Uncategorized

To know them, Our MP’s see the given link

பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம். 
http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html
பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம்.