திரிக்கப்பட்ட பார்வையை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனை சமாளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கேமருன் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: “இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செterrorயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது”. ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும்,

1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும்
2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).

ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது “எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்”, இஸ்லாமியர்கள் சொல்வது போல, “அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்” என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!.

தீவிரவாதத்திற்கு அதிகம் சம்பந்தமே இல்லாத இரான் நாடு மீதும், இராக் நாடு மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது கிறிஸ்தவ அமெரிக்கா. இது ஏன்?

அமெரிக்கா மற்றும் பிற கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகளுக்கு தங்கள் ஆயுதங்களை விற்க இது ஏதுவாக உள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாமியர்களை அடியாட்கள் போன்று பயன் படுத்தி இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இடையே பிளவை பெரிதுபடுத்தி மேலும் ஆயுதங்கள் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பஞ்சாயத்து செய்துகொண்டே தங்களைத் தலைமை இடத்தில் தக்க வைத்துக்கொண்டு உலகை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் சௌதி அரசருக்கும் நாட்டுக்கும் அனைத்துவகை ஆயுதங்களோடு தங்களின் முப்படைகளையுமே கொடுத்து மிகவும் தாராளமாக எதோ ஓர் வள்ளல் போல உதவுகிறார்கள் மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகள்.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்.

2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.

3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்

4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik…etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,  பயங்கரவாதம்!

இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்…

1) 1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால். சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர், அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2) 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

3) 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

4) 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

5) 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6) 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்! இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

8)1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9) முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்..?

10) 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11) 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

12) இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13) அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

14) 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

15) நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16) பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

17) 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

18) 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.

19) அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

20) 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

21) 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

terror2மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, “தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்”. கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது “உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்” என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.

ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் தன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான்.

மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள்.